நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும்!

76

நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும்!

டிசம்பர் 14 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (14-12-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாக வேலை கிடைக்கும். பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபடுவீர்கள். மது, மாது விசயங்களில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: மகிழ்ச்சிக்குரிய நாள். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கல்வித் தடை நீங்க விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் பஞ்சு திரி ஏற்றி வழிபட வேண்டும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை.

மிதுனம்: மகிழ்ச்சிக்குரிய நாள். பயணங்களினால் வெற்றி உண்டு. பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். பிஸினஸ் விசயத்தில் முன்னேற்றம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் சந்தோஷம் நிலவும்.

கடகம்: மிகுந்த வெற்றிகளை தரக் கூடிய நல்ல நாள். தன வருமானம் வரும். விநாயகரை வழிபட வேலை கிடைக்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

சிம்மம்: பரபரப்பு இருக்கும். காரியங்கள் யாவும் வெற்றியாக முடியும். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் பரிபூரணமாக முடியும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. நல்ல வேலை கிடைக்கும். முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி: பல மாறுதல்களை கொண்டு வந்து தரும். நெருங்கிய உறவுகளில் கோபம் வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மற்றவர்களது கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

துலாம்: அற்புதமான நாள். விநாயகருக்கு தோப்புக்கரணம் போட வேண்டும். பதவி உயர்வு, குடும்பத்தில் சந்தோஷம், பயணங்களில் வெற்றி உண்டு.

விருச்சிகம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். நல்ல நல்ல சந்தோஷமான காரியங்கள் உண்டு. காமாட்சி அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட பண உதவிகள் கிடைக்கும்.

தனுசு: வெளிநாட்டு யோகம் கூடி வரும். நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும். வியாபாரம் நன்றாக இருக்கும்.

மகரம்: பொறுமையாக இருக்க வேண்டும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. வியாபாரத்தில் நல்ல நோக்கங்கள் நிறைவேறும்.

கும்பம்: கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ரொம்ப அன்னியோன்யம் இருக்கும். கட்டிய மனைவியை காதலிக்க வேண்டும். பிஸினஸ் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல சூழல் நிலவும்.

மீனம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி வரும்.