பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவார்களா?

136

பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவார்களா?

கர்ம வினைகளுக்கு ஏற்ப வாழ்க்கையில் அனுபவிக்கும் பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை. ஆனால், நாம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம்.

அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார். இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை. பாரம் குறைந்து விட்டது. இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்.

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள்.

வினைகழிந்த மகான்களை வணங்க நமது பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை. ஜீவ சமாதிகளில் வணங்க இன்றும் இது நிகழ்கிறது. ஆகவே எந்த ஊருக்கு போனாலும் அங்கு இருக்கும் ஜீவ சமாதிகளை தேடி வழிபடுங்கள். உங்கள் துன்பங்கள் கண்டிப்பாக குறையும்.