ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன்?

73

ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன்?

மேஷ ராசியில் சனி இருந்தால்:

பிறரிடம் வீண் சண்டைக்கு செல்பவர்களாக இருப்பார்கள் அதிகமான நபர்கள் இடம் தீய பழக்கவழக்கங்கள் நிறைந்து காணப்படும் பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு

ரிஷப ராசியில் சனி இருந்தால்:

திருக்கோயில் தர்ம ஸ்தாபனங்கள் நடத்துபவராக இருப்பார் கடின உழைப்பால் செல்வங்களை சேர்ந்தவராக இருப்பார் தொழில்ரீதியான நல்ல வளர்ச்சியை அடைந்தவராக இருப்பார்

மிதுன ராசியில் சனி இருந்தால்:

தர்மத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமாட்டார்கள் இவர்கள் சமூகத்தில் கெட்ட பெயர் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு பெரியோர்களின் பேச்சைக் கேட்காத அவர்கள் பல தோல்விகளைச் சந்திப்பார்கள்

கடக ராசியில் சனி இருந்தால்:

பிள்ளைப் பாக்கியம் அதிகமாக இருக்கும் இவர்களுக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் ஏற்படும் பெற்றோர்கள் ஆசீர்வாதம் இருப்பவர்கள் மட்டும் சிறந்து விளங்குவார்கள் சுயமாக முடிவு எடுப்பவர்கள் ஆக இருந்தால் வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை சந்திப்பார்கள் தோல்விகளைச் சந்திப்பார்கள்

சிம்ம ராசியில் சனி இருந்தால்:

தான் பெற்ற பிள்ளைகள் அதிக துன்பங்களை சந்திக்கிறார்கள் எழுத்து துறை மற்றும் கற்பனை துறைகளில் சிறந்து விளங்குவார்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் பொதுத்துறையில் பேசப்படுபவர் களாக இருப்பார்கள் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்

கன்னி ராசியில் சனி இருந்தால்:

முன்கோபம் மிகுந்தவர்களாக இருப்பார்கள் வறுமையுடன் அதிகம் போராடுபவர்கள் ஆக இருப்பார்கள் ஏதேனும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டார்கள்

துலாம் ராசியில் சனி இருந்தால்:

பெண்களால் அதிக யோகங்களை சந்திப்பார்கள் மிகுந்த செல்வம் உடையவர்களாக இருப்பார்கள் தொழில் ரீதியாக வெற்றியும் மிகுந்த லாபமும் அடைவார்கள் நட்பு கிரகங்கள் இணைந்திருக்கும் ஆனார் பெயர் புகழ் பெற்றுத் திகழ்வார்

விருச்சிகம் ராசியில் சனி இருந்தால்:

பொதுவாக குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள் தெளிவான முடிவு எடுத்த பின்பு மிகவும் நிலையான மனநிலையுடன் இருப்பார்கள் இவர்கள் ஏதேனும் ஸ்தாபனத்தை நிர்வகிப்பவர்கள் ஆக இருப்பார்கள்

தனுசு ராசியில் சனி இருந்தால்:

சிறந்த ராஜதந்திர அறிவு மிக்கவராக இருப்பார் எந்த செயலிலும் போராடி வெற்றியை அடைந்தே தீருவார் பல நாடுகள் சென்று பல தீர செயல்களை செய்பவராக இருப்பார்

மகர ராசியில் சனி இருந்தால்:

பழிவாங்கும் எண்ணம் நிறைந்தவராக இருப்பார் எந்த செயலிலும் விடாமுயற்சியுடன் வெற்றியை அடைந்தே தீருவார் மிகப் பெரிய தொழிலதிபர்கள் ஆகும் பேரறிஞர்கள் இவர்கள் என பெயர் எடுப்பார்கள் சகல போகங்களையும் அனுபவிப்பவர் ஆக இருப்பார்

கும்பம் ராசியில் சனி இருந்தால்:

நிறைய பொருள்கள் இவரை தானாக தேடிவரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார் இவர் ஆன்மீக அறிவு மிகுந்தவராக காணப்படுவார் கடவுளின் அருளும் ஆசியும் இவருக்கு உண்டு தைரியமும் அதீத முயற்சி செயல்களில் காணப்படும்

மீனம் ராசியில் சனி இருந்தால்:

அரசியல் சார்ந்த செயல்களில் தொடர்புகள் மிகுந்து காணப் படுவார்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் சமூகங்களில் உயர் பதவிகளில் மதிக்கத் தகுந்தவர் ஆக இருப்பார் பலபேர் பயந்து மதிக்கத் தக்க அளவில் இருப்பார்.