நான் வீஏஓ (VAO) ஆக முடியுமா?

64

நான் வீஏஓ (VAO) ஆக முடியுமா?

இன்றைய இளைஞர்கள் அரசு வேலையிலும், வெளிநாட்டு வேலைகளில் தான் மிக ஆர்வம் ஆக உள்ளனர். காலனா ஆனாலும் அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்று விடாபிடியாக இருப்பார்கள். இந்த கொரோனா தாக்கத்திலும் நிலையான வருவாய் வருவது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான்.

நமது ஸ்வஸ்திக் டிவியின் இணைய வாசகர்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஆவதற்கான ஜாதக அமைப்பு என்னவென்று கேட்டார்கள், அவர்களுக்கு பதில் கூறும் பதிவு இது. பொதுவாக ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் அல்லது பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட், கவுன்சிலர் அல்லது நகராட்சி, மாநகராட்சியில் பதவி வகிக்க வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் மக்களின் சேவையை குறிக்க கூடிய சனி சுப தொடர்புகளுடன் இருக்க வேண்டும்.

சனி மக்களை குறிக்கும் கிரகம். சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகம். இந்த இரண்டு கிரகங்களின் நிலையை பொறுத்து அவர்களுக்கு பதவி கிடைக்கும். உங்கள் ஜாதகத்தின் நடப்பு பலன்களை தெரிந்து கொள்ள நமது ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிட கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் தெளிவான பலன்களை பெறுங்கள்.

கிராம அலுவலர் ஆக வேண்டிய ஜாதக அமைப்புகள்:

சூரியன் சுப தொடர்பு பெற்று, சிம்மத்துடன் சனி சுபமாகி தொடர்பு கொள்வது இந்த அமைப்பை குறிக்கும். கூடுதலாக கும்பம் சுபமாக இருக்க வேண்டும். ஜாதகருக்கு உரிய வயதில் யோக தசைகள் வரும் போது, அவருக்கு பதவி கிடைக்கும். மேலும் ஆறாம் ஸ்தானம் எனும் வேலை ஸ்தானம் மற்றும் அதன் அதிபதி சுபமாக வலுத்து இருப்பவர்களுக்கு நிலையான அரசு உத்தியோகம் இருக்கும்.

மேல் சொன்ன அமைப்பில் உள்ளவர்களுக்கு அவ யோக தசா வரும் போது வேலையில் பிரச்சனை மற்றும் மேல் அதிகாரியுடன் மன கசப்புகள் ஏற்படும். கூடுதலாக அஷ்டம சனி அல்லது ஜென்ம சனி நடக்கும் போது பதவி பறிபோகும் அல்லது இவர் ராஜினாமா செய்யும் நிலை ஏற்படும்.

கவுன்சிலர் அல்லது பஞ்சாயத்து போர்டு/நகராட்சி தலைவராக வேண்டிய ஜாதக அமைப்பு:

இந்த பதவிகள் குறிப்பிட்ட வருடம் மட்டும் அதாவது 5 வருடம் இருக்க கூடிய அரசாங்க பதவிகள், இதற்கு மேல் சொன்ன சனி மற்றும் சூரியன் சுப தொடர்புகளுடன் இருக்க வேண்டும், கூடுதலாக ஜாதகருக்கு யோக தசா மற்றும் கோட்சாரம் கை கொடுக்கும் போது அவர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த பதவியில் அமர்வார்கள். மேலும் இவர்களுக்கு 10 ஆம் இடம் எனப்படும் பதவி ஸ்தானமும், அதன் அதிபதியும் சுப வலுவுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த கட்டுரை உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று விடை பெறுகிறேன். ஜோதிட வாசகர்களுக்கு வேறு ஏதேனும் தலைப்பில் ஜோதிட கட்டுரை வேண்டும் என்றால் மேல் குறிப்பிட்ட எண்ணுக்கு வாட்சப் செய்யவும். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிப்பார்.