எந்த ராசிக்கெல்லாம் இந்த அட்சய திருதியை அமோகமாக இருக்கும்?

58

எந்த ராசிக்கெல்லாம் இந்த அட்சய திருதியை அமோகமாக இருக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த 3 நாட்களில் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என்று அழைக்கிறோம். அட்சயா என்பதற்கு எப்போதும் குறையாதது என்பது பொருள். திருதியை என்பதற்கு மூன்றாவது என்று பொருள். இந்த நாள் தங்கம், வெள்ளி, வைரம், விலைமதிப்பற்ற கற்கள், வீடு மனைகள் வாங்க உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். நகைகள் வாங்குவதைத் தவிர திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்வதும் மங்களகரமானது என்று சொல்லப்படுகிறது.

இந்த நாளில் நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை என்று ஏதாவது தானம் செய்ய தானம் இன்று கொடுக்கப்படும் பொருட்கள் உங்களுக்கு பெருகிக் கொண்டே இருக்கும்.

இந்த ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் தேதியான இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி நாளை காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அட்சய திருதியை நாளான இன்று காலை 5:49 மணி முதல் பிற்பகல் 12:13 முகூர்த்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தங்கம் வாங்க ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கடைக்கு சென்று தங்க நகையோ, நாணயமோ வாங்கலாம்.

அட்சய திருதியை நாளில் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும். ஆகையால் இந்த நாளில் நகைக் கடைக்கு சென்று தங்க நகை அல்லது நாணயம் வாங்குவது வழக்கம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் வளமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்க முடியாதவர்கள் அரிசி, கல் உப்பு, மஞ்சள் ஆகியவற்றை கூட இன்று வாங்கலாம்.

அரிசி வாங்கினால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பஞ்சம் வராது என்பது ஐதீகம். உப்பு வாங்கினால், திருஷ்டி விலகும். மஞ்சள் வாங்கினால் வாழ்க்கையில் மங்களம் உண்டாகும். மங்களகரமான சுப நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. தான தர்மங்கள் செய்தால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்.

இந்த அட்சய திருதியை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்:

இந்த ராசிக்கார்ர்களுக்கு அட்சய திருதியை சிறப்பானதாக இருக்காது. பண ஆதாயங்கள் இருந்தாலும், தேவையற்ற பயணங்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் சண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ரிஷபம்:

உங்களது வாழ்க்கையில் அமைதியின்மை உணர்வு இருக்கும். நிதி நிலைமை இருந்தாலும், அதன் மூலம் சிறிய அளவிலான பயன்கள் கிடைக்கும்.

மிதுனம்:

இந்த அட்சய திருதியை உங்களுக்கு துரதிர்ஷ்டமானதாக இருக்கும். ரத்த அழுத்தம், தலைவலி, மூட்டுவலி என்று உடல்நல பிரச்சனைகள் வரலாம்.

கடகம்:

நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு வெகுமதியும் கிடைக்காது.

சிம்மம்:

இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மேலும், உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். சிலவற்றால் நீங்கள் பிரபலம் அடைவீர்கள்.

கன்னி:

உங்களுக்கு சிறிய உடல் நலப் பிரச்சனைகள் அல்லது காயங்கள் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

எதிர்பாராத வகையில் அசம்பாவிதம் ஏற்படக் கூடும். இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கூடும். கூட்டத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.

விருச்சிகம்:

தீய எண்ணங்களின் தாக்கம் இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அவசப்பட்டு எந்த முடிவு எடுக்க கூடாது.

தனுசு:

இந்த நாளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருந்தாலும் உணவு தொடர்பான சிறிய பிரச்சனைகள் வரலாம். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நன்மை இருக்கும்.

மகரம்:

வேலை அல்லது வியாபாரம் தொடர்பான சில நல்ல செய்திகள் இருக்கும். உங்களது காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் எர்படும்.

கும்பம்:

இந்த நாளுக்குப் பின் உங்களது வீட்டில் சில சீரமைப்புப் பணிகளை தொடங்குவீர்கள். இந்த வருடம் ஒட்டு மொத்தமாக நல்ல நாளாக இருக்கும். வருடம் முழுவதும் உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் இருக்கும்.

மீனம்:

இந்த அட்சய திருதியை நாளில் நிதி ஆதாயங்கள் இருக்கும். அனைவருடனும் அன்பான உறவுகள். உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.