ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஏன்?

34

ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஏன்?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்து வைத்த வரம் தான். உண்மையை சொல்ல போனால், மிக பெரிய நிலையில் இருந்த பல முக்கிய VIPகளுக்கு திருமண உறவே இல்லாமல் வாழந்து வந்ததை நாம் பார்த்து உள்ளோம்.

எடுத்துக்காட்டாக நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நமது முன்னாள் முதல்வர் காமராஜர் போன்ற சான்றோர்களை சொல்லலாம். திருமணம் உரிய வயதில் நடப்பதும், காலம் கடந்து தாமதமாக நடப்பதும், ஒரு சிலருக்கு திருமணம் நடக்காமல் இருப்பதையும் நாம் கண்டு உள்ளோம். இதற்கான ஜாதக விளக்கங்களை தான் இந்த பதிவில் அலச உள்ளோம்.

ஜாதகரின் திருமண வாழ்க்கையை குறிக்கும் பாவகம் 7 ஆம் பாவகம் மற்றும் அதன் அதிபதி. இந்த அதிபதி மற்றும் பாவகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் ஜாதகத்தில் திருமண தடை அல்லது தாமதம் இருக்கிறதா? இந்த கட்டுரையின் ஜோதிட ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களை பெறவும்.

தாமதமான திருமணத்திற்கான கிரக அமைப்பு:

  1. பொதுவாக ஒருவரின் லக்கினத்துக்கு குடும்ப ஸ்தானம் எனப்படும் 2 ஆம் பாவகம், திருமண உறவை குறிக்கும் 7 ஆம் பாவகம் மற்றும் 8 ஆம் பாவகம் இந்த வீடுகளில் பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் இருந்து இந்த பாவகங்களை கெடுக்கும் போது ஜாதகருக்கு திருமண தாமதம் ஏற்படும். இந்த நிலை ராசிக்கு 2ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் பாவகங்களுக்கு பொருந்தும். ராசி மற்றும் லக்கினத்துக்கு 7ஆம் இடத்தில் சனி இருந்தால் அவரின் பாவ நிலையை பொறுத்து திருமண தடையின் கால் அளவு இருக்கும்.
  2. திருமணம் நடைபெறுவது இல்லற சுகத்திற்கு. இந்த சுகத்தை குறிக்கும் சுக்கிரன் மற்றும் ஏழாம் அதிபதி பாவ தொடர்பை பெற்று இருக்கும் போது திருமண தாமதம் மற்றும் தடைகள் ஏற்படும்.
  3. ஒரு சிலரின் ஜாதகத்தில் குரு மற்றும் சுக்கிரன் இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோ இருப்பார்கள் அல்லது இணைந்தோ இருப்பார்கள். அவர்களின் ஜாதகத்தில் ஒன்று திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் ஏதேனும் ஒரு விஷயத்தில் தாமதம் மற்றும் தடை இருக்கும்.
  4. குழந்தை பாக்கியம் எனப்படும் 5 ஆம் பாவகம் மற்றும் அதன் அதிபதி கெட்டு இருந்தாலோ, அதன் காரக கிரகம் குரு பலவீனமாக இருந்தாலோ திருமண அமைப்பில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நிறைவான திருமண வாழ்வை அருள்வார் என்று விடை பெறுகிறேன்.