எம தூதர்கள் வராது இருக்க என்ன செய்ய வேண்டும்?

42

எம தூதர்கள் வராது இருக்க என்ன செய்ய வேண்டும்?

யாருமே செய்ய முடியாத அளப்பறியா இறையின் கருணையை செல்படுத்தும் எம தூதர்களை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அவர்கள் வராது இருக்க ஏன் எதையாவது செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டும்?

எம தூதர்கள் என்று சொல்வதை கடந்து, ஆன்ம விடுவிப்பாளர்கள் என்று சொல்லலாம் தானே. இந்த ஆன்மாவுக்கு இது தான் கூடு? என்ற நிலையற்ற கூட்டில் சிக்கி, அதனோடு பந்தப்பட்டது மட்டுமே உறவு என்ற சிறுமையில் தவித்து. இதுவால் இதுமட்டுமே முடியும் என்ற மாயா போர்வையை களைந்து…இப்பிரிய பஞ்சமே உன் கூடு தான்…

அந்த பிரபஞ்சத்தையே தன்னகத்தே கொண்ட நாயகனே உன் மெய்யுறவு எல்லையில் சிக்கித்தவிக்க ஏதுமில்லை, எல்லையற்ற தன்மையில் சுதந்திரமாக இரு….என்று இறைவனின் பெருங்கருணையின் வெளிப்பாடாக, அதை செயல்படுத்த வந்த கருவிகளே அந்த எம தூதர்கள் என்ற ஆன்மவிடுவிப்பாளர்கள் அவர்களை வணங்கி…என்னையும் ஓர் பொருட்டாக மதித்து, “போதும்டா நீயே விரும்பி சிக்கி கொண்ட விருப்ப சிறை” என்று உன் ஆன்ம விடுப்பை அறிவுறுத்தி..

“வா டா என்னோடு என்றும்! எப்போதும்! உருப்படாதே பேரானந்தமாக இருப்போம்” என்ற நிலைக்கு அழைத்து செல்ல இறைவனால் பணிக்கப்பட்ட ஆன்மாக்கள் வரவை கொண்டாதானே வேண்டும் இதை விடுத்து. வராதே இருக்கட்டுமே என்பதும், வந்துவிடுவார்களையோ என்று அஞ்சுவதும், மடமை தானே சும்மா இருக்க விடாதவன் திருவருளுக்கு நன்றி!!!