நோயின் பிடியிலிருந்து எப்பொழுது விடுபட முடியும்?

54

நோயின் பிடியிலிருந்து ஒருவர் எப்பொழுது விடுபட முடியும்? ஜோதிட விளக்கம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! என்று நமது பெரியவர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்பது, இப்பொழுது கொரோனா யுகத்தில் உயிருக்கு  பயந்து பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நமக்கு உரைக்காமல் இல்லை. ஜோதிடப்படி ஒருவர் உடல் ஆரோக்கியமானவராக? அல்லது நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறாரா? என்று கூற முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.

ஜோதிடப்படி ஒருவரின் உடலை குறிக்கும் இடம் லக்கினம், மனதை குறிக்கும் இடம் அவரது ராசி, நோயினை குறிக்கும் பாவகம் 6 ஆம் பாவகம். ஆயுளை குறிக்கும் பாவகம் 8 ஆம் பாவகம். ஜாதகரின் 6 ஆம் பாவகம் மற்றும் 8 ஆம் பாவக அதிபதிகள் அந்த பாவகத்தோடு சம்பந்தபட்டு அவர்கள் பாவ தொடர்புடன் இருந்து தசா அல்லது புக்தி நடக்கும் போது ஜாதகரின் வலுவுக்கு ஏற்ப அவருக்கு நோய் மற்றும் கண்டங்களை தரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஒருவரின் உடல் நலம் எப்பொழுது கெடும்? எப்பொழுது உடல் நலம் சரி ஆகும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் ஜாதகத்தில் என்ன பலன்கள் நடந்து கொண்டு இருப்பதை அறிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை + 91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் நிறைவான தகவல்களை பெறுங்கள்.

நோய் வருவதற்கான அமைப்புகள்:

  1. ஜாதகருக்கு பொதுவாக ஆறாம் அதிபதி தசா அல்லது புத்தி வரும் போது அவருக்கு நோய் மற்றும் உடல் நலத்தை பாதிக்கும் அமைப்புகள் நடக்கும். இதை உறுதிப்படுத்த ஆறாம் அதிபதி மற்றும் ஆறாம் பாவகம் சுப தொடர்புகளுடன் உள்ளதா அல்லது பாவ தொடர்புகளுடன் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். ஒருவருக்கு லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி வலுத்தால் மேலும் அவர் ஆறாம் பாவகம் உடன் தொடர்பு கொள்ளும் போது இந்த பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
  2. நமது உடலின் பாகங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு கிரகத்தின் ஆதிபத்தியமாக இருக்கும் உதாரணமாக ஒருவரின் நெற்றி சூரியனை குறிக்கும், சந்திரன் நமது மூளையை குறிக்கும், குரு வயிற்று பகுதி, சனி பாதம் என வேத ஜோதிடம் சொல்கிறது. ஜாதகரின் ஜாதகத்தில் எந்த கிரகம் பாவ தொடர்புகளுடன் கடுமையாக பாதிக்கப்பட்டு மற்றும் அதன் தசா புத்திகள் வருகிறதோ அப்போது அதன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் நமக்கு பாதிக்கப்படும்.
  3. கிரகங்களை போலவே 12 ராசிகளும் மனித உடலின் தனி தனி உறுப்புகளை குறிக்கும், லக்கினம் முதல் 12 ஆம் வீடு வரை, உடலின் தலை பகுதியில் தொடங்கி பாதங்களை குறிக்கும் 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதலில் கிரகங்களும் பிறகு ஜாதகருக்கு அவயோக தசைகள் நடக்கும் பொது ஜாதகரின் எந்த பாவகம் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பகுதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழும்.
  4. நோய் எப்பொழுது குணமாகும்? என்பதை கண்டறிய வேண்டும் என்றால், ஜாதகரின் 6 ஆம் வீட்டுக்கு 6 ஆம் வீடான 11 ஆம் வீடு எப்படி உள்ளது? அதன் அதிபதி என்ன நிலையில் இருக்கிறார்? என்பதை பார்க்க வேண்டும். நீண்ட நாள் உடல் நலக்குறைவால் இருக்கும் ஜாதகர் ஒருவர் குணமாக வேண்டும் என்றால் அவருக்கு 11 ஆம் அதிபதியின் தசா மற்றும் புக்தி வர வேண்டும் அல்லது 11 ஆம் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசா வர வேண்டும். 6 ஆம் அதிபதி நோயை கொடுப்பவர் என்றால், 11 ஆம் அதிபதி நோயை குணப்படுத்துபவர். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நோயற்ற வாழ்வை அருள்வார் என்று வேண்டி கொள்கிறேன்.