புதிதாக யூடியூப் சேனல் தொடங்குவீர்கள்!

64
இன்றைய ராசிபலன்

புதிதாக யூடியூப் சேனல் தொடங்குவீர்கள்!

ஜனவரி 10 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (10-01-2023) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அற்புதமான நாள். கல்வியறிவு மேம்படும் கணேஷனின் அனுக்கிரகம் கிடைக்கும். வீட்டில் விளக்கேற்றி தெய்வத்தை வழிபட வேண்டும். இந்த நாளில் விநாயகரை வழிபட வேண்டும்.

ரிஷபம்: உடல் நலன் முக்கியம். மார்பக நோய் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை எடுத்துக்கலாம். வீடு தொடர்பான பிரச்சனை வரலாம். விநாயகரை வழிபட வேண்டும்.

மிதுனம்: நல்ல மனசு படைத்தவர்கள். கல்வி, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. ஞாபக மறதி வரலாம். வெளிநாட்டு கல்வி வாய்ப்பு கூடி வரும். குடும்பத்தில் அன்னியோன்யம் இருக்கும். பொருளாதார உயர்வு நன்றாக இருக்கும். சக மனிதர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

கடகம்: முன்னேற்றகரமான நாள். தொட்டது துலங்கும். பண வருமானம் இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்: தெய்வத்தின் அனுகூலம் நிறைந்திருக்கும். ஒளிமயமான காலம் உண்டு. செயல்களில் வேகம், படபடப்பு இருக்கும். முன்னேற்றங்களும் இருக்கும். வாழ்க்கையில் நன்மைகளும் பெருகும் ஒரு நாள்.

கன்னி: உள்ளூர் வியாபாரம் நன்றாக இருக்கும். நடிகர், நடிகைகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கூடி வரும்.

துலாம்: ஆகச்சிறந்த நாள். தாய், தந்தையரின் ஆதரவு இருக்கும். நினைப்பதெல்லாம் வெற்றியாகும். யூடியூப் சேனல் தொடங்குவீர்கள். சோஷியல் மீடியால் புதிய கணக்கு தொடங்குவீர்கள்.

விருச்சிகம்: மிகச்சிறந்த நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய நாள். மூதாதையர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மனக்கவலை தீரும்.

தனுசு: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த ஒரு நாள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கல்வியில் வளர்ச்சி உண்டு.

மகரம்: எதைச் செய்தாலும் பொறுமையாக செய்ய வேண்டும். கருத்துக்கள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் அனுசரணை தேவை. மாணவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும்.

கும்பம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் உடல் நலனில் அக்கறை தேவை. நண்பர் எதிரியாக மாறும் சூழல் உண்டாகும். பொருளாதார உயர்வு இருக்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்: வேலை பார்க்கும் இடங்களில் மௌனமாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. வியாபாரிகளுக்கு அனுகூலமான நாள்.