குழந்தை பேறு தடையை ஏற்படுத்தும் குரு சண்டாள யோகம்!!

78

குழந்தை பேறு தடையை ஏற்படுத்தும் குரு சண்டாள யோகம்!!

ஜோதிடத்தில் பல நூறு யோகங்கள் இருக்கிறது, யோகங்கள் என்றால் நமது மனதில் கோடிகளை கொட்டும் ஒரு மகா பாக்கியம் என்ற எண்ணம் உள்ளது அது தவறு. யோகம் என்றால் இணைவு என்று ஜோதிடத்தில் பொருள். அது நன்மையை செய்யும் யோகமா? அல்லது தீமையை செய்யும் யோகமா? என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், எந்த கிரகங்கள் இணைந்து உள்ளது? எங்கே இணைந்து உள்ளது? அந்த கிரகங்களுக்கு இடையே எந்த மாதுரி உறவுகள் உள்ளது? அந்த இணைவை வேறு ஏதேனும் கிரகங்களின் பார்வை அல்லது தாக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதா? என்று சகல விஷயங்களையும் ஆராய வேண்டும்.

இந்த பதிவில் குரு சண்டாள யோகம் என்றால் என்ன? அது என்ன செய்யும் என்று பார்ப்போம். குருவுடன் சண்டாளன் என்று ஜோதிடத்தில் சொல்லப்படும் ராகு மற்றும் சனி இணைவது குரு சண்டாள யோகம் எனப்படும். நான் முன்னரே கூறியதை போல எந்த ஒரு யோகமும் முழு நன்மையையும் செய்து விடுவதும் இல்லை, முழு தீமையும் செய்து விடுவதும் இல்லை. இந்த யோகம் எந்த நிலைமையில் என்ன செய்யும் என்பதை பின்வரும் விதி மற்றும் விதி விலக்குகள் காண்போம்.

உங்கள் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது? என்ன பலன்கள் தற்பொழுது நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதகத்தின் துல்லியமான பலன்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களுடன் பெறுக.

குரு சண்டாள யோகம் என்ன செய்யும்?

  1. சுப கிரகமான குரு, ராகு மற்றும் சனியுடன் எந்த நிலையிலும் இணைவது குருவை வலு இழக்க செய்யும், இதை இன்னும் கூர்மையாக பார்க்க வேண்டும் அவர்களின் இணைவு எத்தனை டிகிரி இடைவெளியில் உள்ளது என்றும், 8 டிகிரிக்குள் இருக்கும் ராகு மற்றும் சனி குருவை முழுவதும் வலு இழக்க செய்வார்கள். இந்த குரு தனது காரகத்துவமான பொருள் மற்றும் புத்திர பாக்கியத்தை தர இயலாத நிலையை வேறு எந்த சுப தொடர்பும் இல்லாத நிலையில் அடைவார். ஆனால் இணையும் ராகு மற்றும் சனி சுப தொடர்புடன் இருக்கும் இந்த நிலையில், ஜாதகரின் குழந்தை பாக்கியத்தை அறிய 5 ஆம் வீடு மற்றும் 5 அதிபதியின் நிலையை கணக்கிட வேண்டும். அப்படி 5 ஆம் வீடு மற்றும் 5 ஆம் அதிபதி கெட்டு இருந்தால் கடுமையான புத்திர தோஷம் (சில சமயங்களில் குருவே சிம்மம் மற்றும் விருச்சிக லக்கினத்துக்கு 5 ஆம் அதிபதியாக வருவார்) அவர்களுக்கு புத்திர தடை அல்லது தாமதம் ஏற்படும். இதற்கு விதி விலக்கு இந்த நிலையில் இருக்கும் குரு பரிவர்த்தனை அல்லது வர்கோத்தமம் அடைவது, வேறு ஏதேனும் ஒரு வகையில் சுப தொடர்பை பெறுவது.
  2. இந்த இணைவு எல்லா நிலையிலும் தீய பலன்களை செய்து விடுவது இல்லை, உதாரணமாக குரு மற்றும் சனி இணைந்து இருப்பவர் எந்த லக்கினமாக இருந்தாலும் அவர் ஆன்மீக எண்ணம் கொண்டவராக இருப்பார், கூடுதலாக இந்த இணைவு ராசி மற்றும் லக்கினத்துடன் தொடர்பு கொண்டு மேலும் சுப தன்மை ஏற்படும் போது ஆன்மீகத்தின் உயர் நிலையை அடையும் நிலையை அடைவார்.
  3. கன்னி மற்றும் மிதுன லக்கினத்துக்கு குரு பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி எனும் ஸ்தானம் அடைவார். அந்த நிலையில் தன்னுடைய 7 ஆம் வீட்டை தொடர்பு கொள்ளும் நிலையில் ஜாதகருக்கு பாதகம் செய்யும் தன்மையில் இருப்பார். இந்த நிலையில் ஒரு வகையில் குரு சண்டாள யோகம் ஜாதகருக்கு இருப்பது நல்லது. குருவை பங்கப்படுத்தி அவரின் தீய பலன்களை ராகு மற்றும் சனி செய்ய விடாமல் தடுப்பார்கள். மேலும் இந்த மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு ராகு மற்றும் சனி யோகர்களாக வருவதால் அவர்கள் தசையில் நல்ல பலன்கள் இருக்கும். இதே போல ரிஷப மற்றும் துலாம் லக்கினத்துக்கு குருவுடன் சேர்ந்து சனி மிக பெரும் நன்மைகளை தனது தசையில் தருவார்.
  4. ஜாதகருக்கு ராகு குருவுடன் சேர்ந்து சண்டாள யோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், 3 மற்றும் 11 வீடுகளில் இந்த யோகம் அமைய பெற்று மேலும் ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி மற்றும் உச்சமாக இருக்கும் போது ராகு தசை பணத்தை வாரி கொட்டும் அந்த ஜாதகருக்கு. குப்பையில் இருப்பவர் குபேரனாக மாறுவது இந்த சுப தொடர்பு உள்ள ராகு தசையே. எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று விடை பெற்று கொள்கிறேன்.