சித்திரை மாதம் இதெல்லாம் செய்யலாமா?

93

சித்திரை மாதம் இதெல்லாம் செய்யலாமா?

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. இதனை சூரிய மாதங்கள் என்றும் குறிப்பிடலாம். ராசி சக்கரத்தில் மேஷ ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுவது வழக்கம். அப்படி பல விசேஷங்களைக் கொண்ட இந்த சித்திரை மாத்த்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா, மொட்டை போட்டு காது குத்தலாமா, குழந்தைக்கு பெயர் வைக்கலாமா, வளைகாப்பு செய்யலாமா என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பொதுவாக எந்தவொரு சுப நிகழ்ச்சி செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம், நாள், நட்சத்திரம் பார்த்து செய்வது வழக்கம். அப்படியிருக்கும் போது இந்த சித்திரை மாதம் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா? என்பது பலரது கேள்வியாக இருக்கும்.

  1. சித்திரை மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.
  2. சித்திரையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வைக்கலாம்.
  3. சித்திரை மாதம் திருமணம் செய்யலாம்.
  4. சித்திரையில் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.
  5. சித்திரையில் மொட்டை போட்டு குழந்தைக்கு காது குத்தலாம்.
  6. இப்படி பல சுப நிகழ்ச்சிகளை இந்த சித்திரை மாதத்தில் தாராளமாக செய்யலாம்.