துவண்டு கிடக்கும் மிதுன ராசி அன்பர்களே !!

38
துன்பத்தில் துவண்டு கிடக்கும்  மிதுன ராசி அன்பர்களே !!
துன்பத்தில் துவண்டு கிடக்கும் மிதுன ராசி நண்பர்களே , என்ன தலைப்பு எதிர் மறையாக உள்ளதே என்று படிப்பவர்களுக்கு தோன்றும் . ஆனால் மிதுன ராசியினருக்கு மட்டும் தான் அவர்களின் மன குமுறலின் வெளிப்பாடாக இது தெரியும் . ஆம் மிதுன ராசியினர் கடந்த சனி பெயர்ச்சி நடந்த ஜனவரி 2020 முதல் , தங்களின் ஜாதக வலு மற்றும் தசா புக்திகளுக்கு ஏற்ப வாழ்க்கையில் இறக்கங்களை சந்தித்து வருகிறார்கள்  . ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் முக்கியமான மோசமான காலக்கட்டங்கள் என்று குறிப்பிடப்படுவது , அவரின் ஜாதகத்தில் அவயோக தசைகள் நடக்கும் காலம் அதனை  அடுத்தது ராசிக்கு ஏற்ற அஷ்டம சனி மற்றும்  ஏழரை சனியின் ஜென்ம சனியின் காலக்கட்டங்கள் ஆகும் . பொதுவாக அஷ்டம சனியின் தாக்கங்கள் ஜென்ம சனியை விட இரண்டு மடங்கு இருக்கும்.  ஏனென்றால் ஏழரை சனி செய்யும் ஏழரை முதல் எட்டு வருடங்கள்  செய்யும் பாதகங்களை , அஷ்டம சனி தனது இரண்டரை முதல் மூன்று வருடங்களில் மொத்தமாக ஜாதகருக்கு தந்து வாழ்க்கையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுவார் . ஜாதகம் எவ்வளவு வலுவாக இருந்தாலும் , தசா புக்திகள் யோகமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தி ஜாதகருக்கு நல்ல பலன்கள் தடுக்க கூடிய ஆற்றல்  இந்த அஷ்டம சனிக்கு  உண்டு  . அஷ்டம சனியில் என்ன நடக்கும் ? மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது ? என்பதை இந்த பதிவில் காணலாம் . நீங்கள் அஷ்டம சனியில் துன்பபட்டு கொண்டு இருக்கீர்களா ?உங்கள் ஜாதகத்தில் என்ன மாதுரி சம்பவங்கள் நடக்கும் ? அதில் இருந்து எப்பொழுது மீண்டு வர முடியும் ? என்பதை இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் கிரியிடம் உங்கள் ஜாதகத்தின் விவரங்களை, இந்த  வாட்சப் எண்ணுக்கு  அனுப்பி +91 9677824799 , குறைந்த கட்டணத்தில் தெளிவான ஜாதக விளக்கங்களை பெறுங்கள் .
அஷ்டம சனி என்றால் என்ன ? என்ன செய்யும் ?
ஒருவரின் ராசிக்கு தூர் ஸ்தானம் எனப்படும் எட்டாம் இடத்துக்கு சனி செல்வது அஷ்டம சனி எனப்படும் . சனி இந்த எட்டாம் பாவகத்தில் இருக்கும் போது ,  அதன் கெட்ட ஆதிபத்தியங்களான  வம்பு , வழக்கு , விபத்து , கண்டம் , நஷ்டம் மற்றும் மிக பெரிய மனக்கஷ்டங்களை தந்து ஜாதகரை பக்குவபடுத்துவார் . இதே போல் தான்  மாதத்தில் இரண்டு நாட்கள் சந்திரன் எட்டாம் இடத்துக்கு போகும் காலகட்டத்தை சந்திராஷ்டமம் என்கிறோம் அந்த நாளில் நல்ல காரியங்களை செய்வது தவறு என்று சொல்லப்பட்டது  . தற்பொழுது மிதுன ராசியினருக்கு மிதுன ராசியின் எட்டாம் வீட்டில் மகரத்தில் இருந்து அஷ்டம சனியை நடத்தி கொண்டு இருக்கிறார் . மிதுன ராசியில் மிருகசிரீஷம் மூன்றாம் மற்றும் நான்காம் பாதம் , திருவாதிரை 4 பாதங்கள் , பூனர் பூசம் முதல்  முன்று பாதங்கள் உள்ளது . இதில் மிருகசிரீஷம் 3 & 4 பாதங்களின் கடுமையான அஷ்டம சனி சென்ற வருடமும் , திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு இந்த வருடமும் , புனர் பூசத்தில் பிறந்தவர்களுக்கு அடுத்த வருடமும் நடக்கும் .
1. ஜாதகரை பொதுவாக புதிய தொழிலை தொடங்க வைத்து , அதன் மூலம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்துவார் . பங்குதார்களோடு தொழில் புரிபவராக அவர் இருந்தால் , அவரின் மற்ற பங்குதார்களின் ஜாதக வலுவுக்கு ஏற்ப பாதிப்புகள் குறையும் .
2. ஜாதகருக்கு முற்றிலும்  அதிர்ஷ்டம் இல்லாத நிலையை உருவாக்குவார் , வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் பிரச்சனை , வேலை மற்றும் திருமணம் தேடுவர்களுக்கு பலன் கிடைக்காத விரக்தி , செய்யும் வேலைகள் இழுத்துக்கொண்டு இருப்பதற்க்கான அமைப்புகள் ஏற்படுத்தி கொண்டு இருப்பார்  .
3. இந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு அவயோக தசைகளான 6 , 8 ஆம் அதிபதிகளின் தசா புக்திகள் நடந்து கொண்டு இருக்கும் போது  , அவரின் ஜாதகத்தில் சனி அசுப தொடர்புகளுடன் இருந்தால் கடும் பொருளாதார நெருக்கடி அல்லது ஜாதகருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மறைவு போன்ற நிகழ்வுகள் நடந்து ஜாதகரை 3 முதல் 4 மாதங்களுக்கு மனம்  பித்து புடித்த நிலைமைக்கு ஆளாக்கி விடுவார் . இந்த அமைப்பு உள்ள ஒரு  சில ஜாதக  நபர்களுக்கு வேறு விதமாக , அவருக்கு விபத்து நடந்து ஒரு சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையும் ஏற்படும் .
4. ஜாதகரை வம்பு , வழக்கு போன்ற பிரச்சனைகளில் மாட்டி அவர்களை அலைக்கழித்து கொண்டு இருப்பதும் இந்த காலகட்டம் தான் , ஒருவரின் அஷ்டம சனியின் போது  அவர் ஜாதகத்தின் 12 ஆம் வீட்டில் சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ  கிரகங்கள் சம்பந்தம் ஏற்பட்டு  12 ஆம் மிகுந்த பாவ நிலையில் இருந்து,  அந்த கிரகத்தின்  தசா நடக்கும் பொது ஜாதகரை சிறைக்கு அனுப்புவதும் இந்த அஷ்டம சனியின் ஒரு அமைப்பு  ஆகும் .
நான் மேல் சொன்ன அமைப்புகள் ஒருவரின் ஜாதகத்தில் சனி சுப ஒளி தொடர்புடன் இருந்து , லக்கினம் மற்றும் லக்கினாதிபதி சுப வலுவுடன் இருக்கும் போது மட்டு படுத்தபடும் . மேலும்   யோக தசைகள் நடக்கும் போது  இந்த பாதிப்புகளின் தாக்கங்கள் குறையும் . புயலுக்கு பின் அமைதி ஏற்படுவது போல , அஷ்டம சனியின் இறுதி பகுதியில் அந்த ஜாதகரின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான நகர்வுகளை இதே சனி அமைத்து அவர்களுக்கு ஒரு நல்ல வழி  தருவார் . எல்லாம் வல்ல இறைவன் இந்த  மிதுன ராசி அன்பர்களை இந்த காலகட்டத்தில் இருந்து காத்து அருள வேண்டும் .