ஜாதகப்படி இரண்டு தாரம் இருப்பது உண்மையா?

140

ஜாதகப்படி இரண்டு தாரம் இருப்பது உண்மையா?

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் இன்னும் ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட குடும்பங்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில், ஜாதகம், ஜோதிடம் என்ற ஒன்று உண்டு.

ஜாதகம், ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட சிலர், தங்களது குடும்ப உறுப்பினர் ஜாதகத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட ஆரம்பித்துவிடுவர். இதில், பெரும்பாலானோர் கவலைப்படக் கூடியது தார தோஷம் பற்றி தான். தார தோஷம் இருப்பவர்களுக்கு திருமண வரன் கிடைப்பது மிகவும் கடினம். ஏனென்றால், இந்த தோஷம் உள்ளவர்களுக்கு இரு தாரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாமல் போய்விடுமாம். 2ஆவதாக அமையும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சில ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே பலரும் இப்படிப்பட்ட தோஷம் இருக்கும் ஆண் அல்லது பெண் ஜாதகங்களை ஒதுக்கி விடுகின்றனர்.

ஆனால், இது 100 சதவீதம் உண்மையான தகவல் என்றும் கூற முடியாது. இரண்டு தரம் என்று சொல்லி ஒதுக்கப்பட்ட பலரும் மகிழ்ச்சியாக வாழ்வதும் உண்டு. எந்த தோஷமும் இல்லாமல் இருக்கும் ஜாதகத்தை பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் விவாகரத்து செய்து கொண்டு கஷ்டப்படுவதும் உண்டு.

ஜாதகத்தில் எல்லா பொருத்தமும் சரியாக இருந்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள், கிளி மாதிரி மனைவி இருந்தாலும் வேறொரு பெண்னைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலத்தில் அனைத்து விதமான மக்களுமே இருக்கின்றனர். ஆகையால், தார தோஷம் என்ற விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

தார தோஷம் இருக்கிறது என்று யார் சொன்னாலும் அதை பெரிதுபடுத்தாமல் விற்றுவிட வேண்டும். அப்படியும் இல்லையென்றால், அதற்குரிய பரிகாரத்தை செய்தால் போதும். விரைவில் திருமணம் நடந்தேறும். நீங்கள் உறுதியாக இருந்தால் எதையும் உங்களால் சமாளிக்க முடியும். விதியை யாராலும் வெல்ல முடியாது என்பது எப்படி உண்மையோ, அதே போன்று விதி இப்படித்தான் இருக்கும் என்று எந்த ஜோதிடராலும் தீர்மானிக்க முடியாது.

ஜாதக கட்ட த்தில் உள்ள கிரக நிலைகளை பார்த்து அவர், அனுமானம் கூறலாமே தவிர எதையும், உறுதியாக சொல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான். யார் யாருக்கு என்ன என்ன எப்போது கொடுக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும். அதன்படி தான் எல்லாமே நடக்கும். நடப்பதெல்லாமும் அவனது திருவிளையாடல்களில் ஒன்று என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.