ஜாதகத்தில் அதிர்ஷ்டம் எப்பொழுது தேடி வரும்?

89

ஜாதகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் எப்பொழுது தேடி வரும்?

புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பது இல்லை, வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை என்று சந்திரபாபு பாடி இருப்பார். அதிர்ஷ்டம் என்பது மனிதனுக்கு கை கொடுக்கும் ஒரு அபூர்வ தேவதை என்றே சொல்ல வேண்டும். ஜோதிடத்தில் இந்த அதிர்ஷ்டம் எப்படி கிடைக்கும் மற்றும் எப்பொழுது கிடைக்கும் என்று நமது முன்னோர்கள் கூறி உள்ளனர். இந்த அதிர்ஷ்டத்தை இரண்டு விதமாக பிரித்து உள்ளனர். ஒன்று நிலையான அதிர்ஷ்டம் மற்றொன்று திடீர் அதிர்ஷ்டம்.

நிலையான அதிர்ஷ்டம் என்பது நல்ல பெற்றோர்கள், நல்ல சுற்றம், குடும்பத்தின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, பிறந்த ஊர், பிறந்த குலம் இவற்றை குறிப்பது. திடீர் அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராத பொருள் வரவு, புதையல், லாட்டரி, மறைமுக பண வரவு, எதிர்பாராத பதவி கிடைத்தல் போன்றவை ஆகும். ஜாதகத்தில் இந்த நிலையான அதிர்ஷ்டத்தை 5 ஆம் பாவகமும், திடீர் அதிர்ஷ்டத்தை 8 ஆம் பாவமும் குறிக்கும். இந்த பதிவில் திடீர் அதிர்ஷ்டம் எப்பொழுது, எப்படி பலன் தரும் என்பதை விவரமாக பார்ப்போம்.

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? உங்கள் ஜாதகத்தின் தற்பொழுது நடப்பு பலன்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

திடீர் அதிர்ஷ்டம் எப்பொழுது கிடைக்கும்?

  1. ஜாதகரின் 8 ஆம் பாவகமும், அதன் அதிபதியும் எப்பொழுது சுப தொடர்பு பெற்று சுபமாக இருந்து தசா நடத்துகிறார்களா, அப்பொழுது ஜாதகருக்கு எதிர்பாராத பொருள் வரவு தேடி வரும்.
  2. அந்த காலத்தில் எதிர்பாராத பொருள் வரவு என்பது மண்ணுக்கு அடியில் இருக்கும் புதையல் கிடைத்தல்.  நமது காலத்தில் எதிர்பாராத பொருள் வரவு என்பது லாட்டரி, பங்குச்சந்தை, ட்ரீம் 11 போன்ற செயலிகள் மூலம் நடக்கும் பந்தய போட்டிகள் மூலம் அவருக்கு இந்த திடீர் பண வரவு தேடி வருதல் ஆகும்.
  3. ஜாதகருக்கு கிடைக்கும் திடீர் அதிர்ஷ்டத்தை குறிக்கும் பாவகம் 8 ஆம் வீடு என்றால், அதன் அதிர்ஷ்ட அளவை குறிக்கும் பாவகம் 12 ஆம் பாவகம். அதாவது ஒருவர் அதிர்ஷ்டம் மூலம் ஒரு லட்சம் பெறுவாரா அல்லது ஒரு கோடி பெறுவாரா என்பதை குறிக்கும் மறைமுக தன ஸ்தானம் இந்த 12 ஆம் பாவகம் ஆகும். இந்த 8 மற்றும் 12 ஆம் பாவகம் சுபத்துவமாக இருப்பவர் பரதேச வாசம் எனப்படும் வெளிநாடுகளில் வேலை செய்பவராக இருப்பார்.
  4. 6, 8 மற்றும் 12 ஆம் பாவகம் மறைமுக ஸ்தானங்கள் எனப்படும், இந்த 6, 8, 12ம் அதிபதிகள் ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ அல்லது பரிவர்த்தனை ஆகி கொண்டு சுப தொடர்புடன் இருந்தால் விபரீத ராஜ யோகம் எனப்படும் மறைமுக முறையில் அதிர்ஷ்ட பதவிகள் தேடி வரும். இந்த ஜாதகரின் லக்னம் வலுவாக இருந்து இந்த யோகம் சம்பந்தப்பட்ட தசா புத்திகள் நடைமுறைக்கு வந்தால் இந்த ஜாதகர் ஒரே இரவில் மிக பெரிய பதவிகளை அடையும் விபரீத ராஜ யோகத்தை அடைவார். எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று வேண்டி கொள்கிறேன்.