சோடசக்கலை என்றால் என்ன?

89

சோடசக்கலை என்றால் என்ன?

அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பௌர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16ஆவதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும்.

சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் 16ஆவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு (5 நொடிகள்) போடும் நேரம் மட்டுமே இருக்குமாம். இந்த நேரம் திருமூலர் ஆளுமைக்குள் வந்து விடுகிறது. இதில் ஐந்து நொடிகள் மட்டும் சக்தி வாய்ந்த நேரமாகும். இரண்டு மணி நேரத்தில் எந்த நேரத்திலும் ஐந்து நொடிக்குள் அருளாசிகள் கிடைத்து விடும்.

திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் வேலை கிடைக்க, சொந்தவீடு சொத்து அமைய, நோய் நொடிகள் தீர, பகை மறைய, கணவன் மனைவி ஒற்றுமை இப்படி எதை வேண்டுமானாலும் இந்த 5 நொடிக்குள் வேண்டலாம். ஆனால் கோரிக்கை ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி 5 நொடிக்குள் வேண்டும் அனைத்தும் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.