ராகு தசை கெடுக்குமா ? கொடுக்குமா ?

173
ராகு தசை என்ன செய்யும் ? கெடுக்குமா ? கொடுக்குமா ?
ஜோதிடம் மதங்களை தாண்டிய ஒரு விஞ்ஞான சாஸ்திரம் .  பூமியில் வாழும் நம்மை கட்டுப்படுத்தும் பிரபஞ்ச தொடர்புகளான  ஒளி , இருள் , ஆகாயம் எனும் ராசி கட்டங்கள்  , பூமியின் மேல் ஆளுமை செலுத்தும் முக்கிய கிரகங்கள் , பூமியில் அதிக ஒளி செலுத்தும் முக்கிய நட்சத்திர கூட்டங்களை  கொண்டு இங்கு நடக்கும் நிகழ்வுகளை ஆராயும் ஒரு அபூர்வ சாஸ்திரம் . இதில் பூமியை கட்டுப்படுத்தும் இருளுக்கு தான் சாயா கிரகங்கள் எனும் பெயரை கொடுத்து உள்ளார்கள் நம் ஞானிகள் . அதாவது விஞ்ஞானிகள் ஒரு விஷயத்தை ஆராயும் போது , எடுத்துக்காட்டாக புவியீர்ப்பு விசையை ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று எடுத்து கொண்டார்கள் என்றால் அந்த விசையை கட்டுப்படுத்தும் காரணிகளை கொண்டு சமன்பாடு அமைப்பார்கள் . அது போலவே பூமியின் நிகழ்வுகளில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் பூமியின் நிழலும் , சந்திரனின் நிழலும் தான் இந்த ராகு கேது எனும் சாயா கிரகங்கள் . ஜோதிடம் ஒளி ( சுப தொடர்ப்பு ) மற்றும் இருள் ( பாவ தொடர்பு ) எனும் அடிப்படியில் இருப்பதால் , இந்த சாயா கிரகங்கள் பூமியில் மற்றும் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகம் . உங்கள் ஜாதகத்தில் ராகு என்ன செய்யும் , ராகு தசை என்ன பலன்களை தரும் என்பதை அறிய நமது கட்டுரையின்  ஜோதிட ஆசிரியர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்துடன் தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள் .
ராகு மற்றும் கேது இரண்டுமே நிழல் கிரகங்கள் என்று சொல்லப்பட்டாலும் , இரண்டும் எதிர் எதிர் தன்மை கொண்டவை . பொதுவாக இந்த இரண்டு நிழலும் 180 டிகிரி இடைவெளியில் பின் நோக்கி செல்பவை . கிரகங்கள் முன் நோக்கி தங்கள் சுற்று வட்ட பாதையில் செல்லும் பொது , இந்த நிழல் கிரகங்கள் அதற்கு எதிர் திசையில் செல்லும் . ராகு மற்றும் கேதுவின் அடிப்படை தன்மைகள் வேறு . ராகு தன்னுடன் நெருங்கும் கிரகத்தின் வலுவை இழக்க செய்யும் , கேது தன்னுடன் நெருங்கும் கிரகத்தின் தன்மையை மாற்றி அமைக்க செய்யும் . ராகு கேதுக்களுக்கு தனியாக காரகத்துவங்கள் கிடையாது , இவை தான் இருக்கும் வீட்டின் அதிபதி போல , தன்னை பார்க்கும் கிரகங்களை போல , தான் இணைந்து இருக்கும் கிரகத்தை போலவும் செயல் பட கூடியது . ஒரு ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அதிக கிரகங்களின் தொடர்பு ஏற்படும் போது நமக்கு பலன் எடுப்பது பெரிய தலைவலியாக இருக்கும் . இந்த பதிவில் ராகு தசை என்ன செய்யும் என்று பார்ப்போம் .
1. ராகு பொதுவாக சுப ஒளி தொடர்பு உடன் , சுப கிரகங்களின் வீட்டில் இருந்து . ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலையில் இருப்பின் . ராகு தசை வீதியில் இருப்பவரை , குபேராக மாற்றும் தகுதி படைத்தது . இதில் ராகுவின் சுப ஒளி தொடர்பு குறைய குறைய பலன்கள் குறையும் .
2. ராகு பொதுவாக தான் இருக்கும் வீட்டின் உயிர் தன்மை காரகங்களை கெடுத்து பலன் தரும் , பொதுவாக ராகு 3 வீட்டில் இருந்தால் சகோதரின் உடல் நிலை மற்றும் நமக்கும் அவருக்கும் இருக்கும் உறவை கெடுத்து பலன் தரும் . சுப ஒளி தொடர்பு இருப்பின் இதன் தாக்கங்கள் குறையும் .
3. ராகு (சனி , செவ்வாய் போன்ற) பாவ கிரங்கங்களின் எதோ ஒரு வீட்டில் இருந்து கொண்டு , மற்றோரு பாவ கிரகங்களான சனி அல்லது செவ்வாயின் இணைவில் இருப்பது அல்லது பார்வை பெறுவது . இந்த மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருப்பது போன்ற நிலை ஏற்படுமாயின் அந்த வீடு முழு பலத்தை இழந்து ராகு அல்லது அந்த பாவ கிரகங்களின் தசையில் பெரும் துன்பம் ஏற்படும் . பெரும் செல்வந்தர்கள் தெருவுக்கு வருவதும் , பெரிய அரசியவாதிகள் அல்லது பிரபலங்கள் சிறைக்கு செல்வதும் இதன் அமைப்பு ஆகும் .
4. ராகு பொதுவாக  3 , 11 ஆம் வீடுகளில் இருப்பது பாதுகாப்பான தன்மை , ஆனால் பாவ தொடர்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் .அதே போல ராகுவுடன் நெருக்கமாக இணையும் கிரகத்தின் வலு குறையும் அந்த கிரகத்தின் பலன்கள் அந்த கிரகத்தின் தசையில் கிடைக்காது . ராகு தசையில் அந்த பலன்கள் கிடைக்கும் .
5. மிதுன லக்கினம் கொண்டவர்களுக்கு ராகு எவ்வளவு மோசமாக இருந்தாலும்  தனது  தசையில்  பெரிய கெடுதல்களை செய்வதில்லை , சுப தொடர்ப்புடன் இருக்கும் பொது மிக நல்ல பலன்கள் இருக்கும் .
அடுத்த பதிவில் கேது என்ன செய்யும் மற்றும் அதன் தசையில் என்ன நடக்கும் என்பதை காண்போம் . அனைவருக்கும் பரம் பொருளின் அருளால் எல்லா வளங்களும் கிடைக்கட்டும் .