நீங்கள் ரிஷப லக்கினத்தில் பிறந்தவரா? எப்பொழுது நல்ல நேரம்?

103

நீங்கள் ரிஷப லக்கினத்தில் பிறந்தவரா? எப்பொழுது நல்ல நேரம்?

ஸ்வஸ்திக் டிவி நேயர்களுக்கு மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்களை சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். கால புருஷனின் இரண்டாவது வீடு ரிஷப லக்கினம். சுக்கிரனின் சொந்த ராசி, சிர ராசி (நிலையான வீடு). இது பெண் ராசி.

ரிஷப ராசியில் பிறந்தவர்களிடம் ஒரு நளினம் மற்றும் அழகு உணர்ச்சி இருக்கும். லக்கினம் சுபமாக இருந்து பிறந்தவர்கள் அழகாக மற்றும் களையாக இருப்பார்கள். ரிஷப ராசி நிலையான தன்மை கொண்டதால் இவர்கள் ஒரு நிலையான கொள்கை கொண்டவர்கள்.

மேலும் படிக்க: மேஷ லக்கினத்தில் பிறந்தவரா நீங்கள்?

இந்த ராசியின் குறியீடு காளை மாடு, இந்த காளையை போன்ற கடின உழைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ரிஷப லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் அன்னையின் மீது அளவு கடந்த  அளவுக்கு அவர்கள் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் (குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்).

இது இந்த லக்கினம் மற்றும் ராசியில் பிறந்தவர்களின் பொது பலன்கள். உங்கள் ஜாதகத்தில் என்ன பலன்கள் நடந்து கொண்டு இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதகத்தின் தெளிவான பலன்களை குறைந்த கட்டணத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களின் பொது தசா பலன்கள்:

  1. ரிஷப லக்கினம் சுக்கிரன் அணி லக்கினமாக இருப்பதால் சனி, புதன் மற்றும் சுக்கிரன் இந்த லக்கினத்துக்கு யோகராகவும், இந்த கிரகங்களின் வீட்டில் அமர்ந்த ராகுவும் யோகம் தரக் கூடிய நிலையில் இருப்பார். இதில் சனி இந்த லக்கினத்துக்கு ராஜா யோகாதிபதியாக வருவார். சனி ஆறாம் இடத்தில் உச்சம் பெற்று தசா நடத்தும் போது நல்ல பலன்கள் இருக்கும்.
  2. ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய்  மற்றும் குரு அவ யோகர்களாக வருவார்கள். இதில் குறிப்பாக குரு லக்னத்திற்கு முக்கிய அவ யோகர் ஆவர். ரிஷப லக்னத்திற்கு குரு தசா சிறு வயதில் வந்து முடிவது யோகம் அல்லது வராமலே இருப்பது நல்லது. பருவ வயதில் 20 – 30 வயதில் தசா நடப்பவர்களுக்கு 16 வருடம் முன்னேற்றமே இல்லாமல் ஆகி விடும்.
  3. ரிஷப லக்கினத்தில் பிறந்து சனி, புதன், கேது மற்றும் சுக்கிரன் தசை வரிசையாக வர பெற்றவர்கள் யோகர்கள். இதில் இந்த கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது கூடுதல் யோகம் இருக்கும். ரிஷப லக்கினத்தில் பிறந்து சுக்கிரன் தனித்து 11இல் உச்சம் பெற்று தசை நடத்தும் போது ஜாதகர் மகா செலவந்தராக மாறுவர்.
  4. சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் ராகு, குரு தசைகள் வரிசையாக வருபவர்கள் அதிர்ஷ்டம் குறைவாக இருப்பார்களாக இருப்பார்கள். இந்த தசைகள் பெரிய யோகங்களை தராது. இந்த அவ யோகர்கள் ரிஷப லக்னத்துக்கு 3,11இல் நட்பு நிலையில் இருக்கும் போது ஓரளவு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பாக குரு தனது 8 ஆம் வீடான தனுசு வீட்டுக்கு 8, 12 இல் மறையும் போது கேடு பலன்கள் இருக்காது.
  5. ராகு மற்றும் கேது சனி, புதன், சுக்கிரன் வீடுகளில் அமர்ந்து சுக்கிரன் அல்லது தனித்த புதன் அல்லது சனியின் பார்வையை வாங்கும் போது ஓரளவு நல்ல பலன்களும், வீடு கொடுத்தவர் உச்சமாகி இருக்கும் போது அபார பலன்களும் இருக்கும். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று விடை பெறுகிறேன்.