கேது பகவான் 12ல் இருந்தால் வெளிநாட்டு யோகமா?
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக பார்க்கப்படுவது கேது பகவான். தேவர்களும், அசுரர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால் மோகினி அவதாரம் எடுத்து முதலில் தேவர்களுக்கு வழங்கினார். அப்போது அசுரன் ஒருவன், தேவர்கள் போன்று வேடமணிந்து அந்த அமிர்தத்தை பருகினான். இதையறிந்த சூரிய சந்திரர்கள் இது குறித்து திருமாலிடம் முறையிட்டனர்.
இதனால், திருமால், அமிர்த கரண்டியால் தேவர்கள் போன்று வேடமணிந்து அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டினால். இதையடுத்து, அசுரனின் தலை இரண்டாக பிளவுபட்டது. அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது. ஜோதிடத்தில் கேது பகவான் நிழல் கிரகம். அதாவது, இல்லாத கிரகம்.
எமகண்ட நேரத்தில் கேது பகவானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தலாம். மேலும், சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திர நாட்களில் கேது பகவானை வழிபடுவது சிறப்பு. கேது பகவாவின் நட்பு ராசிகளாக மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளாக கருதப்படுகிறது. கேதுவிற்கு மேஷம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் பகை ராசிகள் ஆகும்.
தொழில் வியாபாரம் சிறந்து விளங்கவும், வழக்கு பிரச்சனை தீரவும், கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை மேலோங்கவும், மரண பயம் நீங்கவும், நரம்பு மற்றும் வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு-கேதுவை வணங்க தோஷங்கள் நீங்கும்.
லக்னத்திற்கு 12 ஆம் இடத்தில் கேது பகவான் இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தனிமையை விரும்புவார்கள்.
12ல் கேது இருந்தால் என்ன பலன்?
- பொதுவாகவே 12ஆல் கேது இருந்தால் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
- பயணங்கள் மீது ஆர்வம் கூடும்.
- தாய்மாமன் வழியில் ஆதரவு இருக்கும்.
- கண்களில் பாதிப்பு வரும்.
- மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
- அலைபாயும் மனதை கொண்டிருப்பார்கள்.
- மனம் அமைதியில்லாமல் இருக்கும்.
- வெளிநாடுகளில் வசிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
- எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள்.
- பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் இல்லாமல் போகும் சூழல் இருக்கும்.