மேஷ லக்கினத்தில் பிறந்தவரா நீங்கள்? – பகுதி 1

169

மேஷ லக்கினத்தில் பிறந்தவரா நீங்கள்? – பகுதி 1

வணக்கம் அன்பர்களே, ஜோதிடம் அறிவோம். இந்த பதிவு ஜோதிடம் மீது ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாக பதிவு செய்யபடுகிறது. மேஷம் முதல் மீனம் வரை , எந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பதை தொடர் பதிவுகளாக பதிய இருக்கிறோம்.

உங்களின் மேலான ஆதரவு தேவை என்பதை கேட்டு கொள்கிறோம். உங்கள் ஜாதகம் என்ன பலன்களை தந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிய இந்த கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் நிறைவான பலன்களை அறியவும்.

மேஷ லக்கினத்தின் சிறப்புகள்:

  1. மேஷ கால புருஷனின் முதல் வீடு, செவ்வாயின் வீடு. சர ராசி (சரம் எப்பொழுதும் இயங்கி கொண்டு இருக்கும் ராசி), நெருப்பு  ராசி, ஆண் ராசி. இந்த ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கோவம் சற்று கூடுதலாக வரும் (செவ்வாயின் நிலையை பொறுத்து).  மேஷ ராசியின் குறியீடு ஆட்டின் தலையை போன்றது. ஆடுகளை போன்று கூட்டத்துடன் இருக்க விரும்பும் லக்கினத்தில் பிறந்தவர்களின் பொது குணம்.
  2. மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் அவர்களின் லக்கினாதிபதி செவ்வாயை பிரதிபலிப்பார்கள் . இந்த ராசியில் அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை 2 பாதங்கள் கொண்டது.
  3. இந்த ராசியில் சூரியன் உச்சமாகும், செவ்வாய் ஆட்சி பலத்தையும் (மூல திரிகோண நிலையையும் 0 டிகிரி முதல் 12 டிகிரியை அடையும்), சனி நீச நிலையையும் அடையும். சந்திரன், குரு மற்றும் கேதுவுக்கு இது நட்பு வீடுகள் ஆகும். சுக்கிரன், சனி மற்றும் புதனுக்கு இது ஆகாத பகை வீடுகள் ஆகும். மேஷ ராகு பொதுவாக பெரிய தீங்குகள் செய்வது இல்லை. சுப தொடர்பில் இருக்கும் போது அதிக நல்ல பலன்கள் இருக்கும்.
  4. மேஷ லக்கின நபர்களுக்கு யோக தசைகளாக சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு தசைகள் வரும். இந்த தசைகள் வரிசையாக வரும் நபர்கள் கொடுத்து வைத்தவர்களாக திகழ்வார்கள். சுக்கிரன், புதன் மற்றும் சனி அவயோக தசைகள் ஆகும். இந்த கிரகங்கள் 3, 6, 10 மற்றும் 11 இல் நட்பு ஸ்தானத்துடன் இருக்கும் போது பெரிய தீமைகள் இருக்காது.
  5. குறிப்பாக புதன் தசை அல்லது புதன் புத்தி மேஷ லக்கின அன்பர்களுக்கு அசுப தொடர்பில் இருக்கும் போது, பெரும் துன்பங்களை தருவது நடைமுறையில் உள்ளது.  ராகு, கேதுக்கள் அவர்கள் இருக்கும் வீடு மற்றும் பார்க்கும் அல்லது இணைந்த கிரகத்தின் பலன்களை பிரதிபலிக்கும். மேஷ லக்கினத்தின் மேலும் சில நுணுக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.