மனம் போல் மாங்கல்யம் யாருக்கு? ஜோதிட ரீதியாக உங்கள் திருமண வாழ்க்கை!

42

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதும் , மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை . திருமணம் சிலருக்கு பெற்றோர்களால் பார்க்க பட்டு நடப்பதும் , ஒரு சிலருக்கு மனதுக்கு புடித்த பெண்ணை காதலித்து மணம் முடிப்பதும் நடக்கும் . சிலருக்கு பருவத்தில் நடக்கும் , சிலருக்கு 40 வயதில் நடக்கும் . சிலருக்கு தன்னுடைய சொந்தத்திலே அமையும் , ஒரு சிலருக்கு வேறு சமூகம் , வேற்று மதத்தில் அமையும் . சிலருக்கு ஒரு முறை மட்டும் நடந்து ராமனும் , சீதையும் போல் இணைபிரியா மனதுடன் குடும்ப வாழக்கை அமையும் . ஒரு சிலருக்கு சில வருடங்களில் மணமுறிவு ஏற்பட்டு ரெண்டாவது அல்லது மூன்றாவது வாழக்கையாக அமையும் . சிலருக்கு கரும்பு போல் தித்திப்பாக இருக்கும் , சிலருக்கு எதோ இறைவன் விட்ட வழி என்றும் வேறு வழி இல்லாமல் காலம் தள்ள வேண்டி வரும் . ஒருவரை பார்த்த உடனே பிடிப்பதுக்கும் , பார்த்த உடனே வெறுப்பதையும் ஜோதிட ரீதியாக விளக்க இயலும் .உங்கள் ராசி மற்றும் லக்கினத்தில் பிறந்தவர்கள் மேல் மற்றும் உங்கள் ராசி / லக்கினத்துக்கு நட்பு ராசி / லக்கினத்தில் பிறந்தவர்கள் மேல் உங்களுக்கு ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருக்கும் அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பார்கள் . உங்க திருமண வாழ்கை பற்றி அல்லது உங்களுக்கு அமைய போகும் திருமண வாழ்கை பற்றி அறிந்துகொள்ள நமது கட்டுரையின் ஜோதிட ஆசிரியர் கிரியை வாட்சப் மூலம் + 91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் இல்வாழ்க்கையின் சந்தேகங்களை குறைந்த கட்டணத்துடன் கேட்டு தெளிவு அடையுங்கள் .

இந்த கட்டுரையில் ஜோதிட ரீதியாக திருமண வாழ்கை எவ்வாறு அமையும் என்பதை பற்றியும் , காதல் திருமணத்துக்கு உண்டான ஜாதக அமைப்புகளை தெளிவாக அலசுவோம் .
ஜோதிட ரீதியான கிரக அமைப்புகள் :

1. ஒருவரின் மனைவி அல்லது கணவனை குறிக்க கூடிய ஜோதிட பாவக வீடு – 7 ஆம் பாவகம் ஆகும் . இந்த ஏழாம் பாவகம் சுப கிரங்கங்களின் வீடுகளாக அமைந்து , இந்த வீடு சுப ஒளி தொடர்பு ஏற்படும் பொழுது நமக்கு அமையும் திருமண வாழக்கை மனதுக்கு புடித்தாக இருக்கும் . பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமாக இருக்கும் . ஒரு சிலர் சொந்த மாமன் மகள் மற்றும் அக்கா மகள் / முறை மாமன் மீது காதல் வய படுவார்கள் அவர்களுக்கு 7 ஆம் வீடு தாய் மாமாவை குறிக்க கூடிய புதனின் தனித்த இருப்பினால் அல்லது பார்வையால் பார்க்கப்பட்டு சுபமாகி இருக்கும் .

2. ஒருவர் காதல் திருமணம் வெற்றிகரமாக பெற்றோர் விருப்பத்துடன் செய்ய மேல் சொன்ன அமைப்புடன் சுக்ரன் சம்மந்தப்பட்ட தசை புக்திகள் நடை பெற்ற வேண்டும் அல்லது சுக்கிரன் வீடுகளில் அமர்ந்த கிரங்களின் தசை , புக்திகள் நடைபெற வேண்டும் . ஜாதகரின் அன்னை மற்றும் தந்தை குறிக்க கூடிய 4 மற்றும் 9 ஆம் பாவகங்கள் கெடாமல் இருக்கும் பொது பெற்றோர் சம்மதமுடன் இனிய முறையில் நடைபெறும் . இந்த 4 மற்றும் 9 ஆம் பாவங்கள் கேட்டு இருக்கும் பொது பெற்றவர்களின் அனுமதி இல்லாமல் ஓடி பொய் திருமணம் செய்யும் நிலைமை ஏற்படும் .

3. ஒரு சிலர் பொருந்தா காதல் எனப்படும் வேற்று சமூகம் / வேற்று மதம் சார்ந்தவரை காதலிப்பது – 7 அம் இடம் அல்லது சுக்கிரன் ராகு / கேதுவால் பாதிக்க படும் பொது நடக்கும் . கூடுதலாக ராகு தசை வரும் பொது இது 100 சதவீதம் நடப்பதை நாம் பல ஜாதகங்களில் காணலாம் .

4. திருமண வாழ்கை நீடிக்க வேண்டுமானால் , ஏழாம் வீடு 11 ஆம் வீட்டை விட சுபமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும் . எவர் ஒருவரின் ஜாதகத்தில் 11 ஆம் இடம் 7 ஆம் இடத்தை விட வலுத்து இருக்கும் பொது அவரின் மணவாழ்வு அவயோக தசையில் முறிவு ஏற்படும் .

அனைவர்க்கும் பரம் பொருளின் அருளால் எண்ணம் போல் நல்ல மண வாழ்வு அமைய வேண்டிக்கொள்கிறேன் .