பரமபதம் போல வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் தரும் ராகு!

270

பரமபதம் போல வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் தரும் ராகு!

வாழ்க்கை ஒரு  பரமபதம் விளையாட்டு போன்றதே, ஒருவருக்கு எந்த நேரத்தில் ஏற்றமும் எந்த நேரத்தில் சறுக்கல் வரும் என்பதை இறைவன் ஒருவனே அறிவான். ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடும் சக்தி வாய்ந்த கிரகங்கள் சனி மற்றும் ராகு எனும் பாவ கிரகங்களே.

ஏனென்றால் இந்த சனி தசா ஒருவருக்கு 19 வருடமும், ராகு தசா 18 வருடமும் ஆளுமை செய்யும். வாழ்க்கையின் கால் பகுதி இந்த கிரகங்களின் தாக்கத்தில் இருப்பதால் இந்த கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் கெடாமல் இருப்பது நல்லது. இதில் சனி சுப தொடர்புடன் இருக்கும் போது நன்மைகளும், பாவமாக இருக்கும் போது கொடுமைகளும் நடப்பது நாம் அறிந்ததே.

ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் ராகு மட்டும் சுப தொடர்புடன் வீடு கொடுத்தவர் வலுவுடன் இருந்து விட்டால் அந்த ஜாதகரின் காட்டில் அடை மழை தான், “ஆண்டி அரசன் ஆகும்” ராஜ போக வாழ்க்கை அமையும். அதே ராகு பாவ தொடர்புடன் வீடு கொடுத்தவர் நீச மற்றும் பகை நிலையில் இருந்தால் “அரசனும் ஆண்டி ஆன” கதை தான் இங்கு பலிக்கும். ராகு பொதுவாக ஒரு நிழல் கிரகம் சுயமாக பலன் தரும் தகுதி அற்றது. இந்த ராகு தசா ஒருவருக்கு யோகம் செய்யுமா? அல்லது பாதகம் செய்யுமா என்று இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் ஜாதகம் என்ன பலன்களை தங்களுக்கு செய்து கொண்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் நிறைவான பலன்களை பெறுங்கள்.

ராகு தசா என்ன செய்யும்:

  1. பொதுவாக ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகர வீடுகளில் இருக்கும் போது நல்லது செய்யும் என்று ஜோதிட மூல நூல்கள் சொல்கிறது. ஆனால் இந்த வீடுகளில் சுப தொடர்புடன் இருக்கும் ராகு தான் நல்ல பலன்களை செய்கிறது.
  2. ராகு நல்ல பலன்களை தர வேண்டும் என்றால் ஜாதகரின் லக்கினத்துக்கு 3 மற்றும் 11 ஆம் பாவகங்களில் இருக்க வேண்டும். இந்த பாவகங்களில் இருக்கும் ராகு பொதுவாக தீய பலன்களை தருவது இல்லை.
  3. ராகு எந்த பாவகத்தில் இருக்கிறதோ அந்த பாவகத்தின் உயிர் காரகத்துவம் கெடும், உதாரணமாக ஒன்றாம் பாவகத்தில் இருந்தால் நமது உடல் நலம் பாதிக்கப்படும், இரண்டாம் பாவகத்தில் இருந்தால் குடும்பத்தின் ஒற்றுமை கெடும். மூன்றாம் பாவகம் இளைய சகோதரனையும், நான்காம் பாவகம் தாயையும், ஐந்தாம் பாவகம் பிள்ளைகளையும், ஏழாம் பாவகம் மனைவியையும், ஒன்பதாம் பாவகம் தந்தையும் கெடுத்து தான் ராகு பலன் தரும்.
  4. ராகு குருவின் வீட்டில் இருந்து சுக்கிரன் தொடர்பில் இருக்கும் போது அல்லது சுக்கிரன் வீட்டில் இருந்து குருவின் வீட்டில் இருக்கும் போது நல்ல பலன்களை தரும். (குறிப்பு அந்த வீடு ஜாதகருக்கு ஆறாம் மற்றும் எட்டாம் பாவமாக இருக்கக்கூடாது)
  5. ராகு செவ்வாயின் வீடுகளில் இருந்து சனியின் தொடர்புகளில் இருந்தோ அல்லது சனியின் வீடுகளில் இருந்து செவ்வாயின் தொடர்புகளில் இருந்தாலும் கேடு பலன்களையே தரும். சனி மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து அல்லது இருவரின் பார்வையை வாங்கும் ராகு கொடூரமான தாக்கங்களை தனது தசையில் தந்து ஜாதகரை துன்புறுத்துவார். எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று வேண்டிக்கொள்கிறேன்.