சகல யோகங்களையும் வழங்கும் பௌர்ணமி சந்திராதி யோகம்!

50

சகல யோகங்களையும் வழங்கும் பௌர்ணமி சந்திராதி யோகம்!

இந்த பிரபஞ்சமே ஒளி மற்றும் இருளின் கலப்பினால் நிரம்பியுள்ளத . எதிர் எதிர் விசைகள் இந்த பிரபஞ்சத்தை சமநிலையில் வைத்து இருக்க உதவுகிறது. வள்ளலார் இறைவன் ஜோதி வடிவானவன் என்கிறார். ஆம் இறைவன் ஒளிமயமானவர் தான், மனித பிறப்புகளை ஒளி தத்துவ அடிப்படையில் ஆராய்ச்சி செய்தால் நாம் ஜோதிடத்தை தாண்டி இந்த பிரபஞ்ச இயக்கத்தின்  மாபெரும் உண்மையை  புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக நமது தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்த MGR, ஜெயலலிதா அம்மையார் மற்றும் ஸ்டாலின் போன்றவர்கள் பௌர்ணமி நாட்களில் பிறந்தவர்களே – ஜோதிடப்படி பெரும்பாலான உயர் குடி பிறப்புகள் முழு நிலவு நாட்களில் தான் பிறக்கின்றன. எனவே தான் எல்லா மாத பௌர்ணமி நாட்களும் நமது இந்து சமயத்தில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ஜோதிடத்தில் பல நூறு யோகங்கள் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை யோகங்களில் சிறந்த பலன் தரும் யோகமாக இந்த சந்திராதி யோகத்தை நான் கூறுவேன். இந்த பதிவில் சந்திர அதி யோகம் என்ன என்பதை பார்ப்போம்.  உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கிறதா? அல்லது உங்கள் ஜாதக பலன்களை அறிய வேண்டுமா? இந்த கட்டுரையின் ஜோதிட ஆசிரியர் ஜோதிடர் கிரிக்கு +91 9677824799 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் உங்கள் ஜாதகத்தின் விவரங்களை அனுப்பி ஜாதக பலன்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான பலன்களை அறியுங்கள்.

சந்திர அதி யோகம் என்றால் என்ன?

நான் முன்னரே கூறியதை போல் நமது வேத ஜோதிடம் பூமியை கட்டுப்படுத்தும் காரணிகளை கொண்டு வரையறுக்கப்பட்டது. நமது பூமிக்கு ஒளி தரும் மூலம் சூரியன், அதை அடுத்து சூரியன் மற்றும் மற்ற நட்சத்திரங்களின் ஒளியை நமக்கு வாங்கி பிரதிபலிக்கும் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காரணி (துணை கிரகம்) சந்திரன் தான். இந்த சந்திரன் பூரண ஒளியை எட்டி இருக்கும் பௌர்ணமி மற்றும் அதற்கு முன் (சதுர்தசி) பின் (பிரதமை) இருக்கும் நாட்கள் என சேர்த்து மூன்று நாட்கள் சந்திரன் அதி சுபாராக இருக்கும் நிலையை அடைவார்.

இந்த நிலையில் சந்திரனுக்கு ஏழில் சூரியன் சம சப்தமாக அமர்ந்து இருப்பார். இந்த நிலையில் உள்ள சந்திரன் தனது ஏழாவது பார்வையால் ஏழாம் வீட்டை மட்டும் அல்லாமல் அதிக சுப ஒளியை பிரதிபலிக்கும் காரணத்தால் தனது ஒளியை சிதறி ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளுக்கும் செலுத்தி அந்த வீட்டை மற்றும் அந்த வீட்டில் இருக்கும் கிரகங்களை பார்த்து சுபப்படுத்தும் என்பது துல்லியமான உண்மை.

சந்திர அதி யோகம் என்பது பௌர்ணமி சந்திரனுக்கு ஆறு, ஏழாம் மற்றும் எட்டாம் வீடுகளில்  சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் வரிசையாக அமைந்து அங்கு பௌர்ணமி சந்திரன் மற்றும் இந்த சுப கிரகங்களுக்கும் தங்களது பார்வையால் ஒரு சுப ஒளி குவியல் நிகழும் ஒரு அபூர்வ வானவியல் நாட்களில் ஜாதகர் பிறக்கும் போது பாக்கியசாலி ஆக மாறுவர்.

அந்த யோகத்தின் வலிமை  அவரின் லக்கினம், லக்கினாதிபதியின் சுப வலுவை பொறுத்து, தசா நடப்புகளை பொறுத்து ஒரு யோக உயர் குடி பிறப்பு எனப்படும் சகல யோகங்களையும் அனுபவிக்க பிறக்கும் ஜாதகம் அமையும்.

யோகத்தின் விதி விலக்குகள்:

  1. எந்த ஒரு யோகமும் பங்கப்படாமல் இருக்க வேண்டும், இந்த யோகத்தில் சூரியன் அல்லது சந்திரனுடன் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது கலக்கும் போது யோகங்கள் தரும் பலன்கள் குறையும்.
  2. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல், எப்பொழுது பௌர்ணமி சந்திரன் குருவுடன் சேருகிறதோ அப்பொழுது அதிக சுப தொடர்பாகி அந்த பாவகம் மற்றும் அந்த தசைகள் ஜாதகருக்கு பலன் தராமல் போகும் நிலை ஏற்படும்.
  3. சந்திராதி யோகம் முழுமையான பலன் தர வேண்டும் என்றால், சூரியன், சந்திரன் மற்றும் அதியோகத்தில் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா ஜாதகருக்கு வர வேண்டும். மேலும் இது சூரியன் அணி லக்கினத்துக்கு அதிக நல்ல பலன்கள் தரும், மாறாக மகர மற்றும் கும்ப லக்கினத்துக்கு இந்த யோகம் இருந்து சூரியன் மற்றும் சந்திரன் தசைகள் வரும் பொழுது ஆதிபத்திய விசேஷம் இல்லாததால் பெரிய நன்மைகள் இருக்காது.

எல்லாம் வல்ல இறைவன் குறைவில்லா வளங்களை உங்களுக்கு அருள்வான் என்று கூறி விடை பெறுகிறேன்.