சந்திராஷ்டமம் என்றால் என்ன? என்ன நடக்கும்?

53
அம்மா நாம் பள்ளி அல்லது வேலைக்கு போகும் போது சொல்லி அனுப்புவார்கள், “தம்பி இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம் கொஞ்சம் பாத்து பேசுனு” எச்சரிப்பது உங்களக்கு ஞாபகம் வரும். சந்திராஷ்டமம் என்ன செய்யும்? அப்படி என்றால் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக ஜோதிடத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகள் துர் ஸ்தனங்கள் எனப்படும், அதிலும் குறிப்பாக 8 ஆம் வீடு முக்கியமான துர் ஸ்தானம் (மரணம், வம்பு, வழக்கு, கண்டம், அவமானம் போன்றவற்றை குறிக்கும்) ஆகும். இந்த 8 ஆம் வீடு லக்கினத்தின் ஒளி படாத வீடு, மறைவு ஸ்தானம். இந்த 8 ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்து தசா நடத்தினால் சொல்ல முடியாத துன்பத்தையும், அவமானத்தையும், மரணம் மற்றும் மரணத்திற்கு நிகரான கண்டங்களையும் தரும். இந்த 8 ஆம் இடத்தில் ஒளி கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் மறைவதும் தவறு. அதிலும் மனதை குறிக்கும் மனோகாரகன் எனும்  சந்திரன் எட்டாம் இடத்தில் கோட்சரப்படி 2 நாட்கள் சஞ்சரிசிக்கும் போது நம் மனம் தடுமாறும் அல்லது நாம் மனதுக்கு ஆகாத வேலைகளை செய்து விடுகிறோம். ஒருவரின் ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் இருக்கும் 2 1/2 நாட்களே சந்திராஷ்டமம் எனப்படும். உதாரணமாக ஒருவர் மேஷ ராசியாக இருந்தால் அவரின் ராசிக்கு எட்டாம் இடமான விருச்சக்கத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் 2 1/2 நாட்கள் அவர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். இந்த சந்திராஷ்டமம் அன்று என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் ஜாதகத்தில் என்ன பலன்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிய வேண்டுமா ? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை + 91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி, குறைந்த கட்டணத்தில் தெளிவான  பலன்களை அறியலாம்.
சந்திராஷ்டமம் என்ன செய்யும்?
1. மாதத்தில் ஒரு முறை வரும் இந்த சந்திராஷ்டமம் எல்லா நிலையிலும் கெடுதல் செய்வது இல்லை, இதை ரெண்டு விதங்களாக பிரிக்கலாம். வளர்பிறை சந்திராஷ்டமம், தேய்பிறை சந்திராஷ்டமம். வளர்பிறை முதல் பௌர்ணமி வரை சந்திரன் நிலை இருந்து நமக்கு சந்திராஷ்டமம் வரும் போது நமக்கு பெரிய கெடுதல்கள் ஏற்படுவது இல்லை. தேய்பிறை முதல் அம்மாவாசை நிலைமையில் இருக்கும் போது நம் மனம் பாதிக்கும் நிகழ்வுகள் நடந்து விடுகிறது. குறிப்பாக அம்மாவாசை நிலையில் முன் இரண்டு நாட்கள் மற்றும் பின் இரு நாட்களில் இருக்கும் சந்திராஷ்டமம் நாட்கள் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தி விடும்.
2. சந்திரன் மாத்ருகாரகன், பொதுவாக சந்திராஷ்டமம் நாளன்று அன்னையுடன் மனஸ்தாபம், பிரச்சனை, வாக்குவாதம் ஏற்படும். எந்த வேளைக்கு செல்கிறோமோ அந்த வேலையினால் அலைச்சல் ஏற்படும்.
3. வாகனங்களில் பயணம் செய்யும் போது தசா புக்திகளுக்கு ஏற்ப, சிறு விபத்து மற்றும் வாகனத்திற்கு பழுது ஏற்பட்டு வாகன விரயம் நடக்கும்.
4. தொழில் செய்வோர்களுக்கு, அந்த நாட்களில் மன குழப்பத்தால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பங்கு சந்தையில் இருப்போர் கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் இவை. வேலையில் இருப்போர்க்கு அவர்களின் சக ஊழியர்களிடம் பிரச்சனை, மேலதிகாரிடம்  இருந்து அழுத்தும் ஏற்படும்.
5. சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், காய்ச்சல், வயிற்று போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உறவினர் இறப்பு போன்ற மன வருத்தம் தரும் செய்திகள் வரும் நாட்களாக இருக்கும்.
சந்திராஷ்டம் நாட்களில் ஒரு 2 மணி நேரம் மௌன விரதம் இருப்பது அதன் வீரியங்களை குறைக்கும். எல்லாம் வல்ல இறைவன் குறைவில்லா வளங்களை தருவான் என்று கூறி விடைபெறுகிறேன்.