காதலை தூண்டும் வெள்ளி கிரகம்

38
சுக்கிரன் எப்பொழுது காதலை தூண்டுவார் ?  என்ன செய்வார் ?
இந்த உலகில் தோன்றும் அனைத்து உயிர்களின் நோக்கமும் ஒன்றே , அவைகள் தங்களின் சந்ததியை உருவாக்கி இந்த உலகில் தங்களுக்கு பின் அடையாளமாக விட்டு  செல்வது தான் . ஒரு மனிதனுக்கு தேவையான மற்றும் தேவையற்ற அனைத்து விதமான சுகங்களை கொடுப்பது சுக்கிரன் எனும் வெள்ளி கிரகம் தான் . ஒரு மனிதனுக்கு பொருள் கொடுப்பது குரு எனும் வியாழன்  என்றால் அதை செலவு செய்து சுகமாக இருக்கும்  விஷயத்தை கொடுப்பது சுக்கிரன் எனும் வெள்ளி கிரகம் ஆகும் . ஒருவர் சுக்கிரன் வலுத்து அவரின் 12 ஆம் வீடு எனும் போக ஸ்தானத்தில் தொடர்ப்பு கொண்டவர் ஆடம்பரமாக செலவு செய்து அனுபவித்து வாழ்வாராக இருப்பார் , மேலும் உதவி என்று கேட்டு வருவோருக்கு கை நெறய அள்ளி கொடுக்கும் மகா வள்ளலாக திகழ்வர் . மனிதன் தோன்றும் முக்கியமான அமைப்பான காதல் மற்றும் காமத்தின் காரகத்துவமும் சுக்கிரன் எனும் இவரிடம் தான் உள்ளது . எனவே தான் ரோமானிய காலத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை விடும் பழக்கம் அறிமுகமாகி,  இப்பொழுது அதே வெள்ளிக்கிழமை  இரவுகளில் உல்லாசமாக  களிக்கும்  வீகென்ட் ( weekend ) எனப்படும் மேற்கத்திய கலாச்சாரம் வெள்ளிக்கிழமை பார்ட்டி , திரைப்படம் பார்ப்பது போன்ற பொழுது போக்கில் ஈடுபடும் நிலையை உருவாக்கி உள்ளனர் . இந்த சுக்கிரன் எப்பொழுது காதலை தூண்டுவார் மற்றும் என்ன என்ன செய்வார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் . உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை மற்றும் சுக்கிரன் தசா என்ன பலன் தரும் என்பதை நமது இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக பலன்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களை பெறுங்கள் .
சுக்கிரன் எப்பொழுது காதலை தூண்டுவார் ?  என்ன செய்வார் ?
1. பொதுவாக காதலை குறிக்கும் ராசி துலாம் , இந்த துலாம் எப்பொழுது சுக்கிரன்( ராகு சுக்கிரன் வீடுகளில் இருந்து வேறு கிரகங்கள் தொடர்பு இல்லாமல் தசா நடந்து போதும் காதல் ஏற்படும் )  சுபமாக தொடர்ப்பு கொண்டு அவரின் தசா புக்தி இளைய பருவத்தில் வருகிறதோ அப்பொழுது அவரை காதலில் ஈடுபட வைப்பார் . அது வெற்றி பெறுமா ? அல்லது தோல்வியில் முடியுமா என்பதை ? அந்த ஜாதகருக்கு சுக்கிரன் யோகரா அல்லது அவயோகரா என்பதை பொறுத்து . பொதுவாக பிள்ளைகளுக்கு இளம் பருவமான 5 முதல் 20 வயதுக்குள் வரும் சுக்கிர தசை அவர்களின் பள்ளி அல்லது கல்லூரி பருவத்தில் காதலை உண்டாக்கி பிறகு மனம் முறிவு உண்டாக்கி எதிர் பாலினரை புரிய வைக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவார் .
2. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்து இருந்தாலும் அவர் பாவ தொடர்பு இல்லாத போது அந்த ஒரு மனிதருக்கு தேவையான போதுமான  வருமானம் , ஒரு  வீடு , ஒரு  வாகனம் மற்றும் நல்ல மனைவியை தரும் அமைப்பை பெறுவார் . சுக்கிரன் நீச்சம் ஆகி பாவ தொடர்பு ஏற்படும் போது அவர் பலன்கள் மாறுபடும் மற்றும் மேல் சொன்ன அமைப்புகள் இல்லாத நிலை ஏற்படும் .
3. சுக்கிரன் சுபமாக ஜாதகிரின் 3 , 7 மற்றும் 12 ஆம் வீடுகளை தொடர்பு கொள்ளும் போது அவருக்கு  காதல் மற்றும் காமம் நேர்மையான வழியில் மனைவியின் மூலம் கிடைக்கும் . இதுவே பாவ கிரகங்களான சனி , செவ்வாய் மற்றும் ராகுவுடன் தொடர்பு கொள்ளும் போது முறையற்ற வழிகளில் காமம் அந்த பாவ கிரகங்களின் தசை மற்றும் புக்தியில் கிடைத்து அந்த நேரம்  முடிந்ததும் நின்று விடும் .
4. சுக்கிரன் சனியுடன் ( வேறு சுப தொடர்பு இல்லாத போது  )சேர்ந்து ராசி மற்றும் லக்கினத்தின் ஏழாம் பாவகம் தொடர்பு ஏற்படும் பொழுது தன்னை விட வயதான அல்லது விதவை மனைவி  அமையும் . சுக்கிரன் ராகுவுடன் ( வேறு சுப தொடர்பு இல்லாத போது  ) 12 டிகிரிக்கு மேல் விலகி ராசி மற்றும் லக்கினத்தின் ஏழாம் பாவகம் தொடர்பு ஏற்படும் பொழுது வேறு மதம் மற்றும் வேறு சமூகத்தில் இருந்து மனைவி அமையும் . இதில் இன்னொரு நுணுக்கம் என்னவென்றால் ராகுவுடன் மிக நெருக்கமாக நெருங்கும் சுக்கிரன் அந்த ஜாதகருக்கு திருமணம் மற்றும் காமத்தை தராத நிலைக்கு செல்வார் . அவருக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை ( 7 ஆம் வீடு மற்றும் 7 ஆம் அதிபதியின் நிலையை பொறுத்து) அமையும் . அவருக்கு ராகு தசை வரும் போது சுக்கிரன் தரும் பலனான காமத்தை அவர் முறையற்ற வழிகளில் பலரிடம் பெரும் நிலை ஏற்படும் .
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு குறைவில்லா நிலையை தந்து வாழ்த்துவான் என்று இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .