மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்கள் கவனத்திற்கு!

239

மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்கள் கவனத்திற்கு!

வணக்கம் கடக ராசியினரே இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவு. கடந்த 2019 முதல் மிதுன ராசியினர் அனுபவித்த கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. ராசியில் ராகு இருந்து அஷ்டம சனியின் தாக்கங்கள் அனுபவித்து வந்தனர். இப்பொழுது மிதுன ராசியின் திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் அஷ்டம சனியின் மத்திம தாக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார்கள். இப்பொழுது அஷ்டம சனி மிதுன ராசியின் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு ஆரம்பித்து விட்டது. இந்த புனர்பூசம் மிதுன ராசியில் 3 பாதங்களும், கடக ராசியில் ஒரு பாதமும் உள்ளது.

இந்த கட்டுரையில் இந்த நட்சத்திரத்திற்கு என்ன பலன்கள் நடக்கும் என்று பார்ப்போம். உங்கள் ஜாதகத்தில் அஷ்டம சனியின் தாக்கங்கள் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு அழைத்து குறைந்த கட்டணத்தில் தெளிவான விளக்கங்களை பெறவும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் அஷ்டம சனி தாக்கங்கள்:

  1. கடந்த ஒரு மாதம் காலமாக இந்த நட்சத்திரம் அஷ்டம சனியின் கடும் பாதிப்புகளை உணர ஆரம்பித்து விட்டது. இதில் மிதுன ராசியினருக்கு குடும்பம் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து கொண்டு உள்ளார்கள்.  கடக ராசியினர் சில உடல்நல பாதிப்புகளும், கணவன் மனைவி உறவில் சில விரிசலையும் சந்தித்து வருகிறார்கள்.
  2. இந்த அஷ்டம சனியின் தாக்கம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் மரணம் அல்லது உடல் நலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி மனம் துன்பப்படும் நிகழ்வுகளை தரும்.
  3. ஏதேனும் வம்பு, வழக்கு, அசிங்கம், கடன், அவமானம் தரும் நிகழ்வுகளை ஏற்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தும்.
  4. தொழில் மற்றும் செய்யும் வேலையில் முன்னேற்றங்களை தடை செய்யும், தொழிலில் நஷ்டங்களையும், வேலையில் நிம்மதி இல்லாத நிலையும் ஏற்படும். பதவி பறி போகும் நிகழ்வுகளும் நடக்கும்.
  5. குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டு துக்கம் இல்லாத நிலை ஏற்படும்.
  6. மேல் சொன்ன கேடு பலன்களில் ஏதேனும் சில மட்டும் ஜாதகருக்கு  நடக்கும். ஜாதகருக்கு சொந்த ஜாதகத்தில் சனி சுப தொடர்புகளுடன் இருந்தால் இந்த கேடு பலன்கள் குறையும்.