நீசம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

189

நீசம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்று கூறுவது உண்டு. அளவுக்கு குறைந்தாலும் அது பலன் அளிக்காது என்பது தான் உண்மை. ஜோதிடம் கிரகங்களின் ஒளி மற்றும் இருளை அடிப்படியாக கொண்டு உயிர்களின் விதியை கணக்கிடும் கலை. ஜோதிடத்தில் கிரகங்களின் வலுவை ஆட்சி, உச்சம், நீசம் என்று வகைப்படுத்தப்படும். இதில் உச்சம் மற்றும் நீசம் என்பது கிரகங்கள் பூமிக்கு அதிக ஒளி கொடுக்கும் நிலை மற்றும் குறைந்த ஒளி கொடுக்கும் நிலை என்று இரு வகைப்படுத்தப்படும்.

உதாரணமாக, ஜோதிடப்படி சூரியன் சித்திரை மாசம் மேஷ ராசியில் உச்சம், அப்பொழுது நமது இந்தியாவில் சூரியனின் வெயில் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியும், அதே சூரியன் ஐப்பசி மாதம் துலாம் ராசியில் நீச்சம் அடைவார். அந்த மாதம் சூரியனின் வெயில் தாக்கம் குறைவாகவே இருக்கும். கிரகங்கள் நீசம் ஆவது என்ன பலன் தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தின் நடப்பு பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை தொடர்பு +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நீசம் பெற்ற கிரகத்தின் நிலை மற்றும் பலன்:

பொதுவாக ஒரு கிரகம் நீசம் பெறுகிறது என்றால் அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் எனும் பண்புகள் ஜாதகருக்கு கிடைக்காது. இந்த நீசம் பெற்ற கிரகம் நீச்ச பங்கம் எனும் நிலையை அடைந்தால் இழந்த வலு மற்றும் ஒளியை திரும்ப பெறும் அதாவது நீசம் பெற்ற கிரகத்திற்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் அடைவது, நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை அடைவது, பௌர்ணமி சந்திரனின் ஒளியை பெறுவது இது போன்ற நிலையில் நீசம் பெற்ற கிரகம் தனது வலுவை திரும்ப பெறும். நீசம் பெற்ற கிரகம் பாவ தொடர்பு பெறுவது மிகவும் மோசமான அமைப்பு, அந்த கிரகம் சுத்தமாக வேலை செய்யும் அமைப்பை இழக்கும்.

சூரியன் நீசம்:  சூரியன் நீசமாவது, அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை மற்றும் லாபம் கிடைப்பதை தடுக்கும். தந்தையின் உறவு அமைப்புகளில் நல்ல பலன்கள் இருக்காது. சூரியன் சுப தொடர்பு மற்றும் நீச பங்கம் அடையும் போது பலன்கள் நல்ல விதமாக அமையும்.

சந்திரன் நீசம்: சந்திரன் நீசமாவது, மனம் மற்றும் தாய் சம்பந்தப்பட்ட அமைப்புகளில் குறைகள் இருக்கும். சந்திரன் சுப தொடர்பு, நீச பங்க அமைப்பு மற்றும் வளர்பிறை ஒளி நிறைந்த அமைப்புகள் இந்த பலன்களை மாற்றும்.

செவ்வாய் நீசம்: செவ்வாய் நீசமாவது, சகோதர உறவுகளில் விரிசல் மற்றும் நிலம், பூமி சம்மந்தப்பட்ட அமைப்புகளில் லாபம் குறையும், தைரியம் குறைந்தவராக ஜாதகர் இருப்பார். செவ்வாயின் சுப தொடர்பு மற்றும் நீச பங்கம் அடையும் போது இந்த பலன்கள் நல்ல விதமாக அமையும்.

குரு நீசம்: குரு நீசமாவது, செல்வம் மற்றும் பிள்ளைகளின் உறவு அமைப்புகளில் ஏதேனும் குறைகள் இருக்கும். குருவுக்கு சுப தொடர்பு மற்றும் நீச பங்கம் அடையும் போது பலன்கள் நல்ல விதமாக அமையும். தனித்த நீசமான குரு (பாவ தொடர்பு இல்லாதபோது) ஒரு மனிதருக்கு தேவையான பொருளும், ஒரு குழந்தையும் கொடுக்கும் தகுதி உடையவர்.

சனி நீசம்: சனி நீசமாவது, ஆயுள் மற்றும் உடல் நலம் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் சனி நீசமாவது உடல் உழைப்பின் மூலம் பொருள் ஈட்ட வேண்டிய நிலை இருக்காது ஜாதகர் செல்வந்தராகவோ அல்லது மூளையின் மூலம் பொருள் சம்பாதிப்பவராக இருப்பார். சனி சுப தொடர்பு அடையும் போது பலன்கள் நல்ல விதமாக அமையும்.

புதன் நீசம்: புதன் நீசமாவது, நுண்ணறிவு எனப்படும் கணிதம், பேச்சு திறமை போன்றவை ஜாதகருக்கு குறையும், தாய் மாமன் உறவுகளில் சமூகம் இருக்காது பாவ தொடர்புகளுடன் இருக்கும் போது புதன் சுப தொடர்பு மற்றும் நீச பங்கம் அடையும் போது பலன்கள் நல்ல விதமாக அமையும்.

சுக்கிரன் நீசம்: சுக்கிரன் நீசமாவது, திருமணம் மற்றும் மணவாழ்க்கையில் சில குறைகள் மற்றும் சொகுசு வாழக்கைக்கு தடை போன்றவை பாவ தொடர்புடன் இருக்கும் போது நடக்கும். சுக்கிரன் சுப தொடர்பு மற்றும் நீச பங்கம் அடையும் போது பலன்கள் நல்ல விதமாக அமையும். தனித்த நீசமான சுக்கிரன் (பாவ தொடர்பு இல்லாதபோது) ஒரு மனிதருக்கு தேவையான செல்வங்களும், ஒரு நல்ல மனைவியும் கொடுக்கும் தகுதி உடையவர்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு குறைவில்லா வாழ்வு தருவான் என்று இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.