உயர்ந்த செல்வாக்கு மிக்க வாழ்வு தரும் தர்மகர்மாதிபதி யோகம்!

80

உயர்ந்த செல்வாக்கு மிக்க வாழ்வு தரும் தர்மகர்மாதிபதி யோகம்!

இவனை மாதிரி வாழனும் என்று நம்மில் பலருக்கு ஒரு சிலரைப் பார்க்கும் போது ஏக்கமாகவும், ஆசையாகவும் இருக்கும். பூமியில் பிறந்த அனைவரும் எல்லா சௌகரியங்கள் அனுபவிப்பது இல்லை. ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் என்று ஒரு சில பிறவிகள் நமக்கு மத்தியில் பிறந்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை தரும் ஜோதிட ரீதியான யோகம் தான் தர்மகர்மாதிபதி யோகம். ஜோதிடத்தில் 4, 7, 10 ஆம் வீடுகளை கேந்திரங்கள் எனவும், 5 & 9 ஆம் வீடுகளை திரிகோணங்கள் எனவும் கூறுவார்கள். இதில் லக்னம் கேந்திரம் மற்றும் திரிகோணம் என்று இரண்டுக்கும் பொதுவானது.

தர்ம ஸ்தானம் என்று கூறப்படும் 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதியும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதியும் தொடர்பு கொண்டால் ஏற்படும் யோகம் தான் இந்த தர்மகர்மாதிபதி யோகம். அதாவது தர்ம ஸ்தானம் ஒருவரின் அதிர்ஷ்டத்தை குறிக்கும், கர்ம ஸ்தானம் நாம் செய்யும் தொழில் எனப்படும் நமது கர்ம செயலை குறிக்கும் எப்பொழுது அதிர்ஷ்டம் நமது செயலுக்கு உதவி புரிகிறதோ அப்பொழுது அது ஜாதகருக்கு மிகப்பெரிய நன்மைகளை தரும் அமைப்பாக மாறி விடுகிறது. எல்லா யோகங்களுக்கும் என்று பிரத்யேகமான விதி மற்றும் விதி விலக்குகள் உள்ளதை போல இதற்கும் உள்ளது.

இந்த பதிவில் தர்மகர்மாதி யோகம் எந்த நிலையில்? என்ன பலன்கள் தரும்? என்பதை பார்ப்போம். உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? உங்கள் ஜாதகத்தில் என்ன பலன்கள் நடந்து கொள்கிறது என்பதை இந்த கட்டுரையின் ஜோதிட ஆசிரியர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக விளக்கங்கள் குறைந்த கட்டணத்தில் தெளிவான பதில்களை பெறுங்கள்.

தர்மகர்மாதிபதி யோகத்தின் நுணுக்கங்கள்:

  1. ஜாதகருக்கு 9 ஆம் மற்றும் 10 ஆம் அதிபதிகள் ஒன்றாக இணைந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தாலோ இந்த யோகம் பலன் தரும். இந்த யோகத்தின் பலனை அனுபவிக்க ஜாதகருக்கு அவர்களின் தசா முக்கியமாக வர வேண்டும். அந்த தசா வரவில்லை என்றால் எந்த யோகமும் அதன் பலனை தராது என்பது ஜோதிட அடிப்படை.
  2. ஒன்பதாம் மற்றும் பத்தாம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆகி கொள்வது அல்லது ஒருவர் வீட்டை மற்றொருவர் பார்ப்பது இந்த யோகத்தை வேலை செய்ய வைக்கும். இந்த 9 மற்றும் 10 ஆம் அதிபதிகள் நண்பர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த யோகம் விருச்சிகம், கடகம், கன்னி மற்றும் மீன லக்கினத்திற்கு முழுமையான நன்மைகளை செய்யும் தன்மை கொண்டது. இந்த லக்னத்தின் 9 மற்றும் 10 ஆம் அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாக இருப்பார்கள். இதில் விருச்சிக லக்கினம் ஒரு படி மேலே சென்று விடும். ஏனென்றால் இந்த லக்கினத்தின் தர்ம மற்றும் கர்ம அதிபதிகளாக வரும் சூரியன் மற்றும் சந்திரன் அந்த ஒரு வீட்டுக்கு மட்டும் ஆதிபத்தியம் தரும் கிரகங்கள் என்பதால் இந்த யோகம் கொண்ட விருச்சிக லக்கினத்தை கொண்டவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.
  3. நமது முன்னோர்கள் அந்த காலத்தில் இந்த யோகம் இருப்பவர்களுக்கு அவர்களின் தந்தை எந்த குலத்தை சார்ந்தவரோ அந்த குலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பார். அதன்படி அந்த தலைமை பொறுப்பு அவரின் தந்தையின் காலத்திற்கு பிறகு அந்த மகனுக்கு கிடைக்கும் பாக்கியம் ஏற்படும் என்று சொன்னார்கள். இந்த கால கட்டத்தில் இந்த யோகம் கொண்டவர்கள் தந்தையின் தொழிலை காப்பாற்றுவார்களாகவும் அல்லது தங்களுக்கு என்று ஒரு தொழில் ராஜ்ஜியத்தை உருவாக்கி தங்களின் சந்ததிகளுக்கு அதை விட்டு செல்வர்களாகவும் இருப்பார்கள்.
  4. இந்த யோகம் கொண்டவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும், ஆன்மீக திருப்பணிகள் செய்பவர்களாகவும் தங்களின் சமூகத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களாவும் விளங்குவார்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறேன்.