வித்தை ஞானம் தரும் புதன் – புதன் தசையின் பலன்கள்!

95

வித்தை ஞானம் தரும் புதன் – புதன் தசையின் பலன்கள்!

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள், ஒருவர் என்ன தான் பட்ட மேற்படிப்பு படித்து இருந்தாலும் வேலைக்கு சென்றால் அந்த வேலைக்கு தேவையான அனுபவ அறிவை எட்டினால் தான் அவரால் வேளையில் சிறந்து விளங்க முடியும். புதன் வலுத்தால் அவர் புத்திசாலியாக  இருப்பார், ஒரு சிலர் புதன் வலுத்து படிப்பறிவு இல்லாவிட்டாலும் அனுபவ அறிவு மிக்கவராக இருப்பார்கள். ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து தொழில்களின் நுட்ப திறமையை கொடுக்கும் வல்லமை புதனுக்கு உண்டு.

ஆய கலைகள் 64 என்று முன்னோர்கள் சொல்வார்கள் அந்த ஆய கலைகள் மட்டும் இல்லை இந்த டிஜிட்டல் யுகத்தில் உள்ள சாப்ட்வேர், ஹாக்கிங், தகவல் தொழில் நுட்பம் போன்ற நவீன் கலைகளுக்கும் அவரே காரண கர்த்தா. இந்த பதிவில் புதனின் காரகத்துவங்கள், புதன் தசா என்ன செய்யும் என்பதையும் பார்ப்போம். உங்கள் ஜாதகத்தில் என்ன பலன்கள் நடந்து கொண்டு இருப்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் தெளிவான பலன்களை பெறுங்கள்.

புதனின் காரகத்துவங்கள்:

புதன் வலுத்தவர் இந்த துறைகளில் ஆதிக்கம் செலுத்துவார் கணிதம், திறமையான பேச்சு, வியாபாரம், புலனாய்வு, அதி  புத்திசாலித்தனம், ஆராய்ச்சி, ஜோதிடம், கல்வி, கவிதை, எழுத்து, பிரிண்டிங் பிரஸ், நல்ல ஆலோசனைகளை சொல்லுதல், உள் அலங்காரம், மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, அஞ்சல், கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகள் ஆடிட்டர், நகைச்சுவை நடிப்பு, விஞ்ஞானம், தர்க்க வாதம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார். வாக்கு சாதுரியம், நிர்வாக திறமை போன்ற பண்புகளையும் புதனே வழங்குகிறார். ஏற்றுக்கொண்ட எந்தத் துறையிலும் நிபுணத்துவத்தை வழங்குபவர் புதன்.

புதன் தசா என்ன செய்யும்:

எந்த ஒரு கிரகமும் நட்பு நிலைக்கு கீழ் சென்றால் தனது சுய இயல்புகளை தரும் தன்மை குறையும் என்பது புதனுக்கும் பொருந்தும். புதன் சுப தொடர்புகளுடன் இருப்பவர் புதன் தசையில் நல்ல பலன்களையும், அசுப தொடர்புகளில் இருப்பவர்களுக்கு மாறான பலன்களையும் தருவார்.

புதன் தனித்து உச்சம் அல்லது ஆட்சி பெறுவது நல்லது, இந்த நிலையில் மற்ற எந்த கிரகத்தின் பார்வையும் இல்லாத நிலையில் இருப்பதும் நல்லது. தனித்த புதன் மட்டுமே அவரின் சுய இயல்பு பலன்களை கொண்டு இருப்பார்.

புதன் நீசமாவது நல்லது அல்ல. ஜாதகருக்கு அவர் எந்த லக்னமாக இருந்தாலும், புதன் நீச பங்கம் ஆக அல்லது குருவுடன் பரிவர்த்தனை அல்லது பௌர்ணமி சந்திரனின் பார்வை இருப்பின் நீச பலன்களை இழந்து வலு பெரும். இதே போல் புதன் உச்சம் ஆகி வக்கிரம் ஆவது அவரின் பலவீனத்தை குறிக்கும்.

புதன் தசா மகர, கும்ப, ரிஷப, துலாம், மிதுனம் மற்றும் கன்னி ஆகிய 6 லக்கினங்களில் பிறந்தவருக்கு பாவ தொடர்பு இல்லாத பட்சத்தில் நல்ல பலன்களை தரும். புதன் சூரியனை நெருங்கிய நண்பராக கருதுவதால் சிம்ம லக்னத்திற்கு நல்ல பலன்களை செய்கிறார் . புதன் சந்திரன் மற்றும் செவ்வாயை எதிரியாக கருதுவதால் கடக, மேஷ, விருச்சிக லக்கினத்திற்கு பெரும்பாலும் நல்ல பலன்களை தருவது இல்லை. 3, 6, 10, 11 ஆம் வீடுகளில் சுப தொடர்புகளில் இருக்கும் போது கேடு பலன்களை குறைத்து கொள்கிறார்.

புதன் குருவின் லக்கினத்திற்கு தனுசு மற்றும் மீனத்துக்கு மத்திம பலன்களை தருகிறார். இந்த தனுசு மற்றும் மீனத்துக்கு 7 இல் தனித்து ஆட்சி அல்லது உச்சம் பெற்று (சுப தொடர்புகள் இருப்பின்) வேறு எந்த கிரகத்தின் தொடர்பையும் பெறாத போது பாதகாதிபதி எனும் ஸ்தானத்தை தனது தசையில் அடைந்து ஜாதகருக்கு பாதகம் செய்யும் இயல்பை தனது தசையில் அடைவார். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிப்பார்.