ஜாதகருக்கு எப்பொழுது சோதனைகள் நடக்கும்?

44

ஜாதகருக்கு எப்பொழுது சோதனைகள் நடக்கும்?

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று அன்றாடம் கோவிலுக்கு சென்று புலம்பும் பல மக்களை நாம் பார்த்து இருப்போம். ஒரு சில நேரங்களில் நாமும் அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்போம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். பொதுவாக ஒருவருக்கு என்ன தசா புக்தி நடந்தாலும் லக்கினாதிபதி லக்கினம் வலுவாக இருப்பவர்கள் வாழ்வின் எவ்வளவு பெரிய சறுக்கல்களையும், துன்பங்களையும் தாங்கும் மனத்திடம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஒருவருக்கு சோதனைகள் மற்றும் கடும் தொல்லைகள் எப்பொழுது நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக ஜாதகருக்கு அவயோக தசைகளான 6, 8 மற்றும் 12 ஆம் அதிபதிகள் தசா புக்தி நடக்கும் போது சோதனைகள் இருக்கும். அது எவ்வளவு காலம் இருக்கும், என்ன வீரியத்தில் இருக்கும் என்பதை அவர் அவரின் சொந்த ஜாதகத்தை பொறுத்து அமையும்.

நீங்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கீறீர்களா? உங்கள் வாழ்வில் கடுமையான சோதனைகள் நடந்து கொண்டு இருக்கிறதா? உங்களுக்கான விடிவு காலம் எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியரான ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்வில் சோதனைகளை எப்பொழுது இருக்கும்:

  1. பொதுவாக கோட்சாரப்படி, ஒருவருக்கு ஜென்ம சனி மற்றும் அஷ்டம சனி கால கட்டங்களில் தாங்க முடியாத துன்பம் ஏற்படும்.  (குறிப்பு: சொந்த ஜாதகத்தில் சனி சுப தொடர்புகளுடன் இருக்கும் போது இதன் பாதிப்புகள் குறையும்).
  2. பொதுவாக ஒருவரின் லக்கினத்துக்கு எதிர் தன்மை கொண்ட கிரகங்களின் தசா நடக்கும் போது அந்த தசா முழுவதும் மாறுபாடான பலன்கள் நடக்கும். குறிப்பாக மேஷம் மற்றும் விருச்சிகம்  லக்கினத்தில் பிறந்தவருக்கு புதன் தசா 17 வருடமும், ரிஷப மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவருக்கு குரு தசா 16 வருடமும், மிதுன மற்றும் கன்னி லக்கினத்தில் பிறந்தவருக்கு செவ்வாய் தசா 7 வருடமும், கடகம் மற்றும் சிம்மம் லக்கினத்தில் பிறந்தவருக்கு சனி தசா 19 வருடமும், தனுசு மற்றும் மீனம் லக்கினத்தில் பிறந்தவருக்கு சுக்கிரன் தசா 20 வருடமும், மகர மற்றும் கும்பத்தில் பிறந்தவருக்கு சூரியன் தசா (6 வருடம்) மற்றும் சந்திரன் தசா (10 வருடமும்) மாறுபாடான பலன்கள் ஏற்படும்.
  3. இந்த லக்கினங்களில் பிறந்தவர்களிடம் இந்த தசா சமயத்தில் என்ன நடந்தது என்று கேட்டு பார்த்தால் பல கண்ணீர் கதைகள் அவர்களிடம் இருந்து வரும்.
  4. மேல் சொன்ன லக்கினங்களில் பிறந்தவருக்கு, மேல் சொன்ன கிரகங்கள் (அவ யோகர்களாக) வருவார்கள். அவர்கள் அந்த  ஜாதகருக்கு 3, 6, 11 போன்ற இடங்களில் அமர்ந்து நட்பு வலுவுடன் இருக்கும் போது கேடு பலன்கள் குறைவாக இருக்கும். மேலும் இந்த கிரகங்கள் சுப தொடர்புடன் இருந்து தசா நடத்தும் போது நல்ல பலன்கள் நடக்கும்.
  5. ஒருவருக்கு மிகுந்த பாவ தொடர்பு கொண்ட எந்த கிரகத்தின் தசா நடந்தாலும் அது அவருக்கு நன்மைகளை குறைத்து, கேடு பலன்களே முடிந்தவரை தரும். சர்ப்ப கிரகங்களான ராகு நல்ல பாவகங்களில் (கேந்திரங்கள் மற்றும் திரிகோணங்களில்) அமர்ந்து சுப தொடர்பு பெறாமல் தசா நடத்தினால் அந்த பாவகத்தின் உயிர் காரகத்துவதை தனது தசாவில் கெடுக்கவே செய்யும்.