கேது பகவான் 10ல் இருந்தால் என்ன பலன்?

451

கேது பகவான் 10ல் இருந்தால் என்ன பலன்?

நிழல் கிரகமாக பார்க்கப்படுவது கேது பகவான். தேவர்களும், அசுரர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால் மோகினி அவதாரம் எடுத்து முதலில் தேவர்களுக்கு வழங்கினார். அப்போது அசுரன் ஒருவன், தேவர்கள் போன்று வேடமணிந்து அந்த அமிர்தத்தை பருகினான். இதையறிந்த சூரிய சந்திரர்கள் இது குறித்து திருமாலிடம் முறையிட்டனர்.

இதனால், திருமால், அமிர்த கரண்டியால் தேவர்கள் போன்று வேடமணிந்து அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டினால். இதையடுத்து, அசுரனின் தலை இரண்டாக பிளவுபட்டது. அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது. ஜோதிடத்தில் கேது பகவான் நிழல் கிரகம். அதாவது, இல்லாத கிரகம்.

எமகண்ட நேரத்தில் கேது பகவானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தலாம். மேலும், சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திர நாட்களில் கேது பகவானை வழிபடுவது சிறப்பு. கேது பகவாவின் நட்பு ராசிகளாக மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளாக கருதப்படுகிறது. கேதுவிற்கு மேஷம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் பகை ராசிகள் ஆகும்.

தொழில் வியாபாரம் சிறந்து விளங்கவும், வழக்கு பிரச்சனை தீரவும், கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை மேலோங்கவும், மரண பயம் நீங்கவும், நரம்பு மற்றும் வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு-கேதுவை வணங்க தோஷங்கள் நீங்கும்.

அஸ்வினி, மகம், மூலம் எனப்படும் முக்கிய நட்சத்திரங்களின் அதிபதியாக திகழ்பவர் கேது பகவான். இவரது தசா புத்தி காலம் 7 வருடங்கள். ராகுவைப் போன்று கேது பகவான் அப்படி ஒன்றும் கெடுதல்களை செய்திடமாட்டார். கேது தசை நடந்து கேதுவிற்கு வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்று வலுவாக இருந்தால் கேது நன்மை செய்வார்.

வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் என்று சில மாற்றங்களை கேது பகவான் உருவாக்குவார். உறக்கம் மற்றும் தூங்கும் இடத்தை கேது பகவான் குறிப்பிடுவார். மரணம் எப்படி நிகழும், மரணத்திற்கு பின் என்ன? என்பதையெல்லாம் நிர்ணயம் செய்வார்.

லக்கினத்தில் கேது பகவான் இருந்தால் ஜாதகக்காரர் செல்வந்தராக இருப்பார்.

10ல் கேது இருந்தால் என்ன பலன்?

  1. எல்லோரையும் நேசிப்பவராக இருப்பார்கள்.
  2. தன வரவு அதிகமாக இருக்கும்.
  3. தொழிலில் மேன்மை அடையக் கூடியவர்கள்.
  4. எல்லோரையும் சமமாக கருதும் மனப்பான்மை கொண்டவர்கள்.
  5. நல்ல நெறிமுறைகளைக் கொண்டு வாழ்க்கையை வாழக் கூடியவர்களாக இருப்பார்கள்.
  6. தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.
  7. தத்துவங்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  8. எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்.
  9. மருத்துவ துறையில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  10. கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.