திருமண பொருத்தம் பார்ப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கிறது தெரியுமா?

161

திருமண பொருத்தம் பார்ப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கிறது தெரியுமா?

ஐந்தே நிமிடத்தில் பொருத்தம் பார்த்து விடலாம் என்கிற புத்தகமும் மொபைலில் திருமண பொருத்தம் சாஃப்ட்வேர்கள் இதை வைத்தே பத்துக்கு இத்தனை பொருத்தம் அதுசரியில்லை, இதுசரியில்லை என இவர்களாகவே பல நல்ல வரன்களின் ஜாதகங்களை தவறவிடுகிறார்கள். இதனால் பல நல்ல ஜோடிகள் சேராமல் போகிறார்கள்.

குறிப்பாக இன்றுள்ள ஒருசில ஜோதிடர்கள் தசவித பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வசியம் இல்லை, கணம் இல்லை, ஆறாம் ராசி எட்டாம் ராசி என நிராகரித்து விடுகிறார்கள். வாழ்க்கையை பத்து பொருத்தங்கள் மட்டுமே நிர்ணயம் செய்வதில்லை. ராசி கட்டத்தில் உள்ள கிரக நிலைகளும் தசா புத்திகளுமே என்பதை பலரும் உணர்வதில்லை.

ஏழில் சூரியன் எட்டில் சுக்கிரன் இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ள ஜாதகங்கள் பெருவாரியானது நிராகரிப்பது வேதனையானது. நம் தோஷத்துடன் பிறந்தால் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பதால் தோஷம் சாம்யம் ஆகிவிடும் என்பது பலரும் புரிந்து கொள்வதில்லை.

இதனை பாப சாம்யம் என ஜோதிட சாஸ்த்திரம் சொல்கிறது. நமது அப்பாவுக்கோ மாமா யாருக்கேனும் திடீர் என உடல்நலம் சரியில்லாமல் போகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்.

மருத்துவ உபகரணங்கள் இங்கு இல்லை. கோவை அல்லது சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அனுப்பி வைப்பார்கள். அங்கு சிகில்சை அளித்து காப்பாற்றி விடுவார்கள்.

அதை விடுத்து உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையே சிகிச்சை அளித்து உயிருக்கு ஆபத்து ஆகிவிட்டால் நாம் சும்மா விடுவோமா? மருத்துவத்தில் உள்ள அறிவும் மற்ற துறைகளில் உள்ள அறிவும் ஜோதிடத்தில் இருப்பதில்லை.

ஜோதிட புத்தங்களை படித்து ஜோதிடம் பார்க்கிறேன் பேர்வழி என கோட்ச்சார பலனை வைத்து சொல்வது பலன் சொல்வது கிரக சேர்கை சரியில்லை என ஜாதங்களை நிராகரிப்பது என்று ஒருசில கத்துகுட்டி ஜோதிடர்கள் பலர் உண்டு.

திருமண வாழ்க்கை என்பது இறைவன் சேர்த்து வைக்கும் வைபவமாகும். இதனை உணர்ந்து செயல்பட்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.