கோடீஸ்வர யோகம் தரும் கேது தசை !

45
கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகம் தரும் கேது தசை !
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது சர்ப்ப கிரகங்கள் எனும் சாயா கிரகங்கள் வரிசையில் உள்ளது . இதில் ராகு மற்றும் கேதுக்கள் எதிர் எதிர் திசையில் இருக்கும் இரு துருவ நிழல்கள் . ராகு இருக்கும் 7 வது வீட்டில் கேது இருப்பார் . வானவியல் ரீதியாக விளக்க வேண்டும் என்றால் ராகு கேதுக்கள் எதிர் எதிர் தன்மை கொண்ட நிழல் கிரகங்கள் அதாவது ராகு கடும் இருட்டை குறிக்கும் கிரகம்,  தன்னுடன் இணையும் கிரகங்களை முழுமையாக வலு இழக்க செய்யும் தன்மை கொண்டவை . கேது வெளிச்சமும்  , இருட்டும் இணையும் எல்லை பகுதியை குறிக்கும் , அதாவது நீங்கள் தேனீர் போடும் போது டீ தூளை சூடு நீரில் சுட வைப்பீர்கள் அப்பொழுது  முதலில் அவை நீரில் கலந்து கருமை நிறத்தை அடையும் இது ராகுவின் நிறம்.  அதை அடுத்து சிறுது நேரம் பிறகு அந்த தேயிலை தூள் நன்றாக கொதித்து ஆரஞ்சு நிறம் வரும் இதுவே கேதுவின் நிறம் , ஒளியின் அருகில் இருக்கும் நிழலே கேது , கேது ராகுவை போன்று இணையும் கிரகங்களை வலு இழக்க செய்யாது மாறாக இணையும் கிரகத்தின் நல்ல காரகத்துவங்களை தூண்டி விடும் வித்தியாச குணம் கேதுக்கு உண்டு . கேது சனியுடன் சேர்ந்தால் சனியின் கேட்ட குணங்களை கட்டுபடுத்தி சனியின் ஆன்மீக காரகத்துவத்தை தூண்டி விடும் . கேது செவ்வாயுடன் சேர்ந்தால் செவ்வாயின் தீய குணங்களான கோவம் , முரட்டு தனம் போன்றவற்றை கட்டுப்படுத்தி செவ்வாயின் நல்ல காரகத்துவங்களான மருத்துவம் மற்றும் விவேகமானவராக ஜாதகரை  மாற்றும் . கேது பொதுவாக தான் இருக்கும் வீடு மற்றும் தான் இணையும் கிரகங்களின் நல்ல பண்புகளை வளர்க்கும் இயல்பு உடையது . இந்த கட்டுரையில் கேது தசை என்ன செய்யும் ? எப்பொழுது நல்லது செய்யும் என்பதை பார்ப்போம் . உங்கள் ஜாதகத்தில் கேது என்ன நிலையில் உள்ளது ? கேது தசை என்ன செய்யும் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் , இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜோதிட விவரங்களை அனுப்பி உங்கள் ஜாதக பலன்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களை பெறுங்கள் .
கேது தசை என்ன செய்யும் ?
1. கேது பொதுவாக மாற்றங்களை குறிக்கும் கிரகம் . ஒரு செயலின் முடிவை இறுதியை குறிப்பதும் கேதுவின் செயல்பாடே , கேதுவுக்கு நல்ல வீடுகளாக கன்னி , விருச்சகம் மற்றும் கும்பம் வீடுகள் சொல்லபட்டு உள்ளது . கன்னியில் தனித்து இருக்கும் கேதுவுக்கு சுப கிரகங்களின் பார்வை அல்லது வீடு கொடுத்த புதன் வலுவாக இருக்கும் போது ஜாதகரை புத்திசாலியாக இருக்க வைப்பார்  , தனது தசையில் ஜாதகரை புதியதாக கண்டுபுடிப்புகளை கண்டுபுடிக்கும் அபார  ஞானம் வழங்குவர் . விருச்சிகத்தில் இருக்கும் கேது செவ்வையை போலவே செயல்படுவார் , செவ்வாய் வலுத்து இருந்து சுப கிரகங்களின் பார்வை கேதுவுக்கு கிடைக்கும் போது மருத்துவர் அல்லது கட்டிட தொழிலில் ஈடுபட வைப்பார் . குறைந்த அளவு சுப தொடர்பு ஏற்படும் போது இன்சூரன்ஸ் துறையில் வேலை செய்ய வைப்பார் . கேது கும்ப ராசியில் இருந்து , சுப கிரகங்களின் பார்வை அல்லது வீடு கொடுத்த சனி  வலுவாக இருக்கும் போது ஜாதகரை பெரிய ஆன்மீக வாதியாக மாற்றுவார் , பற்றற்ற மனம் கொண்டவராகவும் , நடமாடும் சித்தராக  திகழ்வர் .
2. கேது தசை பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாயுடன் இணைந்து  ,  பாவ கிரக வீட்டில் இருக்கும் போது நல்ல பலன்கள் இருக்காது , அதே போல் செவ்வாய் மற்றும் சனியின் பார்வை வாங்கும் கேது அவர்களை போலவே செய்லபடும் தனமையை கொண்டதால் ஜாதகருக்கு நல்ல பலன்களை செய்ய இயலாத நிலையில் இருப்பார் .
3. கேது ஜாதகரின் அவ யோக கிரகங்களின் வீட்டில் அமர்ந்து அந்த கிரகத்தின் பார்வை அல்லது இணைவை பெரும் பொது ஜாதகரை தனது தசையில் கெடுப்பார் . உதாரணமாக சிம்ம லக்கினத்துக்கு மகரத்தில் அமர்ந்து கடகத்தில் இருக்கும் சனியின் பார்வை வாங்கிய கேது தசை அவருக்கு இன்னொரு சனி தசை போலவே செயல்படும் . அவருக்கு தனது தசையில் கடன், வம்பு , வழக்குகளை வேறு எந்த சுப தொடர்பும் இல்லாத நிலையில் தந்து ஜாதகரை துன்புறுத்துவார் .
கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகம் :
4. கேது வலுவான குருவுடன் ( ஆட்சி அல்லது உச்ச நிலையில் )  சேர்ந்து இருக்கும் போது கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகத்தை தருவார் . அந்த ஜாதகருக்கு குரு மற்றும் கேது தசையில் பெரும் பொருள் கிடைக்கும் இருப்பினும் அந்த ஜாதகர் பணம் மீது பற்று இல்லமால் இறைவன் மீது பற்று உள்ளவராக இருப்பார் . இதில் கடகத்தில் குரு மற்றும் கேது இருந்து , குருவுக்கு வீடு கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உச்சமாக இருக்கும் பொது தனது தசையில் மிக பெரிய  கோடீஸ்வரனை உருவாக்குவார் .
எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு நிறைவான வாழ்க்கை தரட்டும் என்று வேண்டி விடைபெறுகிறேன் .