ராகு எப்பொழுது புகழும் பெரும் பொருளும் கொடுப்பார்?

161

ராகு எப்பொழுது புகழும் பெரும் பொருளும் கொடுப்பார்?

 

21 ஆம் நூற்றாண்டின், டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நமக்கு தேவைகள் அதிகமாகி விட்டது. அனைவருக்கும் அதிக சம்பாதிக்க வேண்டும் அல்லது பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. புகழை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. வீட்டில் இருக்கும் அம்மாவில் இருந்து, கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் வரை யூடியூப்பில் வீடியோவை பதிவிட்டு புகழ் பெற மாட்டோமா? என்று காத்துக்கொண்டு உள்ளார்கள்.

இந்த டிஜிட்டல் உலகமான சினிமா, தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமாக ஒருவரை புகழ் பெற வைக்கும் கிரகம் ராகு, ராகு ஒரு நிழல் கிரகம். இதுவே இந்த நிழல் உலகத்தின் காரகங்களுக்கு காரணமாக அமையும். ராகு ஒருவருக்கு நல்ல நிலைமையில் சுக்கிரன் தொடர்பில் இருக்கும் பொது அவருக்கு புகழும், செல்வமும் ஒரு சேர அமையும். ராகு புகழையும், செல்வத்தையும் கொடுக்கும் அமைப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் என்ன பலன்கள் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிட கிரியை +91 9677824799 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ராகு எப்பொழுது புகழையும், பொருளையும் தருவார்?

ஒருவர் சினிமா அல்லது மீடியா துறையில் பிரபலமாக ராகு சுக்கிரன் வீடுகளில் அல்லது சுக்கிரன் இணைவில் அல்லது சுக்கிரன் பார்வையில் இருக்க வேண்டும். சுக்கிரன் தொடர்பு கொண்ட ராகு தசா சரியான வயதில் வந்து கீர்த்தி ஸ்தானம் எனும் 3 ஆம் வீடும் சுபமாக இருக்கும் பட்சத்தில் அவர் மீடியா துறையில் நடிப்பு அல்லது தொகுப்பாளராக புகழ் பெறுவார்.  ஜாதகரின் சுக்கிரன் நிலை அவரின் கலை திறமையை குறிக்கும்.

ராகுவின் சுப தொடர்பின் அளவை பொறுத்து அவர் தரும் புகழும், செலவும் இருக்கும். ராகுவுக்கு கூடுதலாக வீடு கொடுத்தவர் வலுவாக இருப்பது நல்லது. ராகுவுக்கு வீடு கொடுத்தவர் உச்சமாக இருக்கும் பொது மிக நல்ல பலன்கள் இருக்கும்.

ராகு தனித்து இயங்கும் தன்மை இல்லாதது, அதனால் தான் சுக்கிரன் தொடர்பில் உள்ள ராகு, சுக்கிரன் போலவே செயல்படும். ராகுவுக்கு குரு பார்வை இருப்பது கூடுதல் சிறப்பு, குருவின் தொடர்பு இருக்கும் பொது புகழுடன் சேர்ந்து பொருளும் சேரும். இந்த பலன்களை முழுமையாக பெற முக்கியமாக லக்கினம் வலுவாக இருக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று வேண்டி கொள்கிறேன்.