கோட்சாரம் என்றால் என்ன?

14

கோட்சாரம் என்றால் என்ன?

கோட்ச்சாரம் (கோள்ச்சாரம்+ கோள்களின் நகர்வு) பலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்களாகும். இதைதான் ராசிபலன்கள் என்கிறோம். இதில் முக்கியமாக பார்க்கக்கூடியது வருட கோள்களான குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, சனிபெயர்ச்சி பலன்களாகும். மற்ற கோள்கள் மாத கோள்களாகும்.

கோட்ச்சார பலன்கள் என்பது 10 முதல் 15% மட்டுமே வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒருவருடைய சுயஜாதக கிரக நிலைகளும் தசாபுத்திகளுமே ஒருவரை வழிநடத்தும். 90% சுய ஜாதக பலன்கள் என்பதே விதி என்பதாகும். கோட்ச்சாரம் என்பது மதி. ஒருவர் சாலையில் வேகமாக காரில் செல்கிறார். பள்ளிக்கூடம் இருக்கும் ஏரியா பக்கம் வண்டி செல்கிறது. அங்கு ஸ்பீடு பிரேக் போட்டுள்ளார்கள். பிரேக் அழுத்துகிறோம் இதைத்தான் எச்சரிக்கை என்கிறோம்.

ஒருவேளை வேகத்தடை இல்லை என்றால், விதி எனும் ஜாதகம் வேகமாக சென்றாலும், மதி எனும் கோட்ச்சாரம் வேகத்தடை போட்டு எச்சரிக்கை செய்யும் விதி கெட்டு மதி நன்றாக இருந்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும். விதியும் மதியும் நன்றாக இருந்தால் வாழ்வில் தோல்விகள் என்பது படிக்கட்டுகளாக மாறிவிடும்.

விதியும் கெட்டு, மதியும் கெட்டால் கதிகெட்டு போவர் என்பது ஜோதிட விதி. இதற்குதான் இஷ்டதெய்வ வழிபாடுகளும், குலதெய்வ வழிபாடுகளும் செய்யப்படுகிறது.