வள்ளலாரின் பாடல்களை படிக்க வேண்டும்!

68
இன்றைய ராசிபலன்

வள்ளலாரின் பாடல்களை படிக்க வேண்டும்!

நவம்பர் 25 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (25-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது. தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. அளவான முதலீடு தேவை. அனுசரித்து செல்ல வேண்டும். பொறுமையும், நிதானமும் தேவை.

ரிஷபம்: ஏராளமான நன்மைகள் உண்டாகும். புகழ் பெறக் கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குழப்பங்கள் தீர விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.

மிதுனம்: உடல் நலனில் அக்கறை தேவை. தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. சகோதர உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. வாகனங்களை பழுதுநீக்கி பயன்படுத்த வேண்டும்.

கடகம்: தன வரவு வரும். ஆன்லைன் பிஸினஸில் லாபம் உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்: மிகப்பெரிய விசேஷம். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பிஸினஸில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உயர்வீர்கள். சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை.

கன்னி: காரிய வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவு தருவார்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிஸினஸில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டு. காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

விருச்சிகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வள்ளலாரின் பாடல்களை படிக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

தனுசு: வேலை மாற்றம் செய்வீர்கள். மாற்றங்கள் உருவாகும் ஒரு நாள். பிஸினஸில் முதலீடு அதிகரிக்கும். வருமானம் கூடும்.

மகரம்: பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்போன் வாங்கும் யோகம் உண்டாகும். கல்யாணம் கூடி வரும் அமைப்பு உருவாகும்.

கும்பம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிஸினஸில் யோசனை வெற்றி பெறும்.

மீனம்: மிகப்பெரிய யோகம் உண்டாகும். மாமனாரால் நன்மை உண்டு. ஏராளமான நன்மைகள் உண்டாகும். வெளிநாட்டு யோகம் கூடி வரும். யோகங்கள் தேடி வரக் கூடிய நாள்.