ஏழரை சனி என்பது என்ன? சனி தசா என்றால் என்ன?

168

ஏழரை சனி என்பது என்ன? சனி தசா என்றால் என்ன?

நமது மனித சமுதாயம் இறைவன் மீது இருக்கும் பயத்தினால் தான்  பெரும்பான்மையான மக்களுக்கு பக்தி உள்ளது. இறைவன் மீதுள்ள அன்பால் பக்தி கொண்டு உள்ளவர்கள் மிக அரிதே. அதே போல் நவகிரகங்களில் சனி மீது அனைவருக்கும் சற்று பயம் உள்ளது. இதனால் சனி பெயர்ச்சியின் போது திருநள்ளாறு மற்றும் குச்சனூர் போன்ற கோவில்களில் பெரும் கூட்டம் கூடுவதை பார்க்க இயலும். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் திருநள்ளாறில் சனியை மட்டும் வணங்கி விட்டு மூலவரை வணங்காமல் செல்பவர்களும் உள்ளனர்.

இந்த கோவிலின் தல வரலாறு என்னவென்றால் சனியின் பிடியில் மாட்டிக்கொண்டு இருந்த நலன் இந்த திருநள்ளாறில் குளித்து விட்டு, இங்குள்ள சிவனை தரிசிக்க வந்த போது அவரை தொடர்ந்து வந்த சனியை கோவில் வளாகத்தில் நிறுத்தி நலனுக்கு அருள் செய்த தர்பண்யேஸ்வரர் நலனுக்கு அருள் செய்த தலம். ஆனால் மக்கள் இன்று அந்த கோவிலின் வளாகத்தில் உள்ள சனியை வணங்கி கொண்டு எம் பெருமானை தரிசிக்க மறந்து விடுகிறார்கள்.

உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு சூப்பர்வைசர் தொல்லை கொடுத்தால், நீங்கள் அவரிடமே போய் முறையிடுவீர்களா? அல்லது அவரின் மேலாளரிடம் முறையிடுவீர்களா? எனவே நவகிரகங்களையும் படைத்த எம்பெருமான் பரம்பொருளிடம் சரண் அடையுங்கள். மேலும் பெரும்பாலான மக்களுக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி, சனி தசா இதற்கான வேற்றுமை தெரியாமல் குழம்பி கொள்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த கட்டுரையில் தெளிவான பதில் தருவோம். உங்கள் ஜாதகத்தில் சனி எந்த நிலைமையில் உள்ளார் மற்றும் என்ன பலன்களை செய்து கொண்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதகத்தின் தெளிவான பலன்களை பெறுங்கள்.

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி என்றால் என்ன?

நமது வான்வெளியில் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும். நாம் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலை நமது ஜாதகம் எனப்படும். நமது ஜாதகத்தின் பலன்களை நமது ஜாதகத்தில் தசா புக்தி மற்றும் தற்பொழுது வானில் உள்ள கிரக நிலைகளின் தன்மை எனப்படும் கோச்சாரம் (கோள் ஏறிய சாரம்) இவற்றை வைத்து கணிப்பது. இதில் ஜாதகம் நமது லக்கினம் அடிப்படையில், கோச்சாரம் ராசி அடிப்படையில் கணிப்பார்கள்.

ஏழரை சனி என்பது நமது ராசிக்கு 12 ஆம் வீட்டில் சனி பிரவேசிக்க தொடங்கி, ராசிக்கு 2 ஆம் வீட்டை விட்டு வெளியேறும் கால கட்டம் ஏழரை வருடங்கள் ஆகும். இதில் வாழ்க்கையை பற்றி புரிதலை ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுப்பார். அஷ்டம சனி என்பது ராசிக்கு 8 ஆம் வீட்டில் சனி பிரவேசிப்பது, இந்த காலகட்டத்தில் ஜாதகர் அவமானம், வம்பு, வழக்கு, நஷ்டம்  மற்றும் விபத்து போன்ற தூர் பலன்களை அனுபவிப்பார்.

சனி தசா என்றால் என்ன?

நமது பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் நமக்கு ஏதேனும் ஒரு கிரகத்தின் தசா நடப்பில் இருக்கும், அந்த தசாவின் அடிப்படையில் நமக்கு பலன்கள் கிடைத்து கொண்டு இருக்கும். அதன் அடிப்படையில் சனி தசாவின் முறை ஜாதகருக்கு வருவது தான் சனி தசா. சனி தசா ஒருவருக்கு 19 வருடங்கள் நடக்கும். இது எந்த லக்கினம் மற்றும் ஜாதகத்தில் சனியின் சுப மற்றும் பாவ தொடர்பு நிலையை பொறுத்து பலன் தரும்.

சிம்ம மற்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி தசா மிக மோசமான பலன்களை தரும். சனியின் சுப தொடர்புகள் பொறுத்து இந்த வீரியம் குறையும். விருச்சகம், மேஷம், தனுசு, மீனம் போன்ற லக்கினத்திற்கு மத்திய பலன்களும், மிதுனம், கன்னி, மகர மற்றும் கும்ப லக்கினத்திற்கு சுப தொடர்புடன் நல்ல பலன்களையும், பாவ தொடர்புடன் இருந்தால் காரகத்துவ தீமைகளும் மற்றும் ஆதிபத்திய நன்மைகளும் இருக்கும்.

ரிஷப மற்றும் துலாம் லக்னத்திற்கு எங்கு இருந்தாலும் நல்ல பலன்களே (மிக மோசமான பாவ தொடர்புகள் இதற்கு விதி விலக்கு) நடக்கும். இந்த லக்கினங்களுக்கு அவர் ராஜா யோகாதிபதி ஆக இருப்பார். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல பலன்கள் தருவார் என்று கூறி விடை பெறுகிறேன்.