சமையலறையில் 3 விஷயங்களை செய்தால் காசு கொட்டும்!

235

சமையலறையில் 3 விஷயங்களை செய்தால் காசு கொட்டும்!

ஜோதிட சாஸ்திரத்தை சமையலறை என்பது சுக்கிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். சகல ஐஸ்வர்யங்களும் ஒருசேர கிட்டும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த வகையில் சுக்கிரனுடன் எந்த கிரக சேர்க்கை சமையலறையில் செல்வத்தை பெருக்கித் தரும் என்கிற சூட்சமம் தகவல்களை இப்பதிவில் காணலாம்.

சமையலறையை பொறுத்தவரை எப்போதும் சுத்தமான நிலையிலும், காய்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் இவை பின்பற்றப்படுவதில்லை. இதனாலேயே அந்த வீடுகளில் செல்வம் வற்றி, வறுமை ஏற்படுகிறது. தண்ணீர் என்பது சந்திர கிரகத்திற்குரிய அம்சமாக இருக்கின்றது. சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்தால் அங்கு பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். இதனால் தான் சமையல் அறை காய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

எப்போதும் தண்ணீர் சிந்திக் கொண்டே இருப்பது மிகவும் மோசமான காரியமாகும். இது மிகப்பெரும் செல்வ செழிப்பை குறைக்கவல்ல ஆற்றல் படைத்தது. எப்போதும் சமையலறையில் மட்டும் தண்ணீரை சிந்தக்கூடாது. சிலர் குடிப்பதற்காக தண்ணீர் எடுக்கின்றேன் என்று கால் வாசி தண்ணீரை கீழே சிந்தி விடுகின்றனர். பண்டைய காலங்களில் சமையலறையில் பாத்திரம் விலக்கும் முறை இருப்பதில்லை. வீட்டில் கொல்லைப்புறத்தில் தான் தேய்ப்பார்கள். இதனால் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.

சமையலறையில் தண்ணீரின் உபயோகம் குறைவாக இருப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். இது ஜோதிட சூட்சம குறிப்பாகும். பாத்திரம் விலக்குகிறேன் என்று சமையல் அறை முழுவதும் ஈரமாக்கி விடுகின்றனர். இந்த விஷயத்தை ஒழுங்காக கடைபிடித்தால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வறுமை நீங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமையலறையில் வடகிழக்கு மூலை என்பது மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு பகுதியாகும்.

இந்த பகுதியில் நவதானியத்தையோ அல்லது வெந்தயத்தையோ திறந்த நிலையில் வைப்பதால் தன, தானியம் குறைவின்றி சமையலறையில் நிறைந்து காணப்படும். ஒருபுறம் அரிசி மூட்டையும், தானியங்களும், மளிகைப் பொருட்களும், எண்ணெய் வகைகள் போன்றவையும் குறைவின்றி வற்றாமல் எப்போதும் இருக்கும். எனவே வடகிழக்கு மூலை பகுதியில் ஒரு பாத்திரத்தில் திறந்த நிலையில் நவதானியத்தை போட்டு வையுங்கள். இந்த தானியத்தை சமையல் செய்யும்போது அவ்வபோது உபயோகப்படுத்திக் கொண்டு இருங்கள்.

நமது முன்னோர்கள் எல்லாம் அடுப்பங்கரையில் சமையல் செய்யும் பொழுது தண்ணீரை பயன்படுத்தி கழுவி விடுவதில்லை. அதற்கு மாறாக மாட்டுச்சாணம் வைத்து தான் மொழுகி வைப்பார்கள். இதனால் இங்கு தண்ணீரின் பயன்பாடு குறைவாக இருந்தது. அதேபோல சமையல் செய்யும்போது விறகு அடுப்பில் இருந்து புகை ஏற்பட்டு, அக்கரும்புகை அடுப்பின் பின் சுவற்றில் படிந்துவிடும். இது சுக்கிரனுடன், சனி பகவானின் சேர்க்கையை உண்டாக்கும்.

சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை அளப்பரிய செல்வ வளத்தை கொடுக்கும். அடுப்பின் பின்புறத்தில் எப்போதும் கருமை இருப்பது வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும். இன்று நிலைமை மாறி சுத்தம் செய்கிறேன் என்ற பெயரிலும், அழகு என்ற பெயரிலும் பல்வேறு வண்ணப்பூச்சுகள் மூலம் கருமையை நீக்கி விடுகிறோம். இன்று இருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என்றாலும், அதற்கு பதிலாக கருமை நிறத்தாலான வண்ணங்கள் பூசுவதாலும், கருமை சார்ந்த டைல்ஸ் போன்றவையும் ஒட்டி வைப்பதாலும் நன்மைகள் உண்டாகும். இதனால் சுக்ர, சனி சேர்க்கை ஏற்பட்டு செல்வ வளத்தை குடும்பத்தில் உண்டாக்கித் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.