நான் CEO ஆவேனா? ஜாதக அமைப்புகள் எப்படி?

95

நான் CEO ஆவேனா? ஜாதக அமைப்புகள் எப்படி?

நான் CEO (சிஇஓ, பன்னாட்டு கம்பெனியின் முதலாளி) ஆவேனா? ஜாதக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும்?

வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் என்று புகழ் பெற்ற தமிழ் பாடல் உண்டு. இந்த சமுதாயத்தில் எப்படியாவது பிழைத்தால் போதும் என்று ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் பலரும், இப்படி தான் பிழைக்க வேண்டும் என்று தங்களுக்கான துறையை தேர்ந்து எடுத்து வெறித்தனமாக உழைத்து சாதிப்பவர்கள் சிலரும் உள்ளனர்.

உலகமயமாக்கலின் தாக்கத்தினால் என்று ஒருவர் திருப்பூரில் இருந்து கொண்டு ஜப்பானுக்கு பனியன் அனுப்பவும், ஈரோட்டில் இருந்து கொண்டு இத்தாலிக்கு மஞ்சள் அனுப்பி வியாபாரமும் செய்ய முடியும். பல பேருக்கு இன்று கார்ப்பரேட் உலகின் தலைவராக இருக்கும் சுந்தர் பிச்சையை போல பன்னாட்டு கம்பெனிகளில் உயரத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒருவர் CEO என்னும் பெரும் நிறுவனத்தின் தலைவராக வேண்டும் என்றால் என்ன ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்று இந்த பதிவுகளில் பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது பலன்களை அறிய விரும்பினால் இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக பலன்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்கள் பெறுங்கள்.

CEO ஆவதற்கான ஜாதக அமைப்புகள்:

  1. ஒருவர் CEO ஆக இருப்பது, அந்த பன்னாட்டு கம்பெனியில் உள்ள 1000 பேருக்கு தலைமை தாங்கும் அமைப்பு. பொதுவாக தலைமை தாங்கும் அமைப்பை குறிக்கும் கிரகம் சூரியன். சூரியன் சுப தொடர்புகளுடன், திக் பலம் எனும் ஜாதகரின் 10 ஆம் வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் மிக பெரிய நிறுவனத்தின் தலைவர்களாக இருப்பார்கள். ஒருவர் தனது குடும்ப கம்பெனியில் தலைமை அதிகாரியாக இருப்பாரா? அல்லது பன்னாட்டு கம்பெனியில் நியமிக்கப்படுவாரா? என்பதை காண அவரது 10 ஆம் பாவகம் மற்றும் 6 ஆம் பாவகத்தின் நிலையை அறிய வேண்டும்.
  2. 10 ஆம் பாவமும் அதன் அதிபதியும், சூரியனும் ஒரு சேர வலுவாக உள்ளவர்கள், தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துவார்கள் அல்லது அவரது காலத்தில் அவரே ஒரு நிறுவனத்தை நிறுவி வழி நடத்துவார்.
  3. 6 ஆம் பாவகம் மற்றும் அதன் அதிபதியும் கூடுதலாக சூரியனும் அதிக சுப தொடர்பில் உள்ள போது அவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி தலைமை பதவியை அடைவார்கள்.
  4. இவர்களின் ஜாதகத்தில் பெரும் பொருள் சேருவதற்கான அமைப்புகளும் ஜாதகத்தில் காட்டும், ஜாதகரின் செல்வ நிலையை குறிக்கும் 2 ஆம் பாவகம், தர்ம வீடு எனும் 9 ஆம் பாவகம், லாபங்களை குறிக்கும் 11 ஆம் பாவகம். இந்த பாவங்களின் அதிபதிகள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு அல்லது ஒருவர் மற்றொருவர் வீட்டில் அமர்ந்து கொண்டோ, பரிவர்த்தனை ஆகி கொண்டு இருப்பார்கள். இந்த அமைப்பு அவர்கள் கோடிகளை சம்பாதிக்கும் மகா தன யோகத்தை குறிக்கும்.
  5. இந்த ஜாதக அமைப்புகள் இருந்து ஜாதகரின் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுவுக்கு ஏற்ப ஜாதகர் பெரும் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இதில் குறிப்பாக யோக தசைகள் ஜாதகருக்கு வர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் தொழிலை செழிக்க வைப்பார் என்று சொல்லி விடை பெறுகிறேன்.