சொந்த தொழில் யோகம் யாருக்கு அமையும்?
உத்தியோகம் என்பது புருஷ லட்சணம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நமது நாட்டில் வயதுக்கு வந்த பிள்ளைகள் தங்களையும், தங்களது வாழ்க்கை துணையையும், வயதான பெற்றோர்களையும் பார்த்துக்கொள்வது கடமை என்பது நமது மண்ணின் மரபு. இதை தான் நமது முன்னோர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடு என்று கூறியுள்ளனர்.
ஒருவர் ஜாதகப்படி அவர் வேலை செய்வாரா? அல்லது சொந்த தொழில் செய்வாரா? என்று கூற முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். அதற்கு ஜாதக கட்டத்தில் 6 ஆம் பாவகம் மற்றும் அதன் அதிபதியின் நிலை அவர் ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் அமைப்பையும் (அடிமை தொழில் என்று ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சொல்லப்பட்டு உள்ளது), 10 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதி என்பது சொந்த தொழில் செய்வதை குறிப்பார்கள்.
நவகிரகங்களில் சூரியன் மற்றும் சனி தொழில் காரக கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நடைமுறைப்படி பார்த்தால், சனி வலுத்தவர் வேலை செய்பவராக, சூரியன் வலுத்தவர் வேலை கொடுப்பவராகவும் இருப்பார்கள். இந்த கட்டுரையில் ஒருவர் என்ன துறையில் தொழில் செய்வார் மற்றும் எவ்வளவு வெற்றிகரமான முறையில் செய்வார் என்பதை பார்ப்போம்.
உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு என்ன மாதிரி தொழில் அமையும் என்பதை தெரிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியரான ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெளிவான ஜாதக விளக்கங்களை குறைவான கட்டணத்தில் பெறுங்கள்.
சொந்த தொழில் அமைய சாதகமான அமைப்பு:
ஒருவருக்கு என்ன துறையில் வேலை அல்லது தொழில் அமையும் என்பதை அவரது ஜாதகத்தில் எந்த கிரகம் (ராகு மற்றும் கேது தவிர்த்து) அதிக சுப தொடர்புகளை பெற்று உள்ளதோ அதன் காரகத்துவ தொழில்கள் அமையும்.
சுப தொடர்பு என்பது ஒரு கிரகத்திற்கு குரு இணைவு அல்லது பார்வை பெறுவது, சுக்கிரன் இணைவு அல்லது பார்வை, தனித்த புதன் இணைவு அல்லது பார்வை, வளர்பிறை (பௌர்ணமி சந்திரன்) சந்திரன் இணைவு அல்லது பார்வை பெறுவது.
கிரகங்களும் அதன் தொழில்களும்:
காரகத்துவமும் தொழிலும், சூரியன் – அரசு மற்றும் அரசு சார்ந்த தொழில்கள், அரசியல், அரசு டெண்டர், தந்தையின் தொழில்கள், கோதுமை, பொன், வணிகம், மருந்துப் பொருட்கள், கம்பளி ஆடைகள் மற்றும் தங்க நிற பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள்.
சந்திரன் – மீன் பிடித்தல், பால் வியாபாரம், முத்துக்குளித்தல், கப்பல் கட்டும் துறை, கடற்பயணம் செய்தல், உப்பு காய்ச்சுதல், ஆலைத் தொழில், ஜவுளி வியாபாரம் செய்தல், மனம் சம்பந்தப்பட்ட உளவியல் துறை .
செவ்வாய் – மருத்துவம் , காவல் துறை, ராணுவம், பாதுகாப்புத் துறை, ஆயுதத் தளவாடத் தொழில், கேட்டரிங் , ஸ்பேர் பார்ட்ஸ், விளையாட்டுத் துறை, லேத் பட்டறை, நெருப்பினால் உண்டாகும் தொழில்கள், பொறியியல் கட்டிட துறைகள்.
புதன்: வியாபாரம், கணிதம், ஸ்டேஷனரி, பத்திரிகைத் துறை, அச்சுக்கூடம், ஆசிரியப் பணி, ஜோதிடத் துறை, எழுத்துத் துறை, கவிதை, நாவல் இயற்றுதல், எழுத்தர் பணி, கணக்குப் பிள்ளை, வாக்குத் தொழில், தகவல் தொடர்பு துறை, விளம்பரம், பேச்சாற்றல், ஷேர் மார்க்கெட், கான்ட்ராக்ட் ஏஜென்சி, கூட்டுறவு நிறுவனங்கள்.
குரு: பொருளாதாரம், வக்கீல், நீதிபதி, தங்க நகை வியாபாரம், வங்கித் துறை, அறக்கட்டளை நிறுவுதல், தர்மகர்த்தா, ஆசிரியர், வேதங்களை உச்சரித்தல், வைதீகம், ஆலயப் பணிகள், தர்ம சத்திரம் கட்டுவது, கோயில் நிர்வாகம், ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், அரசாங்க ஆதரவு.
சுக்கிரன்: ஆடல், பாடல், நாட்டியம், நாடகம், சினிமா, ஓட்டல், லாட்ஜிங், திருமண மண்டபம், டிராவல் ஏஜென்ஸி, கட்டடக்கலை, ஜவுளித் துறை, நகைக்கடை, நவரத்தின வியாபாரம், மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, அழகு சாதனப் பொருட்கள், தயாரிப்பு, வாசனை திரவியங்கள் விற்பனை.
அதன் பிறகு அந்த துறையில் ஜாதகர் வேலை செய்வாரா அல்லது தொழில் செய்வாரா என்பதை அறிய அவரின் ஆறாம் பாவகம் மற்றும் 10 ஆம் பாவகத்தின் நிலையை ஆராய வேண்டும். ஆறாம் பாவத்துக்கு 10 ஆம் பாவகத்தை விட சுப தொடர்புகள் இருப்பின் அவர் அந்த துறையில் வேலை செய்வார் என்றும் 10 ஆம் பாவகம் ஆறாம் பாவத்தை விட சுப தொடர்புகள் இருப்பின் அவர் அந்த துறையில் தொழில் செய்வார் என்று அறிந்து கொள்ளலாம். இதை இன்னும் துல்லியமாக கண்டறிய அவரின் தசா புத்தியை பார்க்க வேண்டும்.
ஒருவர் சிறு தொழில் செய்பவரா அல்லது பெரும் நிறுவனத்தின் முதலாளியா என்பதை அறிய அவரின் சூரியனின் நிலையை காண வேண்டும். ஒருவருக்கு சூரியன் திக் பலத்தில் இருந்து கூடுதலாக பத்தாம் அதிபதி மற்றும் 2 (தனம் ஸ்தானம்) மற்றும் 11 (லாப ஸ்தானம்) ஆம் பாவகத்தின் நிலையை ஆராய வேண்டும். பெரும் வணிகர்கள் ஜாதகத்தில் 10 ஆம் பாவகம், 2 மற்றும் 9 பாவகம் சுபமாக இருந்து யோக தசைகள் நடப்பில் இருக்கும்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று விடைபெறுகிறேன்.