எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் ஒருவன் அதிர்ஷ்டசாலி தெரியுமா?

166

எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் ஒருவன் அதிர்ஷ்டசாலி தெரியுமா?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம், வீட்டை கட்டிப் பார், திருமணத்தை முடித்துப் பார், கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் முன்னோர்கள் வகுத்து வைத்த பழமொழி. பழங்காலத்தில் எல்லாம் சின்ன வயதிலேயே பெண்களும் சரி, ஆண்களும் சரி திருமணம் செய்து கொண்டனர். அதோடு, உறவுக்கார பெண்ணையும், ஆணையும் திருமணம் செய்தனர். அதோடு, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தனர்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் என்னதான் காதலித்து திருமணம் செய்தாலும் சரி, பெரியோர்களால் நிச்சயம் செய்து திருமணம் செய்தாலும் சரி, அவர்களால் பல வருடங்கள் வரை ஒற்றுமையாக வாழ முடிவதில்லை. ஏதேதோ, பிரச்சனை காரணமாக நீதிமன்றம் வரை செல்கின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் ஒருவன் அதிர்ஷ்டசாலி என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

காம சாஸ்திரத்தின் படி இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் தான் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். சாஸ்திரங்களில் திருமணம் மற்றும் கலவி பற்றிய தகவல்கள் மற்றும் பொருத்தங்களை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டது தான் காம சாஸ்திரம். உண்மையில், காம சாஸ்திரம் என்பது திருமண பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அறிய உதவும் ஒரு புத்தகமாகும். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதையெல்லாம் அறிந்து கொள்ள இந்த புத்தகமானது உதவும். அதன்படி, ஒருவர் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவர் தான் உண்மையில் அதிர்ஷ்டசாலி என்பது குறித்தும் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படுகிறது.

குறிப்பு 1:

மனைவியாக வரக்கூடிய ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்திற்கு இணையான அந்தஸ்துள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், பொருளாதார ரீதியில் இல்லை. பழக்க வழக்கம், கௌரவம், புகழ், மாண்பும் இருக்குமென்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு 2:

அந்தப் பெண் நிச்சயமாக அறிவில் சிறந்தவளாகவும், உலகில் நடக்கும் சம்பவங்களை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும். பெண்ணின் கல்வியும், அறிவும் சமூகத்தின் மீதான அக்கறையை காட்டும்.

குறிப்பு 3:

ஒரு பெண்ணானவள் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றியும், சுற்றுப்புறத்தைப் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி உயர்வு, தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் பண்புடன் பழக வேண்டும்.

குறிப்பு 4:

ஒரு பெண் தான் சார்ந்த மதத்தை மதிக்க வேண்டும். அதன் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை புறந்தள்ளாமல் இருக்க வேண்டும். தன்னுடைய சமூக மற்றும் குடும்ப பொறுப்புகளை தட்டிக் கழிக்க கூடாது.

குறிப்பு 5:

பெண்ணின் ஆன்மா மிகவும் புனிதமானது. பணத்தை சேமித்து வைத்து தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் லட்சுமி தேவியாக இருப்பவள் பெண். இனிமையான, தூய்மையான புன்னகையுள்ள பெண் உங்களுக்கு மனைவியாக கிடைத்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.

குறிப்பு 6:

அனைத்து நன்மை, தீமைகளையும் கற்று அறிந்த ஒரு பெண் அனைத்து நியாயத்தையும் அறிந்தவர். அவள் தான் கணவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவாள்.

குறிப்பு 7:

உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்த ஒரு பெண் மிகவும் பொறுமைசாலியாக இருப்பாள். அவர்கள் குழந்தைகளை சிறப்பாக பார்த்துக்கொள்வார்கள். உறவுகளையும், உரிமைகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டமாட்டார்கள்.

குறிப்பு 8:

தன்னுடைய அன்பு மற்றும் ஆசைகளை வெளிப்படையாக கூற தெரிந்த பெண் கணவனின் அன்பை எளிதில் பெற்று விடுவார்கள்.

குறிப்பு 9:

எப்போதும் வயதில் மூத்தவர்களை மதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். அவர்களது, அறிவுரைகளையும், அனுபவங்களையும் ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும்.

குறிப்பு 10:

எப்போதும், கடினமான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் வலிமையான மனம் கொண்டவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து எப்படி குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்க வேண்டும்.