செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?

112
செவ்வாய் தோஷம் என்றால் என்ன ? அது என்ன செய்யும்
  நமது தமிழ்நாட்டில் திருமண வயது வந்த ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகன் / மகளின் திருமண வரனுக்கு முதலில் செய்வது சொந்த பந்தங்களில் திருமண வயது உள்ள பெண் / ஆணின் ஜாதகத்தை வாங்கி  பொருத்தம் பார்ப்பது தான் . இதில் வேடிக்கை என்ன வென்றால் ? சுத்த ஜாதகம் என்னப்படும் ராகு / கேது இல்லாத அல்லது செவ்வாய் இல்லாத ஜாதகம் தான் வேண்டும் என்று அடம்புடிக்கும் மக்கள் அநேகம்  . நமது ஜோதிடர்கள்  மக்களிடம் செவ்வாய் தோஷம் என்ற ஒரு பெயரில் பல வருடங்களாக பயமுறுத்தி வைத்து உள்ளோம் . ஜோதிடம் பொருத்தம் இன்னும் வேடிக்கையாகி பெற்றோர்களே தங்களுக்கு வரும் வரன்களின் ஜாதகத்தில்  லக்கினம் மற்றும் 2 , 7 , 8 ஆம் வீடுகளில் செவ்வாய் அல்லது ராகு கேதுக்கள் இருந்தால் அந்த வரனை தட்டி கழிக்கும் நிகழ்வுகள் சர்வ சாதாரணம் . உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன , அது என்ன செய்யும் என்னும் அடிப்படை ஜோதிட விளக்கம் கூட பல ஜோதிடர்கள் தருவது இல்லை . பரிகாரங்கள் என்ற பெயரில் பெற்றோர்களை பயமுறுத்தி வரும் நபர்களை தான் அதிகம் பார்க்க முடிகிறது . இந்த பதிவில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதையும் ?  உண்மையில் அது என்ன செய்யும் ?அதன் ஜோதிட நுணுக்ககங்களையும் பார்க்க இருக்கிறோம் . உங்கள் ஜாதகத்தில் திருமண தடை அல்லது தாமத திருமணம்  இருந்தால் இந்த கட்டுரையின் ஆசிரியரான ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு வாட்சப் மூலம் உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி ஜாதக விளக்கங்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கம்  அறியவும் .
செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?
1. பொதுவாக ஜோதிடத்தில்  செவ்வாய் ஒரு பாவ கிரகம் , சிறிய அளவில் சுபத்துவ ஒளி கொண்ட ஒரு பாவர் . செவ்வாய் ஒரு ஜாதகத்தில் சகோதரன் , காவல் துறை , கட்டிடம் , இரத்தம் , தைரியம் , வீரியம்  மற்றும் நிலத்தை குறிக்கும் காரக கிரகம் . ஒருவனை கத்தியை எடுக்க வைக்கும் கிரகம் செவ்வாயே ஆவார் , செவ்வாய் சுப ஒளி கொண்ட கிரகங்களின் தொடர்ப்பு கொண்டு இருக்கும் பொது அவர் ஒரு ஜாதகரை மருத்துவராக கத்தியை எடுத்து சிகிச்சை செய்ய வைப்பார்  , பாவ தொடர்ப்பு ஏற்பட்டு சனி , அம்மாவாசை சந்திரன் , ராகு போன்ற அசுப கிரங்களின் பிடியில் இருக்கும் போது ரவுடி மற்றும் அடியாளாக கத்தியை எடுத்து கொலை செய்ய வைப்பார். செவ்வாய் சுப ஒளி தொடர்ப்பு பெற்று சூரியன் மற்றும் சிம்மம் சுபமாகவும் பொழுது காவல் துறையினராக இருப்பார் . இந்த நிலையில் செவ்வாய் , லக்கினம் மற்றும்  லக்கினாதியின் நிலை / வலுவை  பொறுத்து அவர் IPS முதல் கான்ஸ்டேபிள் வரை அவரது தரம் மாறும் .
2. இந்த செவ்வாய் ஆட்சி , உச்சம் போன்ற நேரடி வலுவுடன் , சுப தொடர்ப்பு இல்லாமல் ஒரு ஜாதகரின் ராசி அல்லது லக்கினத்தின் ஒன்றாம் , இரண்டாம் , ஏழாம் மற்றும் எட்டாம் வீடுகளில் இருக்கும் போது திருமண தடை அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குவார் . செவ்வாய்க்கு 4 , 7 மற்றும் எட்டாம் பார்வைகள் உண்டு . ஜாதகரின் லக்கினம் அல்லது ராசியில் நேர்வலு சுப ஒளி தொடர்பு இல்லாமல்  இருக்கும்  பொது 7 ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்த்து மனைவி/ கணவன்  மற்றும் திருமண வாழ்க்கையை  கெடுப்பார்( ஜாதகரும்  கோவம் அதிகம் கொண்டவராக இருப்பார் ) . அதுவே இரண்டாம் வீட்டில் இருந்தால் ,  தனது தசை காலத்தில் ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகளை உண்டு பண்ணி நிம்மதி இல்லாமல் இருக்கும் நிலை இருக்கும் , சுப தொடர்பு இல்லாத பொது . செவ்வாய் சுப தொடர்பு இல்லாமல்  ஏழாம் வீட்டில் இருந்தால் வரும் மனைவி மிகவும் கோவம் உள்ளவராகவும் , நம்மை அடக்க நினைப்பவராகவும் இருப்பார் . செவ்வாய் எட்டாம் வீட்டில் சுபமாக இல்லாமல் இருந்தால் இரண்டாம் வீட்டை பார்த்து தனது
 தசையில் குடும்பத்தில் நிம்மதியின்மை உருவாக்குவார் . இந்த செவ்வாய் தோஷத்துக்கு சில விதி விளக்குகள் உள்ளன .
செவ்வாய் தோஷத்தின் விதி விலக்குகள்  :
1. செவ்வாய் குருவின் வீடுகளில் தனுசு  , மீனத்தில் வேறு பாவ தொடர்ப்பு ஏற்படாத போது செவ்வாய் தோஷம் என்று எடுக்க கூடாது . இது சுக்கிரன் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம்க்கும் பொருந்தும் .
2. செவ்வாய் வளர் பிறை சந்திரன் அல்லது தேய்பிறை பஞ்சமி திதிக்குள் இருக்கும் சந்திரனுடம் இணைந்து அல்லது பார்வையில் இருப்பதும் விதி விலக்கு , இந்த நிலையில் உள்ள சந்திரன் வீட்டில் இருப்பதும் விதி விலக்கு .
3. செவ்வாய் குருவின்/ சுக்கிரனின் / தனித்த புதனின்  பார்வை அல்லது இணைவிலோ இருப்பதும் விதி விலக்கு .
இந்த நிலைமையில் ஜாதகருக்கு செவ்வாயின் காரகத்துவத்தின் நல்ல விஷயங்கள் நடக்கும் . எனவே செவ்வாய் 1,2, 7 , 8 வீடுகளில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிற கண் முடித்தனமான நம்பிக்கையை மக்கள் கை விட்டு , ஜோதிடத்தின் உண்மையான தன்மையே புரிந்து கொள்ள வேண்டும் . மனிதனாய் பிறந்த அனைவர்க்கும் செவ்வாய் எதோ ஒரு வீட்டில் இருக்கத்தான் செய்யும் . ஒரு வரனை பார்க்கும் பொழுது அவரின் ஜாதகத்தின் முழு தன்மையை அறிய வேண்டும் . ஒருவரின் உடல் நிலையை அறிய வேண்டும் என்றால் முழு உடல் பரிசோதானையை பண்ண வேண்டும் என்பதை போல , ஒரு வரனின் தன்மையை அறிய முழு ஜாதகத்தின் அமைப்பையும் ஆராய வேண்டும் . எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .