சொந்த வீடு யாருக்கு (எப்பொழுது) அமையும்?

48

சொந்த வீடு யாருக்கு (எப்பொழுது) அமையும்?

கல்யாணம் பண்ணி பாரு, வீட்டை கட்டி பாரு என்று முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள். சொந்த வீடு வேண்டும் என்பது பல நடுத்தர மக்களின் மிக பெரிய கனவு. அவர்களுக்கு மாளிகை போன்ற ஆடம்பர வீடு இல்லாவிட்டாலும், சாதாரண வீடு தங்களுக்கு சொந்தமாக இருந்தால் போதும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும். ஒருவர் சொந்த மாளிகையில் வாழ்வாரா அல்லது சாதாரண சொந்த குடிசையில் வாழ்வாரா?

ஒரு சிலர் இறுதி வரை வாடகை வீட்டிலே இருந்து விட்டு செல்கிறார்கள். இதற்கு ஜோதிட ரீதியான அமைப்புகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்களுக்கு சொந்த வீடு எப்பொழுது அமையும் என்று அறிய விரும்பினால் இந்த ஜோதிட கட்டுரையின் ஜோதிட ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்கள் பெறுங்கள்.

சொந்த வீடு அமையும்:

  1. ஜோதிடத்தில் சொந்த வீட்டை குறிக்கும் பாவகம், 4 ஆம் பாவகம் ஆகும். ஒருவருக்கு இந்த 4 ஆம் பாவகத்தில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறை சந்திரன் போன்றவை தனித்து வேறு எந்த பாவ தொடர்பும் இல்லாமல் இருந்து 4 ஆம் அதிபதி சனி, செவ்வாய் மற்றும் ராகுவுடன் நெருக்கமாக இல்லாமல் மற்றும் 4 ஆம் பாவத்தில் 6, 8 மற்றும் 12 இல் மறையாமல் இருக்கும் போது ஒருவருக்கு பிறக்கும் போதே சொந்த வீட்டில் இருப்பார் அல்லது அவரின் நல்ல தசா புத்தி நடப்பில் இருக்கும் போது சொந்த வீடு அமையும்.
  2. நான்காம் பாவகம் சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் இருந்து, 4 ஆம் அதிபதியும் சுப தொடர்பில் இருந்தால் அவரின் லக்கின வலுவுக்கு ஏற்ப மிக பெரிய மாளிகையில் இருப்பார், 4 ஆம் வீட்டில் சனி இருந்து அவருக்கு சுப பார்வை அல்லது சுபர் இணைவு இருக்கும் போது பழைய வீட்டை வாங்கி புதுப்பித்து கொள்வார்.
  3. இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் வங்கி மூலம் கடன் வாங்கி தான் சொந்த வீடு கட்டும் வழக்கம் உள்ளது. எவர் ஒருவருக்கு 6 ஆம் பாவகம் சுபமாகி சுப கடன் கிடைக்கும் அமைப்பு பெற்று, 4 ஆம் அதிபதி புத்தி அல்லது சுக்கிரன் புத்தி வரும் போது கடன் வாங்கி சொந்த வீடு கட்டும் யோகம் அமையும்.
  4. எவர் ஒருவருக்கு 4 ஆம் வீடு செவ்வாய் மற்றும் சனி ராகுவுடன் இணைந்து தசா நடத்தும் போது அவர் சொந்த வீடு இருந்தாலும் அதை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார் அல்லது சொந்த வீடு இருந்தாலும் வாடகை வீட்டில் வசிப்பார். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மனம் போல நல்ல வீட்டை அமைத்து தருவார் என்று வேண்டுகிறேன்.