திருமணம் சுப முகூர்த்தம் குறிப்பதற்கு என்னவெல்லாம் தவிர்க்க வேண்டும்?

68

திருமணம் சுப முகூர்த்தம் குறிப்பதற்கு என்னவெல்லாம் தவிர்க்க வேண்டும்?

ஆடி, மார்கழி மாதங்கள் மற்றும் மல மாதங்களில் திருமண சுப முகூர்த்தம் குறிக்க கூடாது. மலமாதம் என்றால் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமியோ அல்லது அமாவாசையோ வருவது. தீதுறு நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை, பூரட்டாதி, விசாகம், சித்திரை, சுவாதி, மகம், உடைபட்ட நட்சத்திரம் முகூர்த்த நாட்களை தவிர்க்க வேண்டும்.

அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி திதிகள் மற்றும் கரிநாள், மரண யோகம் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். ஆண் ஜாதகமாகவோ அல்லது பெண் ஜாதகமாகவோ இருந்தாலும் ஜென்ம நட்சத்திர நாளிலோ அல்லது சந்திராஷ்டம நாட்களிலோ சுப முகூர்த்தம் குறிக்க கூடாது.

Also Read This: சுபமுகூர்த்தம் குறிக்கும் போது நாம் என்ன கவனிக்க வேண்டும்?

வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சுப முகூர்த்தம் குறிப்பதை தவிர்க்க வேண்டும். இருவரது ராசி லக்னமும் ஒருவருக்கொருவர் 6, 8, 12 ஆம் வீடுகளில் மறையக் கூடாது. முகூர்த்த நேரம் குறிக்கும் பொழுது ராகு காலம் எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக மேஷம், விருச்சிகம், சிம்மம் ஆகிய லக்கினங்களை தவிர்க்க வேண்டும். சுப முகூர்த்தம் குறிக்கும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.