தசா என்றால் என்ன? தசா என்ன செய்யும்?

144

தசா என்றால் என்ன? தசா என்ன செய்யும்?

ரஜினிகாந்த் ஒரு படத்தில் மனித வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்து கொள், அதில் எந்த எட்டில் நீயும் இருக்க என்று தெரிந்து கொள் என்று பாடி இருப்பார். நமது மனித வாழ்க்கையின் அடிப்படை ரகசிய சாராம்சம் இந்த வரிகளில் அடங்கி உள்ளது. ஒரு சிலர் நல்ல வசதியான சூழ்நிலையில் பிறந்து வசதியாகவே வாழ்ந்து மறைகிறார்கள். ஒரு சிலர் ஏழையாக பிறந்து துன்பத்தில் உழன்று துன்பத்திலே வாழக்கையை கழிக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வாழ்க்கையில் அடித்தட்டு மட்டத்தில் இருந்து உச்சத்தை அடையும் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு சிலர் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் அப்படியே சராசரியாக முடிகிறது. இதற்கு எல்லாம், அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் தான் காரணம். நமது ஞானிகள் மனிதனின் சராசரி ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்று கணித்து, நவ கிரகங்களின் தசைகளின் வருடங்களை பிரித்தனர். மனிதன் பிறந்தது முதலே அவன் ஏதாவது ஒரு கிரகத்தின் ஆளுமை எனப்படும் அந்த கிரகத்தின் தசாவில் வாழ்ந்து கொண்டு இருப்பான்.

அந்த கிரகம் அவனுக்கு என்ன செய்ய கடமைபட்டு உள்ளதோ அதன் பலன்களை அதன் தசையில் செய்யும். இந்த பதிவில் ஒருவரின் தசாவை எவ்வாறு கண்டறிவது? தசா நமது வாழ்வில் என்ன செய்யும்? என்ற அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் என்ன தசா, என்ன பலன்களை தருகிறது என்று அறிய வேண்டுமென்றால், இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக பலன்களை துல்லியமாக அறியுங்கள்.

தசா புத்தியின் அடிப்படை விவரங்கள்:

ஒருவர் பிறக்கும் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் நமது விம்சோத்தரி தசா செயல்படும், அதாவது நீங்கள் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால், நீங்கள் பிறந்த உடன் உங்களுக்கு செவ்வாய் தசா நடப்பில் இருக்கும். விம்சோத்தரி தசா வரிசை என்பது சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகும். இதில் உங்களுக்கு சுக்கிரன் தசா நடப்பில் இருந்தால் அதற்கு பின் சூரியன் தசா ஆரம்பிக்கும், இந்த வரிசையின் இறுதி சுக்கிரன், ஆரம்பம் சூரியன். நீங்கள் பிறக்கும் நட்சத்திரம் அடிப்படையில் இந்த வரிசையின் கிரகங்களின் தசா ஒன்றன் பின் ஒன்றாக வரும்.

ஒருவர் என்ன தான் யோக ஜாதகத்தை கொண்டு இருந்தாலும் அவருக்கு யோகமான தசைகள் வரவில்லை என்றால் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காது. தசா புத்திகள் தான் வாழ்வின் சம்பவங்களை தீர்மானிக்கும். அதாவது எப்பொழுது திருமணம் நடக்கும், எப்பொழுது பண வரவு இருக்கும், எப்பொழுது கெடு பலன்கள் இருக்கும் என்பதை தசா காட்டி கொடுக்கும்.

கிரகங்களும் அதன் தசா வருடங்களும்:

ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் தசா வருட காலங்கள் வேறுபடும், சூரியன் – 6 வருடங்கள், சந்திரன் – 10 வருடங்கள், செவ்வாய் – 7 வருடங்கள், ராகு – 18 வருடங்கள், குரு – 16 வருடங்கள், சனி- 19 வருடங்கள், புதன் – 17 வருடங்கள், கேது – 7 வருடங்கள், சுக்கிரன் – 20 வருடங்கள்.

நமது கோட்சாரப்படி ஜென்ம சனி மற்றும் அஷ்டம சனி நடக்கும் போது, தசா புத்தி பலன்கள் எடுபடாது, சனி கோட்சாரத்தில் சக்தி மிகுந்த கிரகம். எனவே அதன் ஆதிக்கத்தில் ஜாதகர் இருப்பார், சொந்த ஜாதகத்தில் சனி சுப தொடர்பில் இருக்கும் போது கெடுதல்கள் குறைவாக இருக்கும்.

அருள் அணி, பொருள் அணி என்று இரு பிரிவுகள் உள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு மற்றும் கேது அருள் அணி. புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு பொருள் அணி. இதில் நீங்கள் அருள் அணியின் லக்கினத்தில் பிறந்து இருந்தால், அருள் அணியின் தசைகள் நடக்க வேண்டும் – அப்பொழுது ஜாதகர் முன்னேற்றம் அடைவார். அதற்கு பதிலாக பொருள் அணியின் தசைகள் வரிசையாக வந்தால் பெரிய நல்ல பலன்கள் ஜாதகருக்கு கிடைப்பது அரிது ஆகும். இந்த கட்டுரையின் கருத்துகள் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்பி விடை பெறுகிறேன்.