ஸ்ரீராமஜெயம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்!

76
இன்றைய ராசிபலன்

ஸ்ரீராமஜெயம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்! இன்றைய ராசிபலன்

ஜனவரி 09 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (09-01-2023) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அதிர்ஷ்டமான நாள். உயர்கல்வி முயற்சி வெற்றி பெறும். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஏற்றுமதி தொழிலுக்கு முயற்சிக்கலாம்.

ரிஷபம்: பணப்புழக்கம் நிறைந்த நாள். பொருளாதார ரீதியாக குழப்பம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயம் இருக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: தன வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பொருளாதார உயர்வு வரும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் உங்களது செயல்பாடு வெற்றி தரும்.

கடகம்: அற்புதமான நாள். வேலை வாய்ப்பு தொடர்பான குழப்பம் இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் நல பாதிப்பு வரலாம்.

சிம்மம்: மிக முன்னேற்றமான நாள். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். நல்ல பதவிகள் கிடைக்கும். தன லாபம் உண்டு. பார்ட் டைம் வேலை கூட கிடைக்கும்.

கன்னி: அதிர்ஷ்டமான நாள். நல்லவர்களின் துணை இருக்கும். சில நேரங்களில் பணத்தினால் பிரச்சனை வரும். கல்வி வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.

துலாம்: விநாயகர் வழிபாடு வெற்றி தரும். வம்பு, வழக்குகளில் இருந்து ஒதுங்கி செல்ல வேண்டும். கல்வியில் முன்னேற்றம் தரும். உடல் நலனில் அக்கறை தேவை.

விருச்சிகம்: மேன்மைகள் நிறைந்த ஒரு நாள். பெண்களுக்கு திருமணம் குறித்த நல்ல செய்திகள் வரும். யாரையும் விமர்சிக்க கூடாது. நல்ல பதவிகள் தேடி வரும். பட்டங்கள் தேடி வரும் நல்ல நாள்.

தனுசு: நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்ல நாள். ஸ்ரீ ராம ஜெயம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். நினைத்த காரியங்களில் வெற்றி பெறும். திருமணம் தொடர்பான செய்திகள் வரும். குடும்பத்தில் குதூகலமான செய்தி உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்புகள் பெருகும்.

மகரம்: திருமணம் குறித்த நல்ல தகவல் வரும். உழைப்பை பிரதானமாக கொண்டால் உயரலாம். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிஸினஸ் முதலீடு பெருகும்.

கும்பம்: எதிலும் கையெழுத்திடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. கழுத்து வலி, முதுகு தண்டுவட பிரச்சனை வரலாம். தெய்வ நம்பிக்கை உங்களை காப்பாற்றும்.

மீனம்: சந்தோஷமான நாள். காதல் விஷங்கள் திருமணத்தில் முடியும். அன்பிற்குரியவர்களை சந்திப்பீர்கள். தடைகள் விலகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு மிக மகிழ்ச்சியான நாள்.