ஜோதிடத்தில் எது முக்கியம்?

43
ஜோதிடத்தில் எது முக்கியம் ? லக்கினமா ? ராசியா ?
விதியை மதியால் வெல்லலாம் என்று கேள்விப்பட்டு இருப்போம் . ஆனால்  இது ஒரு ஜோதிட உட்பொருள் கொண்ட பழமொழி என்று உங்களுக்கு தெரியுமா ? ஆம் ஜோதிடத்தில் விதி என்பது லக்கினத்தை குறிக்கும் , மதி என்பது ராசி எனும் சந்திரனை குறிக்கும் . ஒருவருக்கு லக்கினம் கேட்டாலும் கூட மதி எனும் ராசி வலுவாக இருந்தால் நாம் பொழைத்து கொள்ளலாம் என்பது அதன் உட்பொருள் . நம்மை சுற்றி உள்ள பெரும்பாலான மக்களுக்கு தங்கள் ராசி என்னவென்று தெரியும் அனால் லக்கினம் என்னவென்று கேட்டால் திரு திருவென்று முழிப்பார்கள் . ஜோதிடத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் , குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி என்று அனைத்து பெயர்ச்சிகளையும் விடாமல் தங்கள் ராசிக்கு என்ன பலன் என்று படித்து வைத்து இருப்போம் ஆனால் அந்த பலன் நடைமுறையில் நடக்குமா என்றால் ? கேள்விக்குறிதான்  , 10 சதவீத பேருக்கு நடந்தால் கூட பெரிய விஷயம் . அப்படி என்றால் ஜோதிடம் என்றால் பொய்யா என்று கேட்டால் , அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நமது மற்றும் பத்திரிகை & தொலைக்காட்சிகளில் நமக்கு பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேல்  தான் சொல்லவேண்டும் . ஜோதிடத்தில் லக்கினம் என்று மூளை  போன்றது , ராசி என்பது இதயம் போன்றது . இரண்டுமே ஜோதிடத்தின் இரு சக்கரங்கள் . இந்த பதிவில் ராசி மற்றும் லக்கினம் என்றால் என்ன ? அதன் மூலம் மனிதனின் எதிர்காலம் எவ்வாறு தீர்மானிக்கலாம் என்ற அடிப்படை விளக்கங்களை  காண்போம் . உங்கள் ஜாதகத்தில் உங்கள் எதிர்காலத்தை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் இந்த கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை + 91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களை பெறுங்கள் .
லக்கினம் என்றால் என்ன ?
நமது பாரத தேசத்தின் பண்டைய ஞானிகள் வான்வெளியை 12 பாகங்களாக பிரித்தார்கள் , அவற்றை ராசி மண்டலங்கள் என்று வரையறுத்தார்கள் . ஒருவர் பிறந்த நேரத்தில் பூமியின் கிழக்கு வானில் எந்த ராசி மண்டலம் நிலை கொள்கிறதோ அந்த   ராசி மண்டலமே அவரது  ஜென்ம லக்கினம் அதன் அதிபதி நமது லக்கினாதிபதி .லக்கினம் என்பது ஒருவரின்  சிந்தனை , செயல் , அதிர்ஷ்டம் , ஆயுள் போன்றவற்றின் ஆதார மையம் .  ஒரு மனிதன் லக்கினத்தின் குணங்களை பிரதிபலிப்பான் . இந்த லக்கினம் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்துக்கும் மாறி கொண்டே இருக்கும் , பூமியின் சுழற்சி காரணமாக. நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும்  சப்த கிரகங்களான ( ராகு & கேதுவை தவிர்த்து ) சூரியன் , சந்திரன் , புதன் , சுக்கிரன் , குரு , சனி ஆகிய ஒவ்வொரு கிரகங்களுக்கும் தலா ரெண்டு ராசி மண்டலங்கள் விதம்  மேஷம் முதல் மீனம் வரை  மொத்தம்  12 ராசி மண்டலங்கள் . இந்த கிரகங்கள் அதன் உறவுகளின் அடிப்படையில்  ரெண்டு குழுக்களாக உள்ளன . குரு அணி மற்றும் சுக்கிரன் அணி என்று நமது புராணங்களில் உள்ளதை போல்  குரு அணியில் – சூரியன் , சந்திரன் , செவ்வாய் , குரு மற்றும் கேது எனவும் , சுக்கிரன் அணியில் – சுக்கிரன் , புதன் , சனி மற்றும் ராகு எனவும் பிரிக்கப்பட்டு உள்ளது . இதில் நம் எந்த அணியின் லக்கினத்தில் பிறக்கிறோமோ அந்த அணியின் நட்பு கிரகங்களின் நடப்பு  தசா நமக்கு யோகம் செய்யும் நேரமாகவும்  ( பாவ ஒளி தொடர்பு இல்லாத போது  ) எதிர் அணி கிரக தசா புக்திகள் அவ யோக தசைகள்( நன்மையை தர இயலாத அல்லது குறிப்பட்ட நிலையில் மட்டும் நன்மையை தர கூடியவை ) எனவும் சொல்கிறோம் . இந்த தசா புக்திகளே ஒரு மனிதனின் வாழ்கை சம்பவங்களை தீர்மானிக்கிறது . ஒரு மனிதனின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி  அதிக சுப தொடர்புடன் இருந்து யோக தசைகள் நடக்கும் போது அந்த ஜாதகர் கொடுத்து வைத்தவராக இருப்பார் .
ராசி என்றால் என்ன ?
ராசி என்பது லக்கினத்துக்கு துணை செய்யும் அமைப்பு ஆகும் . ஜாதகரின் பிறந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசியில் இருப்பாரோ அது அவரின் ஜென்ம ராசி எனவும் , அந்த நொடியில் சந்திரன் ஏறிய நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் எனவும் அழைக்கப்படும் . ஒருவரின் ராசி அவரது மனம் , குணம் மற்றும் எண்ணங்களை குறிக்க கூடியது . ஒருவரின் தசை புக்திகள் அவரின் ஜென்ம நட்சத்திரத்தின் வாயிலாக செயல் பட தொடங்கும் , உதாரணமாக ஒருவர் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார் என்றால் அவருக்கு செவ்வாய் தசையில் இருந்து வாழ்கை ஆரம்பிக்கும் இந்த தசை புக்திகளுக்கும் ஒரு  வரிசை முறை உள்ளது. அதன் வரிசை என்பது சூரியன் , சந்திரன் , செவ்வாய் , ராகு , குரு , சனி , புதன் , கேது , சுக்கிரன்  முறையே ஆகும் . இதில் ஒருவர் சுக்கிரன் தசையில் பிறந்தால் அவருக்கு அடுத்து சூரியன் தசை தொடங்கும் இவ்வாறு இந்த தசைகள் வரிசை முறைபடி ஜாதகரை ஆட்சி செய்யும் .  சந்திரனை / ராசியை வைத்து சொல்லப்படும் குரு , சனி மற்றும் ராகு / கேது பெயர்ச்சி பலன்கள்  போன்றவை கோட்சாரம் என்னபடும் . இந்த கோட்சாரம் தசா புக்திகளுக்கு துணை புரிந்தால் பெரும் யோகம் கிடைக்கும் .
லக்கினம் மற்றும் ராசி எது முக்கியம் ?
இதை ஒரு நடைமுறை  உதாரணமாக விளக்கலாம் , லக்கினம் என்பது உங்கள் வங்கி கணக்கு போல உங்களின் ஜாதகத்தை  பொறுத்து உங்கள் கணக்கில் பணம் ( பலன் ) இருக்கும் . ராசி என்பது நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ள ஒரு கம்பெனி என்று வைத்து கொள்ளுங்கள் , உங்களை போன்று பலர் அந்த நிறுவனம் மீது முதலீடு செய்து இருப்பார்கள்  – அவர்கள் அனைவரும் ஒரே ராசி என்று எடுத்து கொள்ளுங்கள் . உங்கள் குறிப்பட்ட நிறுவனத்தின் பங்கு ஏறும் போது , இறங்கும் போது உங்களுக்கு லாபம் மற்றும் நஷ்டங்கள் இருக்கும் அதை போலவே உங்கள் ராசியினர் எனப்படும் உங்கள் சக முதலீட்டார்களாகும் தாக்கங்கள் இருக்கும் . அந்த லாபம் மற்றும் நஷ்டத்தின் வீரியம் அவர் அவரின் தனிப்பட்ட வங்கி இருப்பு எனப்படும் லக்கினத்தை போன்றது . எனவே தனிப்பட்ட ஜாதக பலன்களுக்கு லக்கினம் மற்றும்  அவர்களின் தசா புக்தி பலன்கள் 80 சதவீதமும் , கோட்சாரம் எனப்படும் ராசியை அடிப்படையாக கொண்ட பலன்கள் ஒரு 20 சதவீதமும் நடக்கும் . இது உங்களுக்கு புரிந்து இருக்கும் எனும் நம்பிக்கையில் எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிப்பவராக என்று கூறி விடைபெறுகிறேன் .