ராஜநாகம் கடிப்பது போன்று கனவு வந்தால் இதுதான் நடக்குமா?

69

ராஜநாகம் கடிப்பது போன்று கனவு வந்தால் இதுதான் நடக்குமா?

அனைவருக்கும் கனவு வருவது என்று இயல்பான ஒன்று தான். சில கனவுகள் ஒரு சில விஷயங்களை நினைவுபடுத்துவதாக இருக்கும். இன்னும் ஒரு சில கனவுகள் நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். தூங்கி எழுந்து பார்க்கும் போது சில கனவுகள் நினைவில் இருக்கும். ஒரு சில கனவுகள் நினைவில் இருப்பதில்லை. தூங்கி எழுந்ததும் நம் நினைவில் இருக்கும் கனவுகளுக்கு சில பலன்கள் உண்டு. அது என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

தண்ணீர் காண்பது போன்று கனவு வந்தால் – நினைத்தது நடக்கும்.

தண்ணீர் குடிப்பது அல்லது யாருக்கேனும் தண்ணீர் கொடுப்பது போன்று கனவு வந்தால் – உங்களது ஆசைகள் நிறைவேறும் என்று அர்த்தம்.

திருநீறு வந்தால் – சுப பலன்கள், சுப காரியங்கள், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழப் போகிறது என்று அர்த்தம்.

கடல் பார்ப்பது போன்று கனவு வந்தால் – மன அமைதி தேவைப்படுகிறது என்பதை காட்டுகிறது.

ராஜநாகம் கடிப்பது போன்று கனவு வந்தால் – உங்களது பொறுப்புகள் குறையும், பாரம் தீரும்.

மாடு கன்று ஈனுவது போல் கனவு வந்தால் – வெற்றி கிடைக்கும்.

மாமிசம் சாப்பிடுவது போன்று கனவு வந்தால் – ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதை காட்டுகிறது.

குளிப்பது போன்று கனவு வந்தால் – மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கும் என்று அர்த்தம்.

தற்கொலை செய்து கொள்வது போன்று கனவு வந்தால் – உங்களது பிரச்சனைகள் தீரும். உங்களுக்கு இனிமேல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரவே வராது.

முன்னாள் காதலி அல்லது முன்னாள் மனைவியுடன் உடலுறவு கொள்வது போன்று கனவு வந்தால் – அந்த உறவு முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தம்.

காதலை புரபோஸ் செய்வது போன்று கனவு வந்தால் – நினைப்பது, நடப்பது எல்லாமே வெற்றியை கொடுக்கும்.

கர்ப்பமாக இருப்பது போன்று கனவு வந்தால் – நீங்கள் வளர்ச்சி அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

யார் என்றே தெரியாதவர்களுடன் உடலுறுவு வைப்பது போன்று கனவு வந்தால் – உங்களது வாழ்க்கையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு முன்னேற்றம் கிடைக்கும் என்று அர்த்தம்.

ஒரே பாலினம் கொண்டவர்களுடன் உறவு கொள்வது போன்று கனவு வந்தால் – நட்புக்கு ஆபத்து என்று அர்த்தம்.

உதட்டில் லிப்கிஸ் கொடுப்பது போன்று கனவு வந்தால் – எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், போன்றோர் இறந்தால், சில நேரங்களில் நமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை படாத பாடு படுத்திவிடும்.

இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும்.

உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.

இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.

நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.

இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.

நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.

இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.

உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள்.

நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.