சனி எப்பொழுது நன்மை செய்வார் ?

42
சனி எப்பொழுது நன்மை செய்வார் ?
 சனியை போல் கெடுப்பாரும் இல்லை – சனியை போல் கொடுப்பாரும் இல்லை என்று ஒரு பழமொழி உள்ளது  . இதே போல் ஜோதிடத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் ஜோதிடர்களிடம் பரவி உள்ளது . அதாவது ஒருவரின் பிறந்த ஜாதக கட்டத்தில்  ஒரு கிரகம் ஆட்சி , உச்சம் என்றால் அது அந்த ஜாதகருக்கு நல்ல பலன்களை தரும் என்று நம்பிக்கொண்டு உள்ளனர் . இது சுப கிரங்களான சுக்கிரன் , குரு , தனித்த புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் போன்றவைக்கு மட்டும் பொருந்தும் . இதுவே  பாவ கிரங்களான சனி மற்றும் செவ்வாய்க்கு வேறு விதத்தில் செயல்படும் . ஒருவரின் ஜாதகத்தில் இந்த பாவ கிரகங்கள் ஆட்சி , உச்சமாகி சுப ஒளி தொடர்பு இல்லாத போது தங்களின் கேட்ட காரகத்துவங்களை ஜாதகரின் குணநலன்களில் பிரதிபலிக்க வைத்து தங்களின் தசா புக்தி நடக்கும் போது தங்கள் அமர்ந்து இருக்கும் பாவகத்தை கெடுத்து ஆதிபத்தியம் ரீதியாக பலன் செய்வார்கள் . உதாரணமாக ஒரு மிதுன லக்கின நபருக்கு சனி அவரின் 5 ஆம் பாவகமான புத்திர வீடு துலாத்தில் உச்சம் ஆகி தனித்து வேறு எந்த கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருக்கும் போது அவருக்கு குழந்தை பாக்கியம் மிகவும் தாமதப்படும்( திருமணமே தாமதமாக நடக்கும் ) மற்றும் ஆண் வாரிசு தடை ஏற்பட்டு பெண் குழந்தை பிறக்கும் . இதுவே அந்த சனி தசை அவருக்கு திருமணத்திற்கு பின்  நடக்கும் பொது குழந்தைகளின் உடல் நலம் அல்லது தந்தைக்கு குழந்தைக்கும் இடையே இருக்கும் உறவை கெடுத்து அந்த ஜாதகருக்கு 8 ( கண்டம் , அவமானம் , கடன் , வம்பு வழக்கு )மற்றும் 9 ( தந்தை வழி சொத்து , தந்தை , தர்ம காரியங்கள் , பாக்கியம் , ஆன்மீக பணிகள் ) வீடுகளின் ஆதிபத்திய பலன்கள் நடக்கும் . இந்த கட்டுரையில் சனி எப்பொழுது நன்மை செய்வார் மற்றும் எவ்வாறு செய்வார் ? என்பதை பார்ப்போம் . உங்கள் ஜாதகத்தில் சனி என்ன பலன்களை செய்வார் ? சனி தசை என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியன் ஜோதிட கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தின் விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்தில் நிறைவான பலன்களை பெறுங்கள் .
சனி எப்பொழுது நன்மை தருவார் ?
1. சனி ஒரு முழு பாவ கிரகம் ஆகும் . அவர் எந்த லக்கினமாக ஜாதகர் இருந்தாலும் , அந்த ஜாதகருக்கு ஆட்சி , உச்சம் போன்ற நேர் வழியில் வலு  பெறாமல் , உபசய வீடுகள் எனப்படும் 3 , 6 , 10 , 11 ஆம் வீடுகளில்   நட்பு நிலையில் இருப்பது நல்லது அப்பொழுது நல்ல பலன்களை ஜாதகருக்கு தருவார் .
2. சனி எங்கு இருந்தாலும் , அவர் எப்பொழுது கேதுவுடன் சேர்ந்து மற்ற பாவ கிரகங்களான செவ்வாய் மற்றும் ராகுவுடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் போது அவர் அந்த கேதுவினால் கட்டுப்படுத்தப்பட்டு கெடுதலைகளை செய்ய இயலாத நிலைக்கு சென்றுவிடுவார் . இந்த ஜாதகருக்கு சனி தசை நல்ல பலன்களையே தரும் .
3. சனி ஒருவருக்கு கேந்திர மற்றும் திரிகோணங்கள் என சொல்லப்படும் பாவங்களில் ஆட்சி மற்றும் உச்சமாக இருந்தாலும் அவர் சுப கிரகங்களின் தொடர்பு அல்லது பார்வை படும் போது அவர் சுபத்தன்மை அடைந்து அந்த ஜாதகருக்கு நல்ல பலன்கள் தருவார் . சனி எவ்வளவு சுபம் அடைகிறதோ அந்த அளவுக்கு ஜாதகருக்கு ஆயுள் மற்றும் இறை நம்பிக்கை ஏற்படும் .
4. சனி ஒருவருக்கு உச்சம் ஆகி இருந்தாலும் அவர் வக்கிரமாகி இருந்தால் கேடு பலன்களை செய்ய மாட்டார்.  ( கேந்திர , திரிகோணங்களில் உச்சம் மட்டும் ஆகி இருந்தால் அந்த ஜாதகரை மூட்டை தூக்குதல் போன்ற   வாழ் நாள் முழுவதும் உடல் உழைப்பால் பிழைக்கும் நிலைமைக்கு தள்ளிவிடுவார் ) . சனி நீச்சம் அடைந்தாலும் சுப ஒளி தொடர்பு ஏற்படும் போது அவரின் காரகத்துவங்கள் மூலம் தொழில் செய்து பணம் ஈட்டும் நிலையை தருவார் . சனி எந்த நிலையிலும் செவ்வாய் , ராகு மற்றும் சூரியன் சேர்க்கை பெற கூடாது .
எல்லாருக்கும் அந்த பரம் பொருள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என்று சொல்லி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்