ஏழரை சனி குடும்ப உறுப்பினர்களை பாதிக்குமா?

130

ஏழரை சனி குடும்ப உறுப்பினர்களை பாதிக்குமா?

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்று கண்ணதாசன் அவர்களின் தத்துவ பாடலின் வரிகள் பட்டி தொட்டி எல்லாம் ஒரு காலத்தில் ஒலித்தது ஞாபகம் இருக்கும். இந்த பாடல் வரிகள் மெய்யாகும் விதமான காலகட்டம் தான் ஒருவரின் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலகட்டங்கள். இந்திய நாட்டின் குடும்பங்களின்  தற்போதைய நிலை கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி குடும்பத்துக்கு மாறி 50 ஆண்டுகள் மேல் ஆகி விட்டது.

எங்கயோ அத்தி பூத்தது போல் ஒன்று இரண்டு கூட்டு குடும்பங்களை தற்பொழுது பார்ப்பது அரிது ஆயிற்று. பொதுவாக இப்பொழுது ஒரு குடும்பத்தில் 4 அல்லது 3 பேரு மட்டும் இருக்கிறார்கள்.  தனி குடும்ப அமைப்புகளில், இரண்டு பேருக்கு ஏழரை சனி நடந்தால் அந்த குடும்பம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு ஒரு அளவே  இல்லை. இதனால் தான் நமது ஊர் ஜோதிடர்கள் அப்பாவும் மகனுக்கும் ஒரே ராசியாக இருந்து ஏழரை சனி நடக்கும் போது யாராவது ஒருத்தர் தூர இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லுவார்கள். ஒரே இடத்தில் அவர்கள்  இருக்கும் போது வரும் பிரச்சனைகள் இரட்டிப்பாக இருக்கும்.

ஆனால் இது கூட்டு குடும்பத்தில் இருக்காது அங்கு தாத்தா, பாட்டி, மாமா மற்றும் அத்தை என்று வேறு வேறு ராசிகள் கொண்ட 8 அல்லது 10 சக குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது அந்த தாக்கம் ஓரளவு சமன்படுத்தபடும். குடும்ப உறுப்பினர்களை எந்த மாதிரி ஏழரை சனி பாதிக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

உங்களின் குடும்பத்தில் யாரேனும் ஏழரை அல்லது அஷ்டம சனியால் பாதிக்கபட்டு உள்ளார்களா? உங்களுக்கு கஷ்டங்களின் தாக்கத்தில் இருந்து எப்பொழுது மீள்வோம் என்று தெரிய வேண்டுமா? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஜாதகத்தில் துல்லிய பலன்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்:

  1. பொதுவாக ஒருவரின் மகன் அல்லது மகள் திருமணம் தள்ளி கொண்டே போகும். அவர்கள் ஜாதகத்திலும் தசா புத்திகள் சரியானதாக திருமணம் நடைபெறும் அமைப்புகளும்  இருக்கும். ஆனால் அவர்களின் தந்தை அல்லது தாய் யாரேனும் ஒருவருக்கு ஏழரை அல்லது அஷ்டம சனி நடந்து கொண்டு இருக்கும்.
  2. பொதுவாக ஒருவருக்கு ஏழரை சனி நடக்கும் போது அவர் மனதில் என்ன அதிகம் விரும்புகிறாயோ அதற்கு தான் பெரிய தடைகள் வரும். மகன் அல்லது மகளை விட அவர்களின் அம்மா மற்றும் தந்தைக்கு தான் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அதிக விருப்பம் இருக்கும்.
  3. இதனால் தான் தந்தை அல்லது அன்னையின் ஏழரை சனி காலத்தில் பிள்ளைகளுக்கு வேலை அல்லது திருமண சம்பந்தப்பட்ட விஷயங்களால்  தடைகள் மற்றும் தாமதம் ஏற்படும்.
  4. ஒரே குடும்பத்தில் (4 பேர் கொண்ட) இருவருக்கு ஏழரை சனி மற்றும் ஒருவருக்கு அஷ்டம சனி நடக்கும் போது அதன் பாதிப்புகள் மிக கடுமையாக  இருக்கும்.
  5. குடும்பத்தில் குழந்தைகள் சிறு வயதில் இருந்தால் அவர்களின் கல்வி விஷயத்தில் பிரச்சனைகள் இருக்கும்.
  6. திருமண வயதில் இருக்கும்  மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடந்து அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து ஆவது அல்லது குடும்ப தலைவரின் தொழில் அல்லது வேலை கடுமையாக பொருளாதாரம் பாதிக்கப்படும்.
  7. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலக் குறைபாடுகள் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவரின் மரணம் ஏற்பட்டு அதன் மூலம் குடும்பத்தின் உறுப்பினர்கள் மன அழுத்தத்தில் இருப்பது போன்றவை நடப்பது. எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று வேண்டி விடைபெறுகிறேன்.