மன அழுத்தத்தில் இருக்கும் மகர ராசியினர் !

46
மன அழுத்தத்தில் இருக்கும் மகர ராசியினர் !
மகர ராசியினர் அனைவருக்கும்  வணக்கம் .  தற்பொழுது கோட்சாரப்படி உங்களுக்கு ஏழரை சனியின் முக்கியமான கட்டமான ஜென்ம சனி நடந்து கொண்டு இருப்பதால் , 40 வயதுக்குள் இருக்கும் அனைத்து மகர் ராசிக்காரர்களுக்கும் அவர்களின் வயது மற்றும் ஜாதகத்தின் தன்மை அடிப்படையில் விரும்பத்தக்கதாக நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கும் . இதை படிக்கும் பல பேருக்கும் சந்தேகம் இருக்கும் அட என்னடா இந்த ஜோசியகாரங்களுக்கு இதே வேலையா போச்சு , எப்போ பாத்தாலும் ஏழரை சனி , அஷ்டம சனினு சொல்லி நம்மை பயம் முறுத்திகிட்டு இருக்கறாங்கனு நெனச்சா , நான் உங்களுக்கு ஒரு நியாமான கேள்வி  வைக்கிறேன் . உங்கள் குடும்பத்தில் உள்ள அல்லது உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள மகர ராசி திருவோணம் நட்சரத்தில் பிறந்த நபர்களின் வாழ்க்கையை இந்த 2021 ஆரம்பம் முதல் எப்படி இருந்தது என்று கேட்டு பாருங்கள் , அப்பொழுது உங்களுக்கு உண்மை விலகும் . அவர் அவர்களின் வாழ்கை தரத்துக்கு ஏற்ப போராட்டங்களையும் , சங்கடங்களையும் சந்தித்து கொண்டு இருப்பார்கள் . மனித வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது சகஜம் தான் , ஜோதிடப்படி ஒரு மனிதன் தனது ஜென்ம சனியின் நடுப்பகுதியில் மற்றும் அஷ்டம சனியின் நடுப்பகுதியில் மன அழுத்தம் ஏற்படும் சோதனைகளை படங்களாக  கொடுத்து அதன் மூலம் வாழ்கையை  போதிக்கும் கடமைக்கு உட்பட்ட கிரகம் சனி .  உங்களுக்கு இப்பொழுது ஜென்ம சனி அல்லது அஷ்டம சனி நடந்து கொண்டு இருக்கிறதா ? உங்கள் ஜாதகத்தில் என்ன மாதிரி சங்கடங்கள் அல்லது சம்பவங்கள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு வாட்சப் மூலம் உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி , குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களை பெறலாம் .
மகர ராசிக்கு ஜென்ம சனியில் என்ன நடக்கும் ?
மகர் ராசியில் உத்திராடம் , திருவோணம் மற்றும் அவிட்டம் போன்ற மூன்று நட்சத்திரங்கள் உள்ளன . இதில் உத்திராடத்தில் பிறந்தவர்கள் சென்ற வருடம் முழுவதும் தங்கள் ஜென்ம சனியின் தாக்கங்களை அனுபவித்து முடித்து உள்ளனர் , திருவோணம் பிறந்தவர்கள் தற்பொழுது அனுபவித்து வருகின்றார்கள் . இது அடுத்த வருடம் ஜனவரி வரை நீடிக்கும் . அவிட்டதில் பிறந்தவர்கள் அடுத்த வருடம் முழுமைக்கும் அனுபவிப்பார்கள் . பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சனி சுப ஒளி தொடர்புடன் இருக்கும் பொழுது , ஜாதகத்தில் யோக தசைகள் நடக்கும் பொழுது ஏழரை சனியின் கொடுமைகள் குறையும் . அனால் நன்மைகள் இருக்காது .மாறாக சனி பாவ தொடர்புடன் இருந்து , அவ யோக தசைகள் நடக்கும்  பொழுது கடுமையான பலன்கள் இருக்கும் . இதில் என்ன பலன்கள் எப்பொழுது  நடக்கும் என்பதை வரிசைபடுத்துகிறேன் .
1. பள்ளி பருவத்தில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு அவர்களின் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாத நிலையும் , தங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் இல்லை என்ற ஏமாற்றமும் இருக்கும் . முக்கியமான கால கட்டமான பொது தேர்வு அல்லது கல்லூரி தேர்ந்து எடுக்கும் சமயத்தில் நடக்கும் ஏழரை சனி நமது மனதுக்கு பிடிக்காத இடத்தில் அல்லது துறையில் செலுத்தி மன சங்கடங்களை ஏற்படுத்துவார் .
2. கல்லூரி அல்லது 25 வயதுக்குள் வரும் ஏழரை சனியின் பொது , விரயச்சனி நேரத்தில்  ஒருவருக்கு எதிர்பாலினர் ஒருவரின்   (பெண்ணோ / ஆணோ  ) அறிமுகம் ஏற்பட்டு அவர்கள் மீது காதல் வய பட வைப்பார் . ஜென்ம சனியின் பொது அந்த காதலை  தோல்வியில் ஏற்படுத்தி ஜாதகரை சோகத்தில் மூழ்கடித்து எதிர் பாலினரை பற்றி புரிய வைப்பார் . தங்கள் வேலையை / தொழிலை நேசிக்கும் இளைனர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் தொழிலில் சரிவுகளை ஏற்படுத்தி அனுபவங்களை படிக்க வைப்பார் .
3. திருமண வயதில் இருபவர்களை விரய சனியில் திருமணத்தை நடத்தி , அதற்கு பின் வரும் ஜென்ம சனியில் மணவாழ்வின் கசப்புகளை உருவாக்கி அவர்களுக்கு பக்குவத்தை ஏற்படுத்தி தருவார் . சிலருக்கு திருமண தடையை தந்து ஜென்ம சனியின் இறுதியில் மண வாழ்வை ஏற்படுத்தி தருவார் .
4. ஒரு ஜாதகரின் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் , அவர்களுக்கு தாங்க முடியாத துன்பங்களை கொடுத்து குடும்பத்தில் சில காலம் நிம்மதி இல்லாத நிலையை ஏற்படுத்துவார் .
எல்லாம் வல்ல பரம் பொருளை எவ்வாறு அந்த நளன் மகாராஜா நாடி , சனியின் தாக்கங்களில் இருந்து விடுபட்டரோ அது போல நீங்களும் துன்பங்களில் இருந்து விலக இறைவனை வேண்டி கொள்கிறேன் .